வானிலை இயக்குனர் பாலசந்திரன் பேட்டியில்… நேற்று அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று 8ம் தேதி, லூபன் என்று பெயரிடப்பட்ட இந்த புயல் மேலும் வலுப்பெற்று ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும்.
மேலும் வங்கக்கடல் பகுதியில் நேற்று வெளிவந்த வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவுகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்து வரும் இரு தினங்களில் புயலாக வலுப்பெற்று ஒடிசா நோக்கி கடந்து செல்லக் கூடும். அரபிக் கடலில் இருக்கும் புயலாலும் வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வருவதாலும் அரபிக்கடல் தென்னிந்திய பகுதி மற்றும் வங்கக் கடல் பகுதிகளில் காற்றின் போக்கு மற்றும் ஈரப்பதத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு உள்ளது
இதனால் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு கடந்த மூன்று தினங்களாக நிலவிவந்த சாதகமான சூழ்நிலை தற்போது மாறியுள்ளது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது அதிகபட்சமாக திருப்புவனத்தில் 15 சென்டி மீட்டர் மழையும் மானாமதுரை 13 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகரில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மீனவர்கள் கடல் பகுதிகளுக்கு 8ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்





