பெண் கவுன்சிலர் போன் காலில் பாலியல் தொல்லை! இளைஞன் கைது

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vaniyam-perumal

தேர்தல் பணிக்காக அலைபேசி எண்ணை வார்டு மக்களுடன் பகிர்ந்த நிலையில், இளைஞரின் பாலியல் தொல்லைக்கு பெண் கவுன்சிலர் உள்ளாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை சார்ந்த 33 வயது பெண்மணி கவுன்சிலராக இருந்து வருகிறார். இவர் தேர்தல் சமயத்தில் மக்களுக்காக உதவ தனது அலைபேசி எண்ணை அப்பகுதி மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில், இவரது கணவர் வெளிநாட்டில் பணியாற்றி வரும் சூழலில், பெண்மணியின் அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுஇது குறித்த விசாரணையில், பெண் கவுன்சிலருக்கு அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர், அப்பகுதியை சார்ந்த வன்னியபெருமாள் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவரை காவல் துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

சிறிது நாட்கள் கழித்த பின்னர் தனது லீலையை துவங்கி அத்துமீற முயற்சித்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக அறிந்த பெண்ணின் மாமனார், வன்னியபெருமாளிடம் இது குறித்து தட்டி கேட்கவே, அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.

ALSO READ:  தேசியக் கொடி ஏற்றி செல்ஃபி... அழைக்கிறார் மோதிஜி!

இதனைத்தொடர்ந்து இந்த விஷயம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் பெண் கவுன்சிலர் மற்றும் அவரது மாமனார் புகார் அளித்துள்ளனர். இது குறித்த புகாரை ஏற்ற காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இளைஞனை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.