சத்குரு யார்? குருவின் அவசியம் ஏன்?

Published:

sankarar
sankarar

சத்குரு மிக மிக அவசியம்
இந்திய பாரம்பரியத்தில் குருவிற்கு மிக உயர்ந்த அந்தஸ்து தரப்பட்டிருக்கிறது குருவின் அருள் இல்லாமல் வாழ்க்கையின் குறிக்கோளான மோட்சத்தை எவராலும் அடைய முடியாது மோசமடைய ஆத்மஞானம் அவசியம் என வேதங்கள் கூறுகின்றன

தியானத்தை எப்படி அடைவது புத்தகங்களைப் படித்து அறிந்து கொள்ள முடியுமா என்றால் முடியாது அதனால் அதற்கு வழி சத்குரு ஒருவரிடம் சரணம் அடைவதுதான் அவரது திருநாமம் உபதேசிக்க பெறுவதை கவனத்துடன் பின்பற்றினால் ஆத்ம ஞானம் பெற்று மோக்ஷத்தை பெறலாம்

சத்குரு என்பவன் யார் பகவத்பாத சங்கரர் கூறுகிறார் சாஸ்திர விஷயங்களில் ஆழ்ந்த அறிவுள்ள வராகவும் பிரம்ம ஞானியாகவும் சீடனின் நன்மைக்காக பாடுபடுபவர் ஆகவும் இருப்பவரே சத்குருவாய் சாஸ்திரத்தில் பண்டிதராக இருந்தும் பிரம்மஞானம் அடையாத ஒருவர் எவ்வளவுதான் சீடனின் நன்மைக்காக பாடுபடுவதாக இருந்தாலும் அவர் குரு எனும் ஸ்தானத்தை அடைய இயலாது.

இப்பேர்பட்ட அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும் சீடன் ஒரு சந்தேகம் கேட்பதாக வைத்துக்கொள்வோம் அந்த சமயங்களில் இம்மாதிரியான குரு மூன்று விதமான பதில்களை தரக்கூடும்.

bharathi theerthar - 2026

ஒன்று சீடனைப் இப்படி சந்தேகங்களை கேட்காமல் மேற்கொண்டு படி நான் சொல்வதைக் கேள் என அதட்டி அவனை அடக்கி விடலாம் அல்லது இரண்டாவதாக நேரம் ஆகிக் கொண்டே போகிறது சந்தேகங்களை எழுப்பி கொண்டிருப்பதால் மேற்கொண்டு பாடம் நடத்த அவகாசம் இல்லை எனக்கூறி அந்த விஷயத்தை மூடி விடலாம் மூன்றாவதாக தொடர்ந்து படித்து உன் சந்தேகங்களை நிவர்த்தி ஆகி விடும் எனக் கூறி நிலைமையை சமாளித்து விடலாம்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

இப்படிப்பட்ட வகைகளில் கூறுபவர்கள் குருவாகிவிட முடியாது சீடனின் சந்தேகங்களை முறையான வழியில் அறவே நிவர்த்தி செய்பவர் குரு ஆகிறார் அப்படிப்பட்ட சத்குருவை நாமல்லாம் நாடி நம் வாழ்க்கையின் குறிக்கோளை சாதித்துக் கொள்ள வேண்டும்

ஸ்ரீ விதுசேகர பாரதீ மகான் 1
ஸ்ரீ விதுசேகர பாரதீ மகான் 1

குருவின் அருள் இருந்தால் மகாபாவத்திலிருந்து கரையேறி முன்னேற்றமடைய முடியும். இறைவன் மற்றும் குருவின் அனுக்கிரகம் இருந்தால் எப்பேர்பட்ட மோசமானவனும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடையலாம் என நினைத்து கவனக்குறைவாக மட்டும் இருந்துவிடக் கூடாது. அதாவது கடவுளையும் குருவையையும் ஸ்தோத்திரம் செய்து அநீதி செய்தாலும் முன்னேற்றம் அடையலாம் என்ற முட்டாள்தனத்தை அறவே விட வேண்டும் என்பதாம். நாமும் ஆதி சங்கரர் வழி பின்பற்றி அவரின் அவிச்சின்ன பரம்பரையின் ஜகத்குருக்களான மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மகாசுவாமிகள் மற்றும் சன்னிதானம் ஸ்ரீ விதுசேகாரசுவாமிகள் கூறும் வழிகாட்டுதல்களை பின்பற்றி உய்வோம்.

Related articles

Recent articles

spot_img