மேடாரம் ஜாத்ரா! வன தேவதைகளை தரிசித்த ஆளுநர் தமிழிசை!

Published:

tamilisai0 pandaru medam jatara - 2026

மேடாரம் வன தேவதைகளை தரிசித்தார் தெலங்காணா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தெலங்காணா கும்பமேளாவான மேடாரம் திருவிழாவுக்கு பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து தரிசித்துச் செல்கின்றனர். அதனால் கத்தெலு எனப்படும் மேடை அருகில் மிகப் பெரிய கூட்டம் மிகுந்து வருகிறது. தெலங்காணா மாநில ஆளுநர் தமிழிசை, ஹிமாச்சல் பிரதேஷ் மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வன தேவதைகளை இன்று தரிசித்தனர். அவர்களுக்கு அதிகாரிகள் வரவேற்பளித்தனர்.

தெலுங்கு மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி சத் ஸ்கர், ஒடிஷா, மத்திய பிரதேஷ், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களில் இருந்தும் கூட பக்தர்கள் அம்மனை தரிசிப்பதற்கு வந்த வண்ணம் உள்ளனர். சம்மக்கா, சாரலம்மாவை தரிசித்தது ஆனந்தமாக இருக்கிறது என்று ஆளுநர் தமிழிசை தெரிவித்தார் .

மாநில மக்கள் அனைவருக்கும் வன தேவதைகளின் அருள் ஆசீர்வாதம் இருக்கவேண்டும் என்று கோருவதாகக் கூறினார். சம்மக்கா சாரலம்மா திருவிழா இயற்கையோடு இணைந்தது என்று ஹிமாச்சல் பிரதேஷ் கவர்னர் தத்தாத்ரேயா குறிப்பிட்டார். தெலங்காணா மாநிலம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டதாக அவர் கூறினார்.

வியாழனன்று இரவு சம்மக்கா தேவியை மேடைக்கு எடுத்து வந்த பின்னர் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகமாகிவிட்டது. ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசித்து வருகின்றனர். எப்படிப்பட்ட சூழல்களையும் சமாளிக்கும் வண்ணம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img