
ஆவணி மாத ஆன்மிக குறிப்புகள் – 2017
ஆகஸ்ட்-17 ஆவணி-01 ஆவணி மாஸப் பிறப்பு. விஷ்ணுபதி புண்ய காலம்.
ஆகஸ்ட்-18 ஆவணி-02 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி
ஆகஸ்ட்-19 ஆவணி-03 க்ருஷ்ணபக்ஷ (சனி) மஹாப்பிரதோஷம்
ஆகஸ்ட்-20 ஆவணி-04 மாஸ சிவராத்திரி
ஆகஸ்ட்-21 ஆவணி-05 ஸர்வ அமாவாஸ்யை. புகழ்த்துணையார், அதிபத்தர் குருபூஜை
ஆகஸ்ட்-22 ஆவணி-06 வாஸ்துபுருஷன் நித்திரை விட்டெழுதல். இளையான்குடி மாறனார் குருபூஜை.
ஆகஸ்ட்-23 ஆவணி-07 சந்த்ர தர்சனம், கல்கி ஜயந்தி
ஆகஸ்ட்-24 ஆவணி-08 மறைஞான சமபந்தர் குருபூஜை
ஆகஸ்ட்-25 ஆவணி-09 சுக்லபக்ஷ சதுர்த்தி, கரிநாள், விநாயக சதுர்த்தி
ஆகஸ்ட்-27 ஆவணி-11 சுக்லபக்ஷ ஷஷ்டி
ஆகஸ்ட்-29 ஆவணி-13 குலச்சிறையார் குருபூஜை
ஆகஸ்ட்-31 ஆவணி-15 குங்கிலியக்கலையனார் குருபூஜை
செப்டம்பர்-02 ஆவணி-17 குருப்பெயர்ச்சி. குருபகவான் காலை மணி 9.31க்கு கன்யா ராசியிலிருந்து
துலாராசியில் ப்ரவேசிக்கிறார். சுக்லபக்ஷ ஸர்வ ஏகாதசி
செப்டம்பர்-03 ஆவணி-18 சுக்லபக்ஷ மஹாப்ரதோஷம். வாமன ஜயந்தி
செப்டம்பர்-04 ஆவணி-19 ஓணம் பண்டிகை. ஸ்ரவண வ்ரதம். நடராஜர் அபிஷேகம்(மாலை)
செப்டம்பர்-05 ஆவணி-20 பௌர்ணமி
செப்டம்பர்-06 ஆவணி-21 மஹாளயபக்ஷ ஆரம்பம்
செப்டம்பர்-09 ஆவணி-24 க்ருஷ்ணபக்ஷ (ஸங்கடஹர) சதுர்த்தி
செப்டம்பர்-10 ஆவணி-25 மஹா பரணி
செப்டம்பர்-11 ஆவணி-26 கிருத்திகை. க்ருஷ்ணபக்ஷ ஷஷ்டி,
செப்டம்பர்-13 ஆவணி-28 பாஞ்சாராத்திர ஸ்ரீ ஜயந்தி. மத்யாஷ்டமி. கரிநாள்
செப்டம்பர்-14 ஆவணி-29 மஹாவ்யதீபாதம்
செப்டம்பர்-16 ஆவணி-31 க்ருஷ்ணபக்ஷ ஸர்வ ஏகாதசி. செருத்துணையார் குரு பூஜை.
மஹாளயபக்ஷ விபரம்
நவராத்திரிக்கு முன்னால் புரட்டாசி தேய்பிறை காலத்தில் வரும் 15 நாட்கள் மஹாளயம் என்றழைக்கப்படுகிறது. வள்ளுவர் வார்த்தையில் இது “தென் புலத்தார் என்றழைக்கப்படும்.
நமது மறைந்த முன்னோர்களுக்கு திதி தருவதற்கு சிறப்பான காலம்.மரணத்திற்கு பின் வாழ்வு என்ற அடிப்படையில் இந்து மக்கள் மட்டும், உயிர் பயணிக்கும் போது அது தங்கும் இடங்கள் பற்றி விரிவாக ஆய்ந்துள்ளனர். எப்படி உயிரானது வசுக்களாகவும், ஆதித்தர்களாகவும் நிற்கிறது என்பதை தற்போது பல ஆய்வுகள் விளக்கியிருக்கின்றன. இதை மேனாட்டவர்கள் வியக்கின்றனர்.
