நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துக்கள் என்றார் மதுரை தனியார் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை சமந்தா. மதுரை தனியார் மொபைல் ஷோ ரூம் திறப்பு விழா வுக்கு நடிகை சமந்தா மதுரை புதூர் சாலையில் உள்ள தனியார் விடுதியில் சமந்தா பேட்டி…
ரசிகர் இல்லாமல் நான் இல்லை, சினிமா துறையில் எனது வெற்றிக்கு ரசிகர்களே முக்கிய பங்கு. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துக்கள். சினிமா துறை என்பது எனக்கு கடவுள் – க்கு சமமானது… எனது சினிமா வாழ்வில் இதுவரை எனக்கு எந்த வித பாலியல் பிரச்சனையும் ஏற்பட்டதில்லை.
எல்லா துறையிலும் உள்ளது போல் சினிமா துறையிலும் உள்ள ஒரு சில கருப்பு ஆடுகளால் சினிமா துறையலும் பாலியல் ரீதியான புகார் உள்ளிட்ட பிரச்சனைகளால் பெயர் கெடும் நிலை ஏற்பட்டுள்ளது. என்றார். தொடர்ந்து கூறும் போது சினிமாவிற்கு வந்து 10 வருடம் ஆகிறது. சினிமாக்காரனை தான் கல்யாணம் பண்ணியுள்ளேன். எனக்கு இது வரை பாலியல் தொந்தரவு இல்லை என்றார்.



