பிப்ரவரி 24, 2021, 11:01 மணி புதன்கிழமை
More

    வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!

    Home ஆன்மிகம் வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!

    வாமன ஜெயந்தி: திரிவிக்ரம அவதாரம்!

    vamanar

    பெருமாளின் அவதாரங்களில் இது 5வது அவதாரமாகும்: பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள வடிவம் வாமன அவதாரம். தன் அடியில் மூவுலகங்களையும் அளந்து திருவிக்ரமனாக வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்து நின்றார்.

    பிரகலாதனுடைய பேரனாகிய பலி என்ற அசுரராஜன் ஆண்டு வந்த காலம் வாமன அவதார காலம் ஆகும். இந்திரனுடன் போர் செய்து பலி தோற்றான். மீண்டும் பலம் பெற்று எப்படியாவது தேவர்களை ஜெயிக்க வேண்டும் எனத் தனக்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துக் கொண்டான். பிருகு வம்சத்தில் தோன்றிய சுக்ராச்சாரியார் முதலிய அந்தணர்களை அணுகி ஆலோசனை செய்தான்.

    அவர்கள் பலிச் சக்கரவர்த்தியிடம் விக்ரஜித் என்ற ஒரு பெரிய வேள்வியை நடத்தும்படி உபதேசம் செய்தார்கள். அவ்வாறு அவர் வேள்வி செய்யவே அதில் இருந்து ஓர் பொன் ரதம் வெளிவந்தது. அந்த ரதத்தில் கணக்கற்ற வில்லும், அம்பும், கவசமும் இருந்தன. அதில் சிங்கத்துவஜம் கட்டப்பட்டு இருந்தது. அச்சமயம் பலியினுடைய தாத்தாவாகிய பிரகலாதன் அவன் முன் தோன்றி அவனுக்கு என்றும் வாடாத தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். சுக்கிராச்சாரியார் ஒரு சங்கைக் கொடுத்தார். பலிச்சக்கரவர்த்தி வேள்விக்கு வந்திருந்த அந்தணர்களை வணங்கினான். சுக்கிராச்சாரியாருடைய ஆசியையும் பெற்றான். இரதத்தில் ஏறினான். கவசத்தைத் தரித்துக் கொண்டான். ஒரு கையில் வில்லையும், மறுகையில் சங்கையும் தாங்கிக் கொண்டான். அசுர சேனைகள் புடைசூழ நேரே தேவலோகம் சென்றான். அமரர் உலகத் தலைநகர் ஆன அமராவதியை முற்றுகையிட்டான்.

    அமராவதிப் பட்டணம் அழகுவாசம் செய்யும் இடம். இந்த எழிலார்ந்த நகரம் தனக்கு உடைமை ஆயிற்று என்ற உற்சாகத்தில் அசுரப்படைகளுடன் பலி இந்திரப்பட்டணத்தைத் தாக்கினான். பலி எழுப்பிய யுத்த சன்னத்தமாகிய சங்கு ஒலி கேட்டதும் இந்திரனுக்கு அச்சம் ஏற்பட்டது. உடனே குல பிரகஸ்பதியாகிய வியாழ பகவானைப் போய்க் கலந்து ஆலோசித்தான்.

    தேவேந்திரன் பிரகஸ்பதியிடம், குருபகவானே! பலி முன்பைவிட அதிக பராக்கிரமத்துடன் அசுர சேனைகளைத் திரட்டிக் கொண்டு நம்மை முற்றுகையிட்டிருக்கிறான். அவன் செய்த வேள்வியின் ஓமகுண்டத்திலிருந்து தோன்றிய ரதத்தில் ஏறி வந்திருப்பதைப் பார்த்தால் நாம் அவனை ஜெயிக்க முடியாது என்று கருதுகிறேன். ஆகவே, நான் தங்களிடம் அடைக்கலம் தேடி தேவ சைன்யத்துடன் வந்திருக்கிறேன். இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்? சரியான உபாயம் சொல்லுங்கள்! என்றான்.

    தேவேந்திரனே! நீ பலிச் சக்கரவர்த்தியை இந்த நிலையில் மோதுவது என்பது உகந்தது அல்ல. அவன் பிருகு வம்சத்து மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்று வந்திருக்கிறான். அளவிலாப் பராக்கிரமம் பெற்றிருக்கிறான். இப்போது நீ யுத்தம் செய்ய வேண்டாம். நீங்கள் எல்லோரும் சுவர்க்கத்தை விட்டுப் போய் விடுங்கள். அவனுக்கு எப்படியாவது சொர்க்கத்தை தான் கட்டி ஆள வேண்டும் என்ற ஆசை. அந்தக் குறிக்கோளை அவன் அடைவது உறுதி. இருந்தாலும் காலப்போக்கில் அவனே தன்னை அழித்துக்கொள்வான். எந்த மகரிஷிகளினால் அளப்பரிய பலத்தைப் பெற்றானோ அந்த மகரிஷிகளுக்கு அர்ப்பணம் செய்து, அவர்களாலேயே அவன் அழிவைத் தேடிக் கொள்வான். கவலை வேண்டாம். நீயும், உன் ஆட்களும் ஸ்ரீமந்நாராயணனைத் தேடி சரண் அடையுங்கள். அவர்தான் பலிக்கு அழிவைத் தரக்கூடியவர் என்று பிரகஸ்பதி அறிவுரை செய்தார்.

    குருதேவருடைய வார்த்தைகளைத் தட்டாமல் இந்திரன் தேவர்களுடன் தேவலோகத்தை விட்டு வெளியேறினான். அசுரருக்குத் தெரியாத இடம் ஒன்றில் போய் மறைந்து கொண்டான். பலி இதனால் தேவலோகத்தை எளிதில் கைப்பற்றினான். அமராவதிய