பணம் சுகத்தை தரும் சந்தோஷத்தை அல்ல: ஆச்சார்யாள் அருளுரை!

Published:

IMG 20200725 120526 262 - 2026

செல்வம் கொழித்து விளங்கிய ஒரு பெரிய பணக்காரனின் பிரம்மாண்டமான மாளிகையின் அருகில் பிச்சைக்காரனின் குடிசையும் இருந்தது.

தினமும் காலையில பிச்சைக்காரன் மாளிகையின் வாசலில் வந்து பிச்சை கேட்டான் செல்வந்தன் அவனுக்கு குறிப்பிட்ட அளவு அரிசியை தினமும் கொடுப்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தான். பிச்சைக்காரன் தனது நன்றியை செல்வந்தனுக்கு தெரிவித்துவிட்டு மற்ற தெருக்களுக்கு சென்று விடுவான்.

தினமும் தன்னுடைய சிறிய குடும்பத்திற்கு தேவையான உணவை காட்டிலும் அதிகமாகவே கிடைத்துக் கொண்டிருந்தது அடுத்த நாளைப் பற்றிய கவலையே இல்லாத அவன் தனக்கு போக அதிகமான உணவை சேமித்து வைக்காமல் பட்டினியால் வாடும் 12 பேருக்கு அளித்து வந்தான் அவனிடம் சேமிப்பு என்று எதுவும் இல்லாவிட்டாலும் மனநிறைவுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். இரவில் தூக்கம் வராமல் அவன் அவதிப்பட்டான் என்பதே கிடையாது.

தினமும் காலையில் புத்துணர்ச்சியுடன் புதுப் பொலிவுடனும் அவன் தூக்கத்தில் இருந்து எழுந்திருப்பான். அந்த செல்வந்தனோ பணத்தைக் கொண்டு பெறக் கூடிய அத்தனை வசதிகளும் தன்னிடம் இருந்த போதிலும் பணத்தைப் பற்றிய எண்ணங்கள் அவன் மனதில் எப்பொழுதும் வட்டமிட்டுக் கொண்டிருக்கும் தன்னுடைய போட்டியாளர்களோ அல்லது குடும்பத்தினர் சிலரோக் கூட தனக்கு பாதகமாக நடந்து கொள்ளக் கூடும் என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.

இதனால் மனம் நிம்மதி இழந்து அவன் சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்பட்டான். ஒருநாளும் அவனால் புத்துணர்வோடு காலையில் எழ முடியவில்லை.

ஒரு நாள் அவனுடைய குடும்பத்தில் உள்ள ஒருவர் பணக்காரனை பார்த்து அந்த குடிசையில் வசிக்கும் பிச்சைக்காரனை பாருங்கள் அவனிடம் என்ன இருக்கிறது ஒன்றும் இல்லை இருந்தும் எவ்வளவு ஆனந்தமாக தூங்குகிறான் உங்களிடமோ பணத்திற்கு குறைச்சலே இல்லை எல்லா வசதிகளும் இருக்கின்றன ஆனால் வியாதியால் பீடிக்கப்பட்டு இருப்பது போல் ஏன் இருக்கிறீர்கள் என்று கேட்டார்.

ALSO READ:  விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

அவன் தன் தூக்கத்தை இழக்குமாறு செய்வது என்பது எளிதான காரியம்தான் என்று சிரித்தான். மறுநாள் காலையில் தன் வீட்டு வாசலில் பிச்சைக்காரன் வந்து நின்ற போது தான் வழக்கமாக கொடுக்கும் உணவுப் பொருட்களுக்குப் பதிலாக 9 100 ரூபாய் நோட்டுகளை பணக்காரன் அவனுக்குக் கொடுத்தான்.

பணத்தை பெற்றுக்கொண்ட பிச்சைக்காரன் மிகவும் சந்தோஷப்பட்டான். அவன் அந்த இருப்பிடத்தை விட்டு செல்கையில் எனக்கு இன்னும் ஒரு நூறு ரூபாய் கிடைத்தால் போதும் நானும் ஆயிரம் ரூபாய்க்கு சொந்தக்காரர் ஆகி விடுவேன் என்ற எண்ணம் அவன் மனதில் தோன்றியது.

இதற்காக அவன் சில மணி நேரம் கூடுதலாக அன்று சுற்ற வேண்டியிருந்தது. ஆனாலும் அவன் ஆசைப்பட்ட பணம் அவனுக்கு கிடைக்கவில்லை. தனக்கு கிடைத்த பெரும் பாலான அரிசி பருப்பு போன்ற உணவுப் பொருட்களையும் மற்றும் சமைத்த உணவையும் விற்றுவிட்டான்.

கடைசியில் அவன் எதிர்பார்த்த தொகை கைக்கு வந்து சேர்ந்தது மிகவும் களைப்புடன் வீடு திரும்பினான் அவன் மனைவி இன்று நீங்கள் தாமதமாக வந்திருக்கிறீர்கள் நீங்கள் கொண்டு வந்திருக்கும் உணவு மிகக் குறைவாக இருக்கிறது நமக்கு நிச்சயம் போதாது எங்கிருந்து நான் கஷ்டப்படும் பிறருக்கு உணவளிக்க முடியும் நாம் செய்து கொண்டிருந்த சிறிய தர்மத்தையும் இன்று செய்ய முடியாமல் போய் விட்டதே என்று சொல்லி கோபப்பட்டாள்.

