December 6, 2025, 2:38 PM
29 C
Chennai

கார்சியாவுக்கு ஒரு கடிதம்

thought provoking - 2025

அண்மையில் வேதாந்த கேசரி ஆங்கில இதழில் படித்த கட்டுரையின் தலைப்பு இது.

கார்சியாவுக்கு ஒரு கடிதம் என்பது ஒரு குறியீடு. “வெட்டிக்கொண்டு வா என்றால் கட்டிக்கொண்டு வருவான்” என்பார்களே, அதைவிடப் பன்மடங்கு சிறப்பான பணித் திறன்.

அமெரிக்காவுக்கும் ஸ்பெய்ன் தேசத்துக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்தது. அமெரிக்க அதிபருக்கு க்யூபா நாட்டில் உள்ள ஓர் ஊடுருவல்காரனுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது. அவசியம். அவசரம். ஆனால் அந்த கார்சியா க்யூபாவில் எங்கு இருக்கிறான் போன்ற எந்த விவரமும் தெரியாது. என்ன செய்வது?

அதிபரின் காதில் ஒருவர் கிசுகிசுத்தார். அமெரிக்க ராணுவத்தில் உள்ள ரோவான் என்பவர் மட்டுமே இதைச் சாதிக்க வல்லவர்.

ரோவானைத் தருவித்து அதிபர் தேவையைச் சொன்னார்.

மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான் என்று இப்படிச் சொன்ணால் என்ன செய்வது?
க்யூபாவில் அவருக்கு நெருக்கமானவர் யார் என்று ஒரு பெயராவது தெரியுமா?
அவர் சார்ந்த உளவு நிறுவனத்தின் பெயர் என்ன?
உத்தேசமாக எந்தப் பகுதியில் இருப்பார் என்றாவது சொல்ல முடியுமா?
என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பவில்லை.

கடிதத்தை வாங்கி, தண்ணீர் படியாத ஒரு உறையில் இட்டு சீல் வைத்துக்கொண்டு, மார்பில் இறுக்கிக் கட்டிக்கொண்டு புறப்பட்டார். திறந்த தோணியில் பயணித்து, யாருக்கும் தெரியாமல் க்யூபாவின் காட்டுப்பகுதிக்குள் தேடி அலைந்து கார்சியாவைச் சந்தித்துக் கடிதத்தைக் கொடுத்து விட்டு, மூன்று வாரங்கள் அதிகாரிகளின் கண்ணில் மண்ணைத்தூவி விட்டுச் சுற்றி வேறு வழியாக க்யூபாவை விட்டு விலகி வெளியே வந்தார். பசியா? தாகமா? தூக்கமா? யாருக்குத் தெரியும்?

இத்தகைய செயல்பாட்டின் குறியீடுதான் கார்சியாவுக்கு ஒரு கடிதம்.

இதற்கு நேர்மாறான ஒரு செயல்பாட்டையும் கட்டுரை குறிப்பிடுகிறது.

தலைவர் ஒரு “எக்ஸ்” என்கிற பணியாளரைக் கூப்பிட்டு, “என்சைக்ளோபீடியாவிலிருந்து, கரஸ்கோவ் என்பவரைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதிக்கொண்டு உடனே வா” என்கிறார்.
எக்ஸ் கேட்பது:
எந்த என்சைக்ளோபீடியா?
எங்கிருக்கும்.?
நூலகர் விடுப்பில் இருக்கிறாரே?
அவர் இல்லாதபோது புத்தகத்தை எடுத்தால் பிரச்சினை ஆகி விடுமே?
ஏற்கனவே எங்கள் துறைக்கும் அவரது துறைக்கும் ஆயிரத்தெட்டு பிரச்சினை இருக்கிறது..
அது சரி,இந்த கரஸ்கோவ் எந்த நாட்டைச் சேர்ந்தவர்? எந்த்த் துறையில் வல்லவர்?
குறிப்பெடுப்பதெல்லாம் சார்லசுடைய வேலையாயிற்றே? என் வேலை இல்லையே?

இத்தனைக்கும் தலைவர் பொறுமையாக பதில் சொல்கிறார்.

எக்ஸ் அரைமணி நேரம் யார் யாரையோ உதவிக்கு வைத்துக்கொண்டு தேடி அலைந்து விட்டு வந்து, ”கரஸ்கோவ் என்று யாருமே இல்லை சார்” என்று பதில் சொல்கிறார்.

தலைவர் புன்னகைக்கிறார்.
கரஸ்கோவை சி என்ற முதல் எழுத்தைக்கொண்டு தேட வேண்டும்; கே யில் அல்ல என்று சொல்ல அவர் மெனக்கெடவில்லை.
நாம் தலைவராக இருந்தால் ஒரு பணிக்குத் தேர்ந்தெடுப்பது ரோவான் போன்றவரையா? எக்ஸ் போன்றவரையா?

நாம் பணியாளராக இருந்தால் ரோவான் போல இருப்போமா? எக்ஸ் போல இருப்போமா?

  • வேங்கட ரமணி

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories