
சிறுகதை போட்டிக்காக சிறுவர்கள் சிலர் ஒன்று கூடி தாங்கள் எழுதப்போகும் கதையை பற்றி உரையாடிக் கொண்டிருந்தனர். பேசி முடித்ததும் அவர்களில் ஒருவர் கதையின் இறுதி வடிவத்தை மற்றவர்களுக்கு கூறினான்.
அப்போது அவ்வழியே சென்று கொண்டிருந்த மூன்று மனிதர்கள் சிறிது நேரம் நின்று கதையை கேட்டனர் அது ஒரு உண்மை நிகழ்ச்சி என்று அவர்கள் நினைக்காவிட்டாலும் கதை அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவரகள் தாங்கள் கேட்ட கதையை ரசித்தபடியே அதைப் பற்றி பேசிக்கொண்டே சென்றனர்.
500 கிலோ மீட்டர் தள்ளி இருக்கும் ஒரு காட்டில் பானை நிறைய தங்கம் ஒரு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருக்கிறது. என்று அவர்கள் பேசி சென்றதை அங்கு ஒரு இளைஞன் கேட்டான்.
உடனே அவனுக்கு அந்த புதையலை அடையும் ஆசை வந்தது அவன் காட்டை நோக்கி நடக்க தொடங்கினான். அப்பொழுது ஒருவன் பாத்திரத்தில் பழம் வைத்து அதை ஒரு கயிற்றால கட்டி கொண்டிருந்தான். இதனைக் கண்ட அந்த இளைஞன் என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டான்.

குரங்கை பிடிப்பதற்காக குறி வைத்துக் கொண்டிருக்கிறேன் என்று அந்த மனிதன் கூறினான். நீ தயாரிக்கும் இது எப்படி வேலை செய்யும் என்று கேட்டான்.
நிறைய குரங்குகள் இருக்கின்றன அவற்றில் ஏதாவது ஒரு குரங்கு நிச்சயமாக பாத்திரத்தையும் அதில் உள்ள பழத்தையும் பார்க்கும் பாத்திரத்திற்குள் கையை விட்டு பழத்தைப் பற்றிக் கொள்ளும் பாத்திரத்தின் வாய் பழத்தோடு கையை எடுக்க முடியாதவாறு சிறிதாக உள்ளது.
பழத்தை விட மனமில்லாமல் பாத்திரத்தோடு இடத்தைவிட்டு ஓட பார்க்கும். ஆனால் பாத்திரத்தோடு கயிறு கட்டி வைத்து இருப்பதால் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு ஓடிவிட முடியாது அதனால அது இங்கே இருக்கும் சந்தர்ப்பம் ஏற்படும் அதைப் பிடித்து விடுவேன் என்று கூறினார்.
வேடிக்கையாய் இருக்கிறது குரங்கு பழத்தை வைத்து விட்டு பாத்திரத்திலிருந்து கையை வெளியே எடுத்து கொண்டு தப்பித்து ஓடி விடும் என்று சொன்னான் இந்த இளைஞன்
அது செய்யாது ஏனென்றால் பழத்தை ஒருபோதும் இழக்க விரும்பாது என்றான்.
பழத்தின் மீதுள்ள ஆசையால் குரங்கு முட்டாள் தனமாக நடந்து கொள்ளும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. என்றான்
நீ பக்கத்தில் இருந்து பாரு. உனக்கு புரியும் என்று சொல்லி இருவரும் சிறிது தூரம் தள்ளி மரத்தின் பின்னே மறைந்து கொண்டார்கள். விரைவில் குரங்கு வந்தது அம்மனிதன் சொன்னபடி நடந்தது.
இதைப் பார்த்த அந்த இளைஞன் குரங்குகளும் மூடத்தனமாக இவ்வளவு ஆசையோடு இருக்கிறதே என்று அவ்விடத்தை விட்டு அகன்றான்.