எமனுடன் வாக்குவாதம் செய்த நசிகேதன் தத்துவம் அதன் பிரமாண்ட பரிமாணமாகும். மறைந்த பெரியவர்களை நினைத்து அவர்களுக்கு திதி முதலிய சிறப்பு தர்ப்பண காரியங்களைச் செய்வது ஏன்? அதன் பலன்கள் என்ன என்பதை உணர்ந்த சமுதாயத்தினர் மகாளய அமாவாசை நாளன்று நதிகளில் திதி காரியங்களை செய்வது இன்றும் தொடர்கிறது.
மஹாளய தர்ப்பணம் ஏன் ..??? ( தெரிந்து கொள்ளுங்கள் )
கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.
தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார்.
குரு விளக்குகிறார் ” கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்”. ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
குரு விளக்குகிறார் ” கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. ”
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.
யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன் ” யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்.” யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.
யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள். உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும்.
கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்
மஹாளயபக்ஷ விபரம்
செப்டம்பர் – 6- புதன்கிழமை – பிரதமை
செப்டம்பர் – 7-வியாழக்கிழமை -துவிதியை
செப்டம்பர் – 8-வெள்ளிகிழமை-திருதியை
செப்டம்பர் – 9-சனிக்கிழமை-சதுர்த்தி
செப்டம்பர் -10-ஞாயிற்றுகிழமை-பஞ்சமி & மஹாபரணி
செப்டம்பர் -11-திங்கள்கிழமை-ஷஷ்டி
செப்டம்பர் -12-செவ்வாய்கிழமை-ஸப்தமி
செப்டம்பர் -13-புதன்கிழமை-அஷ்டமி & மத்யாஷ்டமி
செப்டம்பர் -14-வியாழக்கிழமை-நவமி & மஹாவியதீபாதம்
செப்டம்பர் -15-வெள்ளிக்கிழமை-தசமி
செப்டம்பர் -16-சனிக்கிழமை-ஏகாதசி
செப்டம்பர் -17-ஞாயிற்ற்கிழமை-ஸந்யஸ்த மஹாளயம் & கஜச்சாயை சூன்யதிதி
செப்டம்பர் -18-திங்கள்கிழமை-சதுர்தசி & ஸஸ்த்ரஹத மஹாளயம்
செப்டம்பர் -19-செவ்வாய்கிழமை- மஹாளய அமாவாஸ்யை
செப்டம்பர் -20-புதன்கிழமை-பிரதமை
During mahaalayam, we have to perform tharpanam for karunya pithrus. Those who perform paksha mahaalayam, has to keep one more additional koorcham for karunya pithrus. Similar to ammavasya tharpanam, first pithru vargam, second maatha maha vargam and then to karunika pithrus by reciting each one’s gothra, name and relationship, by pouring black seasme with water three times, for example:-
மஹாளயத்தில் கூடவரும் தர்ப்பணங்கள் …
அப்பாவவாட அண் ணாவாயிருந்தால் – ஜ்வயஷ்ட பித்ருவ்யன்
அப்பாவவாட தம்பியாக இருந்தால் – கனிஷ்டபித்ருவ்யன்
அப்பாவவாடமன்னிக்கு – ஜ்வயஷ்ட பித்ருவ்ய பத்னீ
சித்தப்பாவவாட ஆத்துக்காரிக்கி – கனிஷ்ட பித்ருவ்ய பத்னீ
மாமனாருக்கு – ஸஸாஸுரர் மாம்யாருக்கு ஸஸாஸுர பத்னீ
அண் ணாவானால் – ஜ்வயஷ்ட பித்ருவ்யன்
தம்பியாக இருந்தால் – கனிஷ்ட பித்ருவ்யன்
அப்பாவுடடய மூத்த ஸம்ஸாரத்திற்கு – ஸபத்னீ மாதா
அப்பாவுடடய கூடப்பிறந்த ஸவகாதரீகளுக்கு – பித்ரு பகிணீ
என்றும்
அம்மாவுடய கூடப்பிறந்த ஸவகாதரீகளுக்கு – மாத்ரு பகிணீ
மாமாக்கு – மாமதுலன் என்றும்
மாமிக்கு – மாதுலிணீ
நண் பனுக்கு – ஸகா
என்று கூறி தர்ப்பணம் ஸெய்யலாம் இவர்களுக்கு பிள்டளகள் இருந்தால் நாம் ஸெய்யக்கூடாது. பிள்டளகள் இல்லாவிட்டால் மும்மூன்று தரடவவகாத்திரம் ஶர்மா கூறி தர்ப்பணம் ஸெய்யலாம்



