
திருப்பதி:
வயதில் மூத்த குடிமக்களையும்கூட ஜருகண்டி ஜருகண்டி என்று சொல்லித் தள்ளிவிட்டுக் கொண்டிருந்த திருப்பதி கோவில் பாதுகாவலர்கள், இனி அப்படி யாரைத் தள்ளுவது என்று முழிக்கும் காலம் வந்துவிட்டது.
திருமலை திருப்பதியில் ஸ்வாமி தரிசனத்துக்கு மூத்த குடிமக்களுக்கு என்று சில சலுகைகளை திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப் படுத்தியுள்ளது. தற்போது, மூத்த குடிமக்கள் சிரமம் இன்றி திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதற்கு சில நிபந்தனைகள் உண்டு. 65 வயது கடந்த மூத்த குடிமக்கள் நாள் ஒன்றுக்கு 700 பேர் இலவசமாக தரிசனம் செய்கிறார்கள்.
நிபந்தனைகள்.
1) ஆதார் அட்டை அவசியம்.
2) 65 வயது முடிந்திருக்க வேண்டும்
3) காலை எட்டு மணிக்கு குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்று, தகவல் தெரிவிக்க வேண்டும்.
4) .காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தரிசனம் நேரம்.
5) .நாளும் 700 பேருக்கும் அனுமதி உண்டு.
6.) உதவி செய்ய உடனொருவர் செல்ல அனுமதி உண்டு அவளுக்கும் ஆதார் அட்டை வைத்திருத்தல் அவசியம்.
7) .காலை உணவு, பால் இலவசம்.
8.) அவர்களுக்கு 70 ரூபாய்க்கு 4 லட்டுகள் வழங்கப்படும்.
9) ஒருமுறை சென்றவந்த பிறகு 3 மாதம் கழித்த பிறகே மீண்டும் அவர்களுக்கு மூத்த குடிமக்களுக்கான சலுகையுடன் கூடிய தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படும்.
10) இவை அனைத்தும் இலவச சேவையாகும்.