மற்றொரு இடத்தில் தவளை ஒன்று நாக்கை வெளியில் நீட்டி ஈ ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை பார்த்தான் அப்பொழுது பாம்பு ஒன்று அதன் அருகில் சென்று பிடித்தது பாம்பு அந்த தவளையை வேகமாக கவ்வி கொண்டது அத்தவளை நாக்கை வெளியில் நீட்டி ஈ யை பிடித்தால் ஈ அதன் நாக்கில் ஒட்டிக் கொண்டது. பாம்பு தவளையை விழுங்க ஆரம்பித்தது.
என்ன வினோதமான காட்சி அந்த மரணத்தின் தருணத்தில் இருக்கும் போது கூட அந்த அந்த தவளை தனது இரையை தேடுவதில் இவ்வளவு மும்முரமாக இருக்கிறது என்று எண்ணியவாறு நடந்த சிறிது தூரம் சென்றான்
அப்போது ஒரு காட்டுவாசியை பார்த்தான் எங்கு போகிறாய் என அவன் கேட்டான் நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று இந்த இளைஞன் கூறினான்

அங்கே ஒரு முரட்டு யானை ஒன்று இருக்கிறது உன்னை தாக்கலாம் என்று எச்சரித்தான் ஆனால் தான் அடைய நினைத்த தங்கத்தின் மேல் இருந்த தீவிர ஆசையினால் அவன் அந்த காட்டுவாசியின் அறிவுரையை நிராகரித்தான்
பயணத்தை மேலும் தொடர்ந்த பொழுது அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான் ஆலமரத்தை தேடினான் அப்பொழுது யானையின் பிளிறல் ஓசை கேட்டது தன்னை நோக்கி ஒரு யானை வேகமாக ஆவேசமாக ஓடி வருவதை பார்த்தான்.
உடனே அங்கிருந்து ஓட்டம் எடுக்க யானையும் துரத்திக் கொண்டே சென்றது முழு சக்தியை பிரவேசித்து அவன் ஓடிய போதிலும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது
துரதிஷ்டவசமாக அவன் ஒரு பெரிய பள்ளத்தில் நிலை தவறி விழுந்துவிட்டான் விழும் தருணத்தில் அங்கிருந்த கொடியை பற்றிக் கொண்டதால் அவன் கீழே விழாமல் தப்பித்தான் யானை அந்தப் பள்ளத்தின் அருகே வந்து அவனைப் பார்த்தது.
கீழே ஆழமாக இருந்தது அங்கே ஒரு நாகப்பாம்பு இருந்தது மேலே செல்ல முடியாமல் யானை நின்றது அவன் இவ்வளவு அபாயகரமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு இருப்பதை உணர்ந்தான். இவ்வளவு கஷ்டங்கள் வந்த போதிலும் அவன் பிடித்துக் கொண்டிருந்த கொடியை சில பூச்சிகள் கடித்துக் கொண்டிருந்ததால் மெல்ல மெல்ல அக்கொடி அறுந்துகொண்டிருந்தது
அருகில் இருந்த ஒரு மரத்தின் மேலிருந்த தேன் கூட்டிலிருந்து தேன் அவனது மூக்கில் சொட்டி வழிந்த்து ல் மூக்கில் பட்டு உதடுகளை அடைந்ததும் அவன் நாக்கை வெளியில் நீட்டி அந்த சிக்கலான நேரத்திலும் அதை ருசித்தான் அத்தேன் துளி அமிர்தத்தை போல் இருந்தது.
அப்போது சிங்கத்தின் கர்ஜனை கேட்டது உடனே யானை அவ்விடத்தை விட்டு அகன்றது அவன் மெதுவாக கொடியை பற்றி கொண்டு மேலே ஏறினான் அவனது எடை கூடி அறுந்து விழுந்தது கொடி. சட்டென்று பள்ளத்தின் மீது லாவகமாக பிடித்து கொண்டான்
சிறிது நேரத்தில் அவன் கைகள் தளர்ந்தன விரல்களை அழுந்த பிடித்து கொண்டிருந்தான் கைகள் சிவந்து களைப்படையத் தொடங்கியது.

