எத்தகைய மனநிலையோடு நம் கடமையை செய்ய வேண்டும்?

Published:

bharathi theerthar

ஞானம் சம்பாதிப்பது மனித வாழ்க்கையின் லட்சியம். அப்பேர்ப்பட்ட ஆத்ம ஞானத்தை சம்பாதிப்பவன் கூட ஸ்வதர்மத்தை ஆஸ்ரயிக்க வேண்டும் ஞானம் வந்தபின் கர்மாவின் தேவை ஏன் என்று கேட்டால் அவனைப்பார்த்து பிறர் நல்ல வழியில் இருப்பதற்கு உதாரணமாகும் ஞானியும் அக்ஞானியும் ஸ்வதர்மத்தை அனுசரிப்பார்கள் அதில் வித்தியாசம் என்னவென்றால் ஞானிக்கு கர்த்ருத்வ பாவனை இல்லாமல் செய்வான் அஞ்ஞானி கர்த்ருத்வ பாவனையுடன் செய்வான் இந்த விஷயத்தை பகவத் கீதையில் பகவான்

ஸக்தா: கர்மண்யவித்வாம்ஸோ
மகா குர்வந்த்தி பாரத !
குர்யாத்வித்வாம்ஸ்ததாsஸக்த
ச்ரிகீர்ஷுர் லோக ஸங்க்ரஹம்!!

அர்ஜுனா எப்படி அஞ்ஞானி கர்மத்தை பந்தமுடன் செய்கிறானோ அதே மாதிரி ஞானி பந்தம் இல்லாமல் லோக சங்கிரஹத்திற்காக கர்மம் செய்கிறார் என்று கூறுகிறார்.

இந்த பாவத்தை சரியாக மனதில் வைத்துக் கொண்டால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் அதாவது பகவத்பாத சங்கரர் எவ்வளவு எல்லாம் தர்மப் பிரசாரம் செய்தார் ஆனால் இதை செய்ய வேண்டிய தேவை என்ன இதை செய்ததினால் அவருக்கு ஞானம் வரவில்லை என்று சொல்லலாமா இம்மாதிரி பிரச்சினைகளுக்கு பதில் இந்த ஸ்லோகத்தில் உள்ளது.

அவர் ஞானி லோக சங்ரஹத்திற்காக சரியான வழியை காட்டுவதற்காக செய்தார் அதேமாதிரி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ ராமச்சந்திர் ஆகியோர் அவதாரங்களில் தர்ம ஆஸ்ரமம் செய்தது லோக ஸங்கரமஹத்துக்காக தான்.

ALSO READ:  பஞ்சாங்கம் ஆக.17 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இந்த தத்துவத்தை புரிந்து கொண்டு ஞானத்தை சம்பாதித்து ஸ்வதர்மத்தை அனுஷ்டித்து எல்லோரும் ஸ்ரேயஸ்ஸை அடையட்டும். என்று ஸ்ரீசிருங்கேரி ஜகத்குரு மகாசன்னிதானம் ஸ்ரீ ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாசுவாமிகள் அருளுரையில் குறிப்பிடுகிறார்கள்

Related articles

Recent articles

spot_img