குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தொற்றும் கொரோனா: வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?!

Published:

corona cartoon
corona cartoon

கொரோனா வைரஸ் முதல் முதலில் தென்பட்டு பரவிய சீனாவில், தற்போது குணமடைந்து சென்றவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்றியுள்ளது அந்நாட்டு மருத்துவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தவர்களுக்கு 70 நாட்களுக்கு பிறகு பரிசோதித்துப் பார்த்தபோது மீண்டும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து சீன மருத்துவர்கள் குழப்பமடைந்துள்ளனர். அவ்வாறு பரிசோதனை செய்யப்பட்டவர்களுக்கு, குணமடைந்த பின்னர் நோய்க்கான அறிகுறிகள் எதுவும் காட்டாமல் நோய் தொற்று உறுதியாகி உள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பிலிருந்து அடுத்த கட்டத்துக்கு நகர்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது என வூஹான் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 60 அல்லது 70 நாட்களுக்கு பின்னர் மீண்டும் நோய்த் தொற்றுக்கு ஆளானது குறித்த விவரங்களை சீனா வெளியிடவில்லை. என்றாலும், 12 க்கும் அதிகமானோர் இதுபோல் மீண்டும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நோய்த் தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் உடல் பாகங்களில் கொரோனா வைரஸ் எங்காவது தங்கி இருந்தாலும் அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றாலும் அது பெரிய அளவில் ஆபத்தை ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டு குணம் அடைந்தவர்கள் வீட்டுக்குச் சென்றபின்னர் மேற்கொள்ள் வேண்டிய சிகிச்சை முறை, செயல்பாடுகள், உணவு உள்ளிட்டவை குறித்து சில அறிவுரைகளை இந்திய மருத்துவர்கள் கொடுத்து வருகின்றனர்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

அது குறித்த விவரம்…

corona virus again
corona virus again

Related articles

Recent articles

spot_img