spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்ஐந்து அதிசயங்களைக் கொண்ட கோவில்!

ஐந்து அதிசயங்களைக் கொண்ட கோவில்!

- Advertisement -
pattiswarar

பட்டீஸ்வரர் !!! பேரூர்

ஐந்து அதிசயங்களை உள்ள‍டங்கிய ஆயிரமாண்டு ஆலயம் ஒன்று உள்ள‍து.

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து “பேரூர் ” என்னும் பாடல்பெற்ற‍ ஸ்தலம். நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கு “நடராஜப்பெருமான்” ஆனந்த தாண்டவம் ஆடியபோது . . . அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.

இக்கோவிலில் ஐந்து அதிசயங்கள் எது என்றால்,.”இறவாத “பனை”, “பிறவாத புளி,” “புழுக்காத சாணம்,” “எலும்பு கல்லாவது,” “வலதுகாதுமேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து.” “இதுதான் அந்த அதிசயங்கள்”

இறவாத பனை:-

பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம். இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத வியாதியெல்லாம் தீரும் என்கிறார்கள். இது தான் “இறவாத பனை”

பிறவாத புளி:-

அடுத்து “பிறவாதபுளி,” என்றுபோற்ற‍ப்படும் “புளியமரம்” இங்கு இருக்கிறது. இந்த “புளியமரத்தின்” கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லையாம். “புளியம்பழத்தின்” கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்பதற்காக விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். “முளைக்க‍வே இல்லை.” இந்த “புளியமரம்” இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍தாம். அதனால் “பிறவாத புளி “என்று அழைக்கிறார்கள்.

புழுக்காத சாணம்,:

மூன்றாவதாக புழுக்காத “சாணம்,” கோயில் இருக்கிற “பேரூர்” எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் . . .ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் “சாணம் ” மண்ணில் கிடந்தால் . . . எத்த‍னை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்.

மனித எலும்புகள் கல்லாவது:-

அடுத்து “மனித எலும்புகள்” கல்லாவது. இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை . . .இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்களாம். அப்ப‍டி ஆற்றில் விடப்படுகிற “எலும்புகள் “சிறிது காலத்தில் “கற்களாக உருமாறி” கண்டெடுக்க‍ப்படுகிறதாம். அதுதான்” பட்டீஸ்வரரின்” திருவருள்.

த‌மது வலது “காதை” மேல் நோக்கி வைத்த‍படி மரணிப்ப‍து:-

ஐந்தாவதாக “பேரூரில்” மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது “வலது காதை” மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயமும் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற “பட்டீஸ்வரர்,” . . .இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார். ஆனால் இவரின் வரலாறு நமக்கு ஆச்ச‍ரியத்தைத் தருகின்றது.

முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்ததாம். அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும் . அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியுமாம்.

இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும்போது கிடைத்த‍வர்தான் நமது “பட்டீஸ்வரர்.”கிடைக்கும்போதும் அதிசயத்துடன் கிடைத்த‍வர் இவர்.

இவரின் திருமேனியில் தலையில் ஐந்து தலைப்பாம்பு படமெடுத்த‍ நிலை, . மார்பில் பாம்பின் பூணூல், தலையில் அழகழகாய் சடைக்கொத்துக்கள், சடைகளுக்கு அரணாய் இருப்ப‍துபோல் கங்கை, அன்ன‍மும், பன்றியுமாய் பிரம்மா, விஷ்ணு அடிமுடி தேடிய அடையாளங்கள்,

இவைகளோடு ” பட்டீஸ்ரர்” தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும், கொம்பு முட்டிய தழும்பும் காணப்படுகின்றன.இதையெல்லாம் பார்த்த‍ மக்க‍ள் பரவசத்துடன் வழிபட ஆரம்பித் திருக்கிறார்கள். இவர் இருக்கும் பின்புறம் பன்னீர் மரங்கள் பன்னீர் பூக்க‍ளைச் சொறிந்து கொண்டிருக்கின்றன.

ஒரு முறை மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான் மன்ன‍ன் “”திப்பு சுல்தான்.”” இந்தக் கோயில் . . .
அதிசயங்களை எல்லாம் பார்க்க‍ வந்தவனுக்கு மீண்டும் ஒரு அதிசயத்த இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். ஆம் இறைவன் குடியிருக்கும் “சிவலிங்கம்” அடிக்க‍டி அசையும் என்று, . . .இதை நம்பாமல் “சிவாலயத்தின் ” மீது கைவைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் “திப்பு சுல்தான்”

*அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன. நெருப்பின்மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி கண்களில் கண்ணீர் மல்க கை தொழுது “பட்டீஸ்வரரிடம்” தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான்.கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான்.

இவனைப்போன்றே “ஹைதர் அலியும் ” நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.இக்கோயிலின் “ஸ்தல விருட்சம் அரச மரமாகும்.” இங்குள்ள‍ அம்ம‍னின் பெயர் “”பச்சை நாயகியாகும்.”” “”பச்சை நிறமாகிய மரகதக் கல்லில்” அன்னை எழில் ஓவியமாக எழுந்தருளியிருக்கிறாள்.

அன்னையின் அன்புமுகத் தைப்பார்த்து கொண்டேயி ருக்க‍லாம். அவ்வ‍ளவு அழகு, வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் அன்னை கற்பக விருட்சமாய் காட்சி தருகின்றாள். *இவளின் ஆலயத்தின் முன்பு சிங்கமொன்று சிலை வடிவில் காட்சித் தருகின்றது.

அத‌ன் வாயினுள் உருண்டைக் கல்லொன்று உருளுகின்றது. அற்புதமாக கலை நுட்பத்துடன் கண்டோர் வியக்கும் வண்ண‍ம் சிங்கத்தின் சிலை உருவாக்க‍ப்பட்டுள்ள‍து. ஒரே கல்லில் செதுக்க‍ப்பட்ட‍ சுழல் தாமரை, நான்குபுறமும் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள்.

இதுபோன்ற ஏராளமான சிற்பங்கள் ஆலயத்தி வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ன. *குறிப்பாக கோயிலின் வட பக்க‍ம் உள்ள‍ பெரிய மண்டபம் 94 அடி நீளமும் 38 அடி அகலமும் உடையது. இம்மண்டபத்தை 16 அடி உயரமுள்ள‍ 36 பெரிய கல் தூண்கள் தாங்கி நிற்கின்றன.

சிற்பங்களால் வடிவமைக்க‍ப்பட்டுள்ள‍ இக்க‍ல் தூண்கள் தாங்கி நிற்பது பெரிய மண்டபத்தை மட்டும் அல்ல‍, . . .தமிழனின் புகழையும் தான் என்று நாம் எண்ணும் போதே பெருமையால் நமது நெஞ்சு நிமிர்கின்றது.

மேலும் கோயிலின் வடமேற்கில் பிரம்ம‍குண்ட விபூதி எனப்படும் திருநீறுமேடு இன்றும் காணப்படுகிறது.

அருள் நிரம்பிய இந்த ஆலயத் தைப் பஞ்சபாண்டவர்களும், பரசுராமரும் காமதேனு,
வியாக்யபாதர், பதஞ்சலி, காலவரிஷி, கோமுனி, பட்டிமுனி , போன்றவர்களும் வணங்கி அருள் பெற்றுள்ளனர்.

அருணகிரி நாதரால் பாடல் பெற்றுள்ள‍ முருகன் பழனியில் உள்ள‍தை போன்றே மேற்கு நோக்கி தண்டபானித் தெய்வமாய் பக்தர்களுக்கு காட்சி தருகின்றான்.நால்வரில் ஒருவராகிய “சுந்தரர், “இங்குள்ள‍ “பட்டீஸ்வர்ரை” வணங்க வர வேண்டும் என்று நினைக்கிறாராம்.

எப்போதுமே “சுந்தரரிடம்” ஒரு நல்ல‍ குணம் உண்டு. எந்த ஊர்சென்றாலும் வழிச்செலவுக்கு இறைவனிடம் காசு கேட்பார். ஏன் என்றால், இவர் இறைவனின் தோழன் அல்ல‍வா! இறைவனும் இவர் சொல்லைத் தட்டாது பணம் கொடுப்பாராம்.

செல்வ செழிப்போடு இருந்த “ஈசனுக்கே” ஒருமுறை பணம் தட்டுப்பாடாம். “சுந்தரர் ” வந்தால், பணம் கேட்பானே என்ன‍ செய்வது என்று யோசித்த” பட்டீஸ்வரர்”
“சுந்தரரிடமிருந்து” தப்பித்துக் கொள்வதற்காக நிலத்தில் நாற்றும் நடும் கூலி தொழிலாளியாய், “பச்சையம்ம‍னுடன்” சேர்ந்து நாற்று நடும்போது “சுந்தரர்” பார்த்து விடுகின்றார்.

அவை அழைத்து வந்து ஆட வைக்கிறாராம்.அவரிடமிருந்து ஒரு பாட்டும் வருகின்றது.*அந்த அற்புதமான பாட்டைப் பார்ப்போம்:-
~~~

பாரூரும் அரவு அல்குல அமைநங்கை அவள்
பங்கன் பைங்கண் ஏற்ற‍ன்
ஊர் ஊரான் தருமனார் தமர் செக்கில்
இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கொங்கில் ஆணி காஞ்சி வாய்ப்
பேரூர்ப் பெருமானைப் புலியூர்ச்
சிற்ற‍ம்பலத்தே பெற்றாம் அன்றே!

**சுந்தரர்க்காக அம்பலத்தில் ஆடினான் “இறைவன்” அதைக்கண்டு மகிழ்ந்து பாடினார் “சுந்தரர்.””சுந்தரர்” பாடிய “இறைவனை” மட்டுமல்லாமல் நம்மையும் மகிழ்விக்கின்றது.”பேரூரில் இறைவனும் இறைவியும் “” நடவு நட்ட‍ வரலாற்றை இன்றும் இவ்வூர் மக்க‍ள் “”ஆணி மாதத்தில்”” வரும் “”கிருத்திகை நட்சத்திரத்தன்று”” உற்சாக‌மாய் கொண்டாடி மகிழ்கின்றார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe