October 21, 2021, 12:48 pm
More

  ARTICLE - SECTIONS

  தருணம் பார்த்து தண்டனை! ஆச்சார்யாள் அருளமுதம்!

  abinav vidhya theerthar

  குழந்தைப்பேறு இல்லாத ஒரு தம்பதியர் ஒரு கிராமத்தில் வசித்து வந்தனர் கணவனைக்காட்டிலும் மனைவிக்கு தான் எப்படியாவது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருந்தது

  தாய்மை அவளுடைய உணர்வுகளைத் தூண்டி கொண்டிருந்தன தான் தாய்மை அடைவதற்கு ஏதாவது பரிகாரம் செய்ய வேண்டுமா என்று பல பேர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தாள் கணவனுக்கு குழந்தை பிறக்கும் என்ற நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டது.

  மனைவி யாராவது ஜோசியர் சாது கோயிலில் அமர்ந்து இருப்பவர் பெரியோர் என காண்பவரிடம் எல்லாம் பரிகாரம் கேட்டு செய்து கொண்டிருந்தாள்.

  வழக்கம் போல் மனைவி குழந்தைபேறு பற்றி யோசனை கேட்டபோது ஒருவர் நீ ஒரு குழந்தையைக் கொன்று அதன் ரத்தத்தில் குளித்தால் உனக்கு குழந்தை பிறக்கும் என்று கூறி சென்றுவிட்டார்.

  இவ்விஷயத்தை மெதுவாக அவள் தன் கணவனிடம் கூறினாள் இப்படிப்பட்ட காரியத்தை நினைத்து கூட பார்க்க கூடாது என்று அவளை அவன் கடிந்து கொண்டான்.

  ஒரு வருடம் கழிந்தது அவள் கர்ப்பமுற்றாள் உரிய காலத்தில் நல்ல அழகான ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள் தங்கள் எண்ணம் நிறைவேறியது தம்பதியர் மகிழ்ச்சியுடன் குழந்தையைக் கொஞ்சிக் குலாவினார்கள் கணவன் மனைவியைப் பார்த்து பலி கொடுப்பதெல்லாம் வேண்டாம் என்று சொன்னேன் நீயும் என் சொற்படி நடந்து கொண்டாய் இதனால் இறைவன் மனம் குளிர்ந்து நமக்கு ஒரு சுட்டியான குழந்தையை அளித்திருக்கிறார் என்று கூறினான்.

  அவள் சிறிது தயக்கம் காட்டினால் ஏதோ மனதில் மறைத்து வைத்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட கணவன் அவளைப் பார்த்து தயக்கமில்லாமல் சொல் என்று சொன்னால் உடனே அவள் சிறிது நடுக்கத்தோடு ஒரு வருடத்திற்கு முன் நம் பக்கத்து வீட்டுக் குழந்தை இறந்து போனது உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேட்டாள் உடனே அவன் மனதில் ஏதேதோ கற்பனையில் தோன்ற ஆரம்பித்தன அவன் முகம் வாடியது இருப்பினும் அவளை உற்றுப் பார்த்து ஆமாம் ஞாபகம் இருக்கிறது என்றான் அவள் தன் குரலை தாழ்த்திக்கொண்டு அந்த குழந்தை இயற்கையாக இறக்க வைக்க வில்லை நான் தான் அதைக் கொன்று அதன் ரத்தத்தில் குளித்தேன்.

  அதனால் தான் நமக்கு இந்த குழந்தை பிறந்திருக்கிறது என்று கூறி முடித்தாள் மனைவியின் வார்த்தைகளை கேட்டதும் அவன் ஏறக்குறைய பைத்தியம் பிடித்தவன் போல் மாறி விட்டான் உள்ளம் தடுமாறியது ஆண்டவனை பார்த்து இறைவா உன் சாம்ராஜ்யத்தில் இருள் சூழ்ந்திருக்கிறது நீதி இறந்துவிட்டது என்று சொல்லி கதறினான்.

  தவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்கள் வேண்டுவதை கொடுக்கும் இறைவனின் செயலைப் பார்த்து அவன் நொந்தான் அந்த துயரத்தில் அவன் வீட்டை விட்டு வெளியேறி மனம் போன போக்கில் பல மாதங்கள் ஊர் ஊராகச் சுற்றித் திரிந்தான் நீண்ட நாட்கள் கழித்து சிறிது சிறிதாக உள்ளம் சாந்தமானது தனது கிராமத்திற்கு போய் சேர்ந்தான்.

  அவனால் தனது வீட்டை கண்டு பிடிக்க முடியவில்லை தனக்கு தெரிந்த நண்பர்களை அணுகிய போது அவர்கள் அவனிடம் நீ ஊரை விட்டு சென்றதும் இந்த கிராமத்தை ஒரு பூகம்பம் தாக்கியது சில வீடுகள் தான் அதில் இடிந்து விழுந்தன துரதிஷ்டவசமாக உன்னுடைய வீடு முழுவதுமாக நெருங்கி உன் மனைவியும் குழந்தையும் இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்து விட்டார்கள் என்று நடந்ததைக் கூறினார்கள். அதிர்ச்சியும் கவலையும் அடைவதற்குபதிலாக அவன் பார்வையை மேலே செலுத்தி கைகளைக் கூப்பி இறைவா நான் சொன்னது தவறு. தண்டைனையில் தாமதம் உள்ளது என்று கூறினார் தெய்வத்திடம் இருந்து கிடைத்த தண்டனையை நினைத்து அவன் மனம் அமைதி அடைந்தது.

  தவறான பாதையில் செல்லும் ஒருவன் சிறிது காலம் நன்கு செழிப்புடன் வளர்ந்து செல்வங்களை எல்லாம் அடைந்து தன்னை எதிர்ப்பவர்களை ஜெயித்து கடைசியில் அவன் முற்றிலும் அழிந்து போவான் என்ற மிகப் புனிதமான மனுவில் கூறப்பட்டுள்ளது.

  இறைவனின் தண்டனையும் தீர்ப்பும் மெதுவாக இருந்தாலும் நிச்சயமாக ஒரு நாள் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருப்பது நமக்கு நன்மை பயக்கும்.

  ஒரு பாவி தனது தவறுகளை சீர்படுத்தி கொள்வதற்காகத்தான் அவனுக்கு நேரம் அளிக்கப்படுகிறது என்று ஆச்சார்யாள் அருளுரை கூறுகிறார்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-