
சென்னை:
பிரதமர் மோடியுடன் அரசியல் ரீதியாக பேசவில்லை. தமிழகத்தின் திட்டங்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளேன் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.
தில்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் பிறகு முதல்வர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது:
சென்னையில் டிசம்பர் மாதம் கொண்டாடப்பட உள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தேன்.
சட்டமன்றத்தில் ஜெயலலிதாவின் படத்தை திறக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளேன்.
பிரதமர் மோடியிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை.
இலங்கைக் கடற்படை கைது செய்த 11 மீனவர்கள், 135 படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்தேன்..
கேரள அரசு பவானி ஆற்றில் அணை கட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளேன்.
தமிழக அரசுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன்.
குடிமராமத்துபணிக்கு ரூ.500கோடி நிதியை மானியமாக வழங்க கோரிக்கை விடுத்தேன்.
நீட் தேர்வில் அரசு கல்லூரிகளுக்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளேன்
பிரதமருடன் அரசியல் ரீதியான எந்த விவாதமும் நடைபெறவில்லை.
தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி தர நிதி ஒதுக்க வேண்டும்.
தமிழகத்தில் விரைவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம். காவிரி நதிநீர் முறைபடுத்தும் குழு அமைக்க வேண்டும்.
பம்பா, அச்சன்கோயில் ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு தர வேண்டும்.
மின்சாரம் தயாரிக்க வேண்டும் என கேரளாவை மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும்
மத்திய அரசு திட்டங்களை நிறைவேற்றியதற்காக வழங்க வேண்டி நிலுவை தொகை ரூ.17 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க வேண்டும் என மனு அளித்துள்ளேன்.
அரசு ரீதியாக தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய புதிய திட்டங்கள் குறித்து வலியுறுத்தினேன். இவ்வாறு அவர் கூறினார்.



