விஜயநகர சாம்ராஜ்ய ஸ்தாபனாசார்யர் ஸ்ரீ வித்யாரண்யர் ஜயந்தி நாளில்..!

Published:

vidyaranya
vidyaranya

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடத்தின் 12வது ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ வித்யாரண்ய மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி இன்று.

vidyaranya harihara pukkar
vidyaranya harihara pukkar

தென்னிந்தியாவில் மொஹலாயர்களின் படையெடுப்புகளை எதிர்கொண்டு, சனாதன தர்மத்தை நசிக்கச் செய்திருந்த சுல்தான்களை விரட்டி, அவர்களைத் தோற்கடித்து மீண்டும் ஹிந்து தர்மத்தை ஸ்தாபனம் செய்த விஜயநகர சாம்ராஜ்யத்தை தோற்றுவித்தவர் ஸ்வாமி வித்யாரண்யர்.

vidyaranya harihara pukkar1
vidyaranya harihara pukkar1

ஹரிஹரர், புக்கர் எனும் இரு வீரர்களை முன்னிறுத்தி, விஜயநகர சாம்ராஜ்யம் ஹிந்து சாம்ராஜ்யமாக மலர்ந்தது. அதன் பின்னர் தென்னகம் முழுதும் சுல்தான்களின் ஆதிக்கம் ஒழிந்து, மீண்டும் ஆலயங்கள் பல திறக்கப் பட்டு, பூஜைகள் குறைவற நடந்தன. கலை, கலாசாரம், பக்தி, இசை என அனைத்தும் மீண்டும் தென்னிந்தியாவில் தழைக்கக் காரணமான விஜயநகர சாம்ராஜ்யத்தின் ஸ்தாபனாசார்யராய் அமைந்த சிருங்கேர் ஸ்ரீ சாரதா பீடத்தின் 12வது ஆசார்யர் ஸ்ரீ வித்யாரண்ய மகாஸ்வாமிகளின் ஜயந்தி நாளில் அவரது பாதம் பணிவோம்!

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

Related articles

Recent articles

spot_img