அப்பொழுது காட்டுவாசி அவன் கையை பிடித்து தூக்கி விட்டான்.நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள் என்று கேட்டான்
யானை பிளிரும் ஓசை கேட்டதும் உனக்கு ஆபத்து வந்திருக்கிறது என்று தோன்றியது இந்த காட்டைப் பற்றி உன்னைப் போன்றவர்களை காட்டிலும் எனக்கு நன்கு தெரியும் உன்னை காப்பாற்றுவதற்குத்தான் இந்த திசையை நோக்கி வந்தேன் நல்ல காலம் உன்னைக் காப்பாற்றி விட்டேன் என்றான் காட்டுவாசி. இளைஞனும் நன்றி தெரிவித்தான்
அப்பொழுதும் அவன் அந்த ஆலமரத்தை தேடி அந்த தங்கத்தை அடையவே அவன் மனம் துடித்தது ஆலமரத்தை தனக்கு அடையாளம் காட்டவேண்டும் என்று காட்டுவாசியிடம் கேட்டான்.
அப்படியெல்லாம் இங்கு எதுவும் கிடையாது யானை திரும்ப வருவதற்குள் இந்தஇடத்தை விட்டுச் சென்றுவிடு எனக் கூறினார்.
இளைஞன் பிடிவாதமாக இருப்பதை கண்டு ஆலமரத்தின் அருகே அழைத்துச் சென்றான் அவ்விடத்தில் எவ்வளவு தேடிப்பார்த்தால் தங்கம் அவர்களுக்கு கிடைக்கவில்லை.
மீண்டும் ஊருக்கே திரும்பிய அவன் அனைத்தையும் அங்கு ஒரு முதியவரிடம் உரைத்தான் குரங்கின் முட்டாள் தனத்தையும் தவளையின் செய்கையையும் கூறி அவன் நகைத்தான் அந்த முதியவர் கூறினார் நீ கேட்டது ஒன்றும் உண்மை இல்லை.
சிறுகதை போட்டிக்காக சிறுவர்கள் சொன்ன கதை. பழத்தின் மேல் உள்ள ஆசையால் குரங்கு பழத்தை விடாமல் இருந்ததும் பூச்சியை தவளை மரணத் தருவாயிலும் சாப்பிட்டதும் முட்டாள்தனம் என்று சொன்னாயே அதெல்லாம் எவ்வளவோ பரவாயில்லை. அதனை விட உன்னுடைய நிலை மோசமானது குரங்கிற்கு அதன் கையில் இருக்கின்ற உண்மையான பழம் கண்ணிற்கு தெரிகிறது அதை விட மனம் இல்லை.
நீயோ உண்மை இல்லாத ஒரு தங்கத்தைத் தேடி நீ சென்றிருகிறாய் அது போல் தவளைக்கு அதன் இரைக்காகா நாக்கை நீட்டுவது இயல்பு தவறில்லை
ஆனால் பகுத்தறிவு மனிதனாய் இருந்து மரணத்தின் பிடியில் இருந்தபோது கூட மூக்கின் மேல் விழுந்த துளித்தேனை அனுபவித்தேன் என்றாய் ஆசையின் சக்தியானது எப்பேற்பட்டது என்பதை இதிலிருந்து நீ புரிந்து கொள் என்று அறிவுறுத்தினார்.
அழிவை உண்டாக்கும் ஆசை என்பதை உணர்ந்தவனாய் தனது தவறை எண்ணி வெட்கி தலை குனிந்தான் அந்த இளைஞன்\
இந்த கதையைக் கூறி ஆச்சார்யாள் ஆசை என்பது துன்பத்தை விளைவிக்க கூடியது என்பதையும் காணாத ஒன்றிக்கு பேராசை பட்டு அதன் பின்னே அலைவது எத்தனை முட்டாள் தனமானது என்பதையும் உபதேசித்தார்கள்.