இதைக் கேட்டு எரிச்சலடைந்த பிச்சைக்காரன் அன்று இரவு அவனுக்கு கிடைத்த சொற்ப உணவால் அவனுடைய பசி அடங்கவில்லை சோர்வுடனும் பசியுடனும் படிக்க சென்றான். அவன் தன்னிடம் இருந்த பணத்தைப் பற்றி கவலைப்பட ஆரம்பித்தான் இவ்வளவு பணத்தை இதுவரையில் நான் பார்த்ததே இல்லை இதை பத்திரமாக வைத்துக் கொள்ளாவிட்டால் யாராவது திருடி கொண்டு போய்விடுவார்கள்.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

ஆகையால் இதை மறைத்து வைப்பதற்கு தகுந்த இடத்தைத் தான் கண்டுபிடித்தாக வேண்டும் என்று நினைத்தான். தன் குடிசையில் அப்படிப்பட்ட பாதுகாப்பான இடம் ஏதுமில்லை என்று உணர்ந்தான் எனவே குடிசையை விட்டு வெளியே வந்த அவன் சிறு குழி தோண்டி அதில் தன் பணத்தை பதுக்கி வைத்தான் பணத்தை குழியில் பதுக்கி வைத்தது ஒருவேளை யாராவது பார்த்திருப்பார்களோ என்று ஐயம் கொண்டான். இரவில் நன்கு கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் போது யாராவது வந்து பணத்தை திருடிக்கொண்டு சென்று விட்டால் என்ன செய்வது என்றெல்லாம் அவனது மனம் எண்ணிப் பார்த்து அசைபோட்டுக் கொண்டே இருந்தது. கடைசியில் அந்தக் குழியின் மேலே ஒரு துணியை விரித்துப் போட்டு வெட்டவெளியில் தூங்க முடிவு செய்தான்.

பணத்தை எப்படி மேன்மேலும் வளர்ப்பது எப்படி அதை வருங்காலத்தில் பாதுகாப்பது என்பது போன்ற சிந்தனைகள் அவன் மனதில் தொடர்ந்து அலைபாய்ந்தது. ஒரு நொடிப் பொழுது கூட அவனால் சரியாக தூங்க முடியவில்லை. அடுத்த நாள் காலையில் அவன் வழக்கம் போல பணக்காரனின் மாளிகை முன் வந்து நின்றான் சரியாக உறங்காத காரணத்தினால் அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. களைப்பால் முகம் வாடி இருந்தது.

இதை கண்ட பணக்காரன் சோர்ந்து காணப்படுகிறாய் உன் கண்கள் சிவந்து உள்ளன என்று கேட்டான். அதற்கு பிச்சைக்காரன் உங்கள எல்லாம் பணத்தையும் பத்திரமாக வைத்துக் கொள்வதற்கு பெரிய பீரோக்களும் வங்கிகளில் போட்டு கொள்ள வசதியும் உள்ளது அலமாரிகள் இருக்கின்றன வீட்டை பாதுகாக்க காவல்காரன் இருப்பதால் சுலபமாக உங்கள் பணத்தை எவராலும் எடுத்துச் சென்றுவிட முடியாது.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

என்னுடைய நிலைமை அப்படியல்ல யார் வேண்டுமானாலும் சுலபமாக என் பணத்தை அள்ளி விடலாம் இதைப்பற்றியே நேற்று இரவு முழுவதும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்ததால் என்னால் சரியாக தூங்க முடியவில்லை என்றான்.

வீட்டில் இருந்தவர் அவர்களுடைய சம்பாஷணையை கேட்டார். நிச்சயமாக ஒருவனுக்கு பணம் மன அமைதியை கொடுப்பதில்லை மாறாக அது மனதில் கலக்கத்தை தான் உண்டு பண்ணுகிறது உறக்கத்தையும் கெடுத்து விடுகிறது என்பதை அறிந்து கொண்டார்கள். வறுமை நிலையையும் பொருட்படுத்தாமல் நன்கு உறங்கிக்கொண்டு இருந்த பிச்சைக்காரன் பணம் சேர்ந்ததும் எப்படி தூக்கத்தை இழந்து அப்படியே தான் பணக்காரரும் தூக்கமின்மையை சம்பாதித்துக் கொண்டார் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள்.

பணம் சுகபோகங்களை ஒருவனுக்கு தரலாம் ஆனால் சந்தோஷத்தை கொடுக்காது ஆகவே தான் நமது முன்னோர்கள் பணத்தை சம்பாதிப்பதில் எவ்வாறு பல கஷ்டங்கள் உள்ளனவோ அவ்வாறே அதை பாதுகாப்பதிலும் சிரமங்கள் பல உண்டு அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த பணம் செலவழித்து விட்டாலோ அல்லது காணாமல் போனாலோ மனதில் துயரம் தான் மிஞ்சும் துன்பத்தைக் கொடுக்கும் இப்படிப்பட்ட செல்வத்தை நாடத்தான் வேண்டுமா? என்று கூறியுள்ளனர். என் ஆச்சார்யாள் கூறுகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img