Home ஆன்மிகம் குரு கேட்ட தட்சிணை:

குரு கேட்ட தட்சிணை:

sugar
sugar
sugar

உலகில் பிறந்த பின்பு நம் உடைய அறிவை மிளிரச் செய்வது கல்வி அறியாமையை நீக்கி கண்களை திறந்து நம்மை கரை சேர்ப்பது கல்வி அத்தகைய கல்வியை தருபவர் ஆசான், குரு என்றெல்லாம் சிறப்பிக்கப்படுபவர்.

மாதா பிதா குரு தெய்வம் அன்னை தந்தைக்கு அடுத்தபடியாக குருவும் தெய்வத்தை நமக்கு காட்டி தருவது நம்மை ஒரு படி மேலாக தெய்வத்திடம் அழைத்துச் செல்வதற்கு ஞானத்தை போதிப்பது குருவே ஆகும்.

விவேகானந்தருக்கு ஒரு ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல்..

குரு இல்லாமல் யாரும் எந்த வித்தையும் கற்க முடியாது நமது பாரதப் பண்பாட்டில் மூல விதையே குருவணக்கம் தான் தெய்வமே அவதாரங்கள் எடுத்து பூமிக்கு வந்தபோது குருகுலத்தில் சேர்ந்து குருவிற்கு எல்லாவிதமான பணிவிடைகளையும் செய்து கற்றுத்தேர்ந்து குருவால் ஆசீர்வதிக்கப்பட்டு குருவுக்குரிய குரு தட்சணையை கொடுத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி அவருடைய மனைவியான குரு மாதா பாதங்களைத் தொட்டு வணங்கி உலக வாழ்க்கைக்கு திரும்பினார்கள் குருவின் பேச்சுக்கு அடங்கி நடத்தல் மாணவனுக்கு முதற்கடமை.

சிஷ்யனாகப்பட்டவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இக்கதைகள் உதாரணமாக திகழ்கின்றன.

ஒருசமயம் சுகபிரம்மர் ஞான பாடம் கேட்க ஜனக மகரிஷியை தேடி வந்தார். ஜனகர் ராஜரிஷி அவருக்கு அரசு பணிகளை அதிகமாக இருக்கும் அப்படி இருந்தும் ஞானப் பாடம் கேட்க சுகபிரம்மர் தன் மாளிகைக்கு வந்திருப்பதை அறிந்து மாளிகை வாயில் காக்கும் பணியில் இருக்கும் ஊழியரிடம் இருக்கச் சொல் என்று சொல்லிவிட்டு அரசு பணிகளை கவனிக்க சென்று விட்டார். வாசலில் நின்ற சுகப்பிரம்மரிடம் காவலாளி ஜனக மன்னர் இருக்கச் சொன்னார் என்று சொன்னான்.

என் பாக்கியம் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு வாசலிலேயே குரு கூப்பிடுவார் என்ற திடமான நம்பிக்கையுடன் ஒதுக்குப்புறமாக நின்றார் சுகப்பிரம்மம். ஒரு நாள் இரண்டு நாள் மூன்று நாள் என்று இப்படி அவர் பசி தாகம் ஓய்வு உறக்கம் இல்லாமல் நின்ற நிலையிலேயே இடத்தை விட்டு அசையாமல் முகத்தில் முழு நம்பிக்கை ஒளி வீச புன்னகை மாறாமல் நின்று கொண்டிருந்தார். குருவின் வார்த்தைகளில் அத்தனை நம்பிக்கை. பத்து நாளாக நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்த பிரம்மத்திற்கு எந்தவித களைப்போ வெறுப்போ சலிப்போ ஏற்படவல்லை.

