இறகுபந்து பயிற்சியாளர் ஒருவர், தன்னிடம் பயிற்சி எடுக்க வந்த மாணவியிடம் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரசன்ன குமாரன் என்ற நபர், மதுரை தெப்பக்குளம் காமராஜர் சாலை நரசிம்மபுரம் தெருவை சேந்தவர். அவனியாபுரத்தில் உள்ள தனியார் பூப்பந்தாட்ட பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், இவரது வீட்டின் அருகே 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் வசித்து வந்த நிலையில், இவருக்கு பூந்தாட்ட பயிற்சி தருவதாக பிரசன்ன குமாரன் வாக்கு கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, பயிற்சி எடுத்துக்கொண்ட மாணவியிடம் நெருக்கமாக பேசி தனது காதல் வலையில் சிக்க வைத்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு, பயிற்சியாளர் பிரசன்ன குமரன், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகின்றது.
மேலும் மாணவி தன்னுடன் நெருக்கமாக இருக்கும் போது பல்வேறு போட்டோக்களை எடுத்து வைத்துக் கொண்டு, அந்த மாணவியை மிரட்டி வரவழைத்து பல்வேறு தருணங்களில் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த சிறுமியின் உடல்ரீதியான மாற்றங்களை பார்த்த சந்தேகமடைந்த தாய் அந்த சிறுமியிடம் விசாரித்த போது, காதல் என்ற பெயரில் பூப்பந்தாட்ட பயிற்சியாளர் செய்த அத்துமீறல்களை கூறி சிறுமி கதறியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நேரில் சென்று பிரசன்ன குமரனின் வீட்டாரிடம் தனது மகளின் வாழ்க்கையை சீரழித்து விட்டதாக கூறி நியாயம் கேட்டுள்ளார்.
இதற்கு யார் பொறுப்பு என்பதில் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மதுரை டவுன் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர்.
இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி நடத்திய விசாரணையில், பிரசன்ன குமரன் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் தவறாக நடந்ததை ஒப்புக் கொண்டான்.
அத்தோடு செவன்ஜி ரெயின்போ காலனி சினிமா படத்தில் வரும் காட்சி போன்று மாணவியின் தலைமுடி, செருப்பு, அவர் சாப்பிட்டு விட்டு போட்ட ஐஸ் கிரீம்மின் பிளாஸ்டிக் கப் போன்றவையை தனது அறையில் பாதுகாப்பாக வைத்திருந்ததையும் போலீசார் கைப்பற்றினர்.
ஒரு கட்டத்தில் மாணவியின் இன்ஷியலை தனது மார்பில் பச்சை குத்தி வைத்து கொண்டு இதயத்தில் வைத்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினான். இருந்தாலும் இறகுபந்து பயிற்சியாளர் பிரசன்ன குமரனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருக்கும் சூழலில் விளையாட்டு பயிற்சி என்ற பெயரில் மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று காவல்துறையினர் ஏச்சரித்துள்ளனர்.