
இன்று கார்த்திகை மாதம் முதல் தேதி. இதை முன்னிட்டு, குற்றாலம் அருவிக்கரையில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணிந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதத்தைத் தொடங்கினர்.
கார்த்திகை முதல் தேதி இன்று அதிகாலை 3 மணிக்கு சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் விளக்கு ஏற்றப் பட்டு, மண்டல பூஜை முறைப்படி தொடங்கப் பட்டது. இதை முன்னிட்டு இன்று காலை முதலே, பல்வேறு இடங்களிலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு விரதம் இருந்து செல்வதற்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.
குருசாமிகளின் ஆசியுடன், துளசி மணி மாலை அணிந்து, 41 நாள் மண்டல காலங்களில் பூஜை செய்து, விரதம் இருந்து, மண்டல பூஜைக் காலத்தில் சபரிமலை ஐயப்ப ஸ்வாமியை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் வருகின்றனர்.