ஸ்ரீராமா நாளை உனக்கு பட்டாபிஷேகம் என்று தசரத மன்னர் சொன்ன போதும் அடுத்த நாள் நீ 14 ஆண்டுகள் வனவாசம் போக வேண்டும் என்ற தாயின் கட்டளையை கேட்டபோதும் புன்னகை மாறாமல் அன்றலர்ந்த மலர் போல் திருமுகம் விளங்க நின்ற அண்ணல் ராமனைப் போல் இருந்தார் சுகப்பிரம்மம்.

sukaprimam

சுகப்பிரம்மம் நின்று கொண்டிருந்த இடத்திலேயே காவல் காத்துக் கொண்டிருந்த காவலாளிக்கு இதனை கண்டு தர்மசங்கடமாக இருந்தது பத்து நாளாக பசி தாகம் தூக்கம் ஓய்வு என்று இல்லாமல் நின்ற இடத்தில் நின்றிருந்த அவரைக் கண்டு தாங்க முடியாத வேதனை அடைந்த காவலாளி மன்னரிடம் போய் என்னை மன்னியுங்கள் பத்து நாளாக ஆடாமல் அசையாமல் சோறு தண்ணீர் உறக்கம் ஓய்வு இல்லாமல் நின்ற இடத்திலேயே நின்று நிற்கும் அவரை கூப்பிட்டு விசாரியுங்கள் இல்லை என்றால் என்னை வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யுங்கள் அவரை பார்க்கும் பொழுதெல்லாம் தினமும் உண்டு உறங்கி ஓய்வு எடுக்கும் எனக்கு சித்திரவதையாக இருக்கிறது என்று சொல்லி கண்ணீர் வடித்தான். கவலைப்படாதே இன்று பார்க்கிறேன் என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஜனக மகாராஜா. காவலாளி போனாதும் புரோகிதர் சதாநந்தரை அழைத்து சதானந்தரே.. நான் சொன்ன ஏற்பாடுகள் எந்த நிலையில் உள்ளன என்று கேட்டார் ஜனக மகரிஷி.

ஏற்பாடுகள் நீங்கள் சொன்னபடி தயாராக இருக்கின்றன என்றார் சதானந்தர்.

என்ன ஏற்பாடு என்றால் சுகரின் மனக் கட்டுப்பாட்டை பரிசோதிக்கும் ஒரு பரிட்சை.

நீண்ட சாலையை குண்டும் குழியுமாக வெட்டிப்போட்டு கால் வைத்து நடந்தால் தடுக்கி தடுமாறி விழும் அளவுக்கு அதை சீர் கெடுத்து இருபுறத்து வீடுகளில் மாடிகளிலும் அழகிய ஆடல் மங்கையரை கவர்ச்சி தெரியும்படி ஆடை அணிவித்து ஆடிப்பாடி அடுத்தவர் மனதை கவரும் இளமை குறும்புகள் செய்யச் சொல்ல வேண்டும். என்றும் அந்த நேரம் பிரம்மத்தின் கையில் விளிம்பில்லாத ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நிரப்பி அதை சுகபிரம்மத்தின் கைகளில் ஏந்திக்கொண்டே குண்டும் குழியுமாக இருந்த தெரு வழியாக குறிப்பிட்ட நேரத்திற்குள் நடந்து அந்த தெருவை தாண்டி வர வேண்டும் கையிலிருக்கும் எண்ணெய் ஒரு துளி கூட சிந்தக்கூடாது அப்படி சிந்தினால் பிரம்மத்தின் பின்னால் உருவிய வாளுடன் வரும் வீரன் அவர் கழுத்தை வெட்டி விடுவான். இந்த நிபந்தனையை சொன்னதும் சுகப்பிரம்மம் மகிழ்ச்சியடைந்து ஏற்றுக்கொண்டு குண்டும் குழியுமாக இருந்த அந்த வீதி வழியே நடந்தார்.

மேலே மாடியில் கவர்ச்சியாக ஆடிப்பாடும் பாடல் மங்கையர் அவர்களின் ஆசையை தூண்டும் மெல்லிய ஆடைகள் இனிமையாக கேட்கும் இசைக்கருவிகள் பின்னால் தலைமீது உருவிய வாளுடன் வரும் காவலன் இத்தனை இருந்தும் பிரம்மத்தின் மனம் ஒரே நிலையில், கையில் இருக்கும் வாணலியில் உள்ள எண்ணெயில் சிந்தக் கூடாது என்பதிலும் கால்நடை தடைபட்டாலும் சமாளித்து குறிப்பிட்ட நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்பதிலும் இருந்தது. அவருக்கு இலக்கு நிர்ணயத்த இடத்தில் ஜனக மகாராஜா நின்று கொண்டிருந்தார். சொன்னபடி சுகப்பிரம்மம் செயலை நிறைவேற்றியதும் பெருமகிழ்ச்சி அடைந்தார் ஜனகர்.

குருதேவா இனி எனக்கு ஞானப் பாடம் கற்றுத் தருவீர்களா என்று ஜனக மன்னரின் திருவடிகளில் விழுந்து கை கூப்பி அடக்கத்துடன் கேட்டார் சுகப்பிரம்மம்.

இனிமேல் நீ கற்பதற்கு என்ன இருக்கிறது கற்க வேண்டியது எல்லாம் கற்று விட்டாயே என்றார் ஜனக மன்னர். புரியாமல் அவரை நோக்கினார் சுகப்பிரம்மம்.

ஜனக மன்னர் புன்னகையுடன் சொன்னார் மனதை ஒருமுகப்படுத்தும் கலையில் ஒருவன் தேர்ந்து விட்டால் அவன் கற்கவேண்டிய கலைகளே உலகத்தில் இல்லை உனக்கு ஒரே குறி ஒரே எண்ணம். அந்த குண்டும் குழியுமாக இருந்த நடைபாதையும் மாடியில் பருவ கவர்ச்சி காட்டி பாடி ஆடிய ஆடல் மங்கையும் மாற்றவில்லை உன் குறிக்கோள் சேர வேண்டிய இலக்கை அடைய கொடுத்த கெடுவில் கையில் ஏந்திய எண்ணை நழுவி சிறிதும் சிந்தக் கூடாது என்ற கவனத்தில் ஒருமுகப்பட்டது ஆகியன எல்லாம் பிரம்ம நிலையை அடைபவரால் தான் முடியும். நீ சாதித்தாய். நீ சுகப்பிரம்மம் அதாவது உன் பெயரில் சுகம் என்ற சுகத்தை குறிக்கும் வார்த்தை இருந்தாலும் உன் மன நிலையில் ஆசை அணுவளவும் இல்லை நீ போகலாம் உனக்கு எல்லா கலைகளிலும் தேர்ச்சி வந்துவிட்டது என்றார்.

தாங்கள் கூறினால் ஏற்க வேண்டும் ஏற்கிறேன் ஒரு சிறு விண்ணப்பம் என்றார் சுகர்.

என்ன என்றார் ஜனகர்

குருதட்சினை என்ன தரவேண்டும் எனக்கேட்டார் சுகர்.

பூரண ஞானியான ஜனகமகரிஷி வாய்விட்டு சிரித்தார். குருதட்சிணை வாங்கிக் கொண்டு தானே உனக்கு பாடம் கற்றுக் கொடுத்தேன் என்றார் ஜனகர். அதன் உள்ளர்த்தம் புரியாமல் ஜனக மன்னரைப் பார்த்தார் சுகர். நீ வந்தவுடன் உன்னை இருக்க சொல் என்று வாசலில் இருக்க சொன்னேன். நீ எதுவும் கேட்காமல் இருந்த இடத்தை விட்டு அசையாமல் பசி தூக்கம் இல்லாமல் ஓய்வில்லாமல் நின்றாயே அதுதான் நீ எனக்குத் தந்த குருதட்சிணை என்றார்.

இதுவரை எந்த குருவும் இப்படி ஒரு தட்சிணையை சிஷ்யனிடமிருந்து பெற்றதில்லை. உலகத்தில் யாரும் இப்படி குருதட்சிணையை கற்றுக் கொடுப்பதற்கு முன்பே வாங்கி கொண்டதில்லை.

சிஷ்யர்களின் தைரியத்தையும் வலுவையும் உறுதியையும் பரிசோதிக்க குரு வைக்கும் பரிட்ஷையானது மிகவும் கடுமையானதாக இருந்தாலும் அதை சிஷ்யர்கள் தலைமேற்கொண்டு செய்யும்போது அவர்கள் சிறந்த பலனை பெறுகிறார்கள்.

மற்றுமொரு குருதட்சிணை

சாந்தீபனி முனிவர் ஆசிரமத்துக்கு கிருஷ்ணரும் பலராமனும் குருகுல பயிற்சிக்காக வந்தார்கள். குருதேவர் அவர்களை வரவேற்று மாணவர்களுடன் உட்கார வைத்தார். சாந்தீபனி முனிவரின் பத்தினி அவருக்கு இரவு பணிவிடை செய்ய அருகில் வந்தார். குருதேவர் குருகுலத்தில் அவதார கிருஷ்ண பலராமர் கல்வி கற்க வந்ததை பெரும் பாக்கியமாக கருதி மனைவியிடம் சொன்னார். இந்த குருகுலம் மிகப்பெரும் பாக்கியம் செய்திருக்கிறது. கிருஷ்ண பலராமர் வசுதேவ மைந்தர்கள் இங்கே கல்வி கற்க வந்திருக்கிறார்கள் என்று பெருமிதத்துடன் சொன்னார். அப்போது அவள் கண்களில் கண்ணீர் விடுவதைப் பார்த்த குரு ஏன் கண்ணீர் என்று கேட்டார் என் மகன் நினைவு வந்துவிட்டது அவன் இன்று உயிரோடு இருந்தால் அவதார குழந்தைகள் நம் ஆசிரமத்திற்கு கல்வி கற்க வந்திருப்பதை கண்டு எப்படி எல்லாம் ஆனந்தப் படுவான் என்றாள்.

Krishna-balaramar

இரண்டு வருடங்களுக்கு முன் பிரபாச ஷேத்திரத்தில் கடலில் நீராடும் பொழுது அவர்கள் மகனை கடலலைகள் இழுத்துக்கண்டு போய் விட்டன. தேடிப் பார்த்தார்கள் உடல் கிடைக்கவில்லை. தன் மகனுடன் கடலில் விழுந்து இறந்து விடுவதாக கூறி கடலில் விழப்போனவளை வெகு சிரமப்பட்டு முனிவரும் உடன் இருந்தவர்களும் காப்பாற்றினார்கள். குருகுலத்திற்கு வரமாட்டேன் என்ற குரு பத்தினியை ஏன் என்று கேட்டார் முனிவர். அங்கு படிக்கும் மாணவர்களை பார்த்தால் எனக்கு என் குழந்தையின் நினைவு வரும் எனக்கு தாங்காது நெஞ்சு வெடித்துவிடும் நெஞ்சு வெடித்து சாவதைவிட கடலிலேயே மகனுடன் போகிறேன் என்று அழுதாள். பெற்ற தாய் அல்லவா பிள்ளையை பறிகொடுத்த துயரம் மற்றவர் சமாதானத்தால் தீருமா? பூமிக்குள் மறைந்து கிடக்கும் பூகம்பம் போல் அவள் நெஞ்சை குடைந்து கொண்டிருக்கும். புத்திர சோகம் எத்தனை நாள்தான் பிரபா ஷேத்திரத்தில் தங்கியிருப்பது குருகுலத்தில் படிக்கும் மாணவர்கள் என்னாவது மனைவியை வற்புறுத்தினார் முனிவர். வீட்டுக்கு வருகிறேன் ஆனால் குருகுலத்தை மூடி விடுங்கள் அங்கு படிக்கும் மாணவர்கள் எனக்கு என் மகனை நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள் என்றாள்.

ஆனால் குருகுலத்தின் மாணவர்களின் நிலை என்னாவது கற்றுக் கொடுப்பதை நிறுத்தினால் பாவம் என்று சொல்லிப் பார்த்தார் முனிவர் தன் மகனை பறிகொடுத்தது என்ன பாவம் என வாதாடினாள்.

நாம் முன் செய்த பாவத்தினால்.. இன்று செய்யும் பாவம் நாளை நம்மை துரத்தும் என்று சொன்னார். பழைய காலத்து பெண்மணி மறுபிறவி உள்ள நம்பிக்கை அவரை சிந்திக்க வைத்தது சரி என்று உடன் வந்தாள் முன்பிறவியில் செய்த பாவம் மகனைப் பறிகொடுத்து தீர்த்துக் கொண்டோம் இந்த பிறவியில் குருகுலத்தை மூடி அந்த பாவத்தை அனுபவிக்க வேண்டாம் என்று மனதை கல்லாக்கி கொண்டாள். நாட்கள் செல்லச் செல்ல ஒருவாறு மனம் தேறி இயல்பு நிலைக்கு வந்து விட்டாள். எல்லா மாணவர்களும் தன் மகன் போல் நினைக்கும் பக்குவமும் வந்துவிட்டது.

அப்படி இருந்த நிலையில்தான் குருகுலத்திற்கு கிருஷ்ண பலராமர் வந்தார்கள். அவர்கள் இருவரும் மற்ற மாணவர்களிடம் இருந்து ஒரு தெய்வ களையுடன் இருந்தார்கள் மற்ற மாணவர்களுக்குக் கொடுக்கப்படும் சலுகைகள் தான் அவர்களுக்கும் ஆசிரமத்தில் வழங்கப்பட்டன ஆனாலும் மற்ற மாணவர்களும் குருமாதாவும் அவர்களை தெய்வீக குழந்தைகள் என்ற பயத்துடனேயே பார்த்தார்கள். பழகினார்கள் இது அந்த தெய்வீக பாலகர்களுக்கு தெரிந்துதான் இருந்தது அதை கண்டுகொண்டதாக புரிந்து கொண்டதாகவும் காட்டிக்கொள்ளாமல் சகஜமாக பழகினார்கள். குருகுல பணிகள் மற்ற மாணவர்களைப் போலவே ஈடுபாட்டுடன் செய்தார்கள். குருகுலத்தை கையில் துடைப்பம் எடுத்து பெருக்கினார்கள். நீர் தெளித்தார்கள் ஆசிரமத்தில் தேவைப்படும் தண்ணீரை நிரப்பிக் கொண்டு வந்தார்கள் குரு மாதாவுக்கு அடுப்படி வேலைகளில் காய்கறி நறுக்கிக் கொடுத்து கொல்லைப் புறத்தில் வளர்க்கப்படும் கீரைகளை ஆய்ந்து நீரூற்றி பூஜைக்கு மலர்கள் குருவின் உடைகளைத் துவைத்து உலர்த்தி மடித்து வைப்பார்கள். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் குரு மாதாவிற்கு ஆச்சரியமாக இருக்கும் காகாசுரன் சகடாசூரன் முதலிய அசுரர்களை எல்லாம் கொன்றவன் காளிங்கன் மீது நடனமாடியவன் கோவர்த்தன மலை கொண்டு காத்தவன் இப்படி எல்லாம் வேலை செய்கிறானே என்று பிரமிப்போடு அவனைப் பார்ப்பார்கள். அவர்களால் ஆகாத காரியங்களை கிடையாதா என்று தன் கணவரிடம் கேட்டாள். குரு மாதாவின் மனதில் ஒரு எண்ணம் தோன்றலாயிற்று. தெய்வ குழந்தை நாம் குருகுலத்தில் படிக்கிறான் குருகுலம் முடிந்து கிருஷ்ணர் கிளம்பும் வேளையில் குருதட்சிணையாக அவள் இதை கேட்டாள். இதேபோல் கடலில் மூழ்கி உயிர் விட்டதையும் அந்த குழந்தையை திரும்பக் கொண்டுவர வேண்டும் என்றாள்.

நீங்கள் என் ஆசிரமத்திற்கு படிக்க வந்ததே என் நான் செய்த பாக்கியம் என்னை பெருமைப்படுத்த கூடிய விஷயம் என்று குரு கூறினார் ஆனாலும் குரு தட்சிணை தர வேண்டிய ஒன்று என் என்றார் கிருஷ்ணர் அதனை வற்புறுத்தினார். கிருஷ்ணரும் எனக்கு இரு தாய்கள் ஏற்கனவே உண்டு இப்போது தாங்கள் மூன்றாவது தாய் என குரு மாதாவை வணங்கினார்.

கிருஷ்ணரும் எமலோகத்திற்கு போய் எமனிடமிருந்து குருவின் மகனை உயிருடன் கொண்டு வர சென்றார்.

எமன் தயங்கினான் இயற்கை நீதியை நீங்களே மீறலாமா என்று கேட்டான் எமதர்மராஜன்.

நீயே மீறி இருக்கும்போது நான் மீற கூடாதா என்று கேட்டார் கிருஷ்ணர் .

நான் மீறினேனா என்றான் எமன். சாவித்திரி அவள் கணவன் சத்தியவானின் உயிரை திருப்பி கொடுத்தாயே, அதற்கு மேல் எமன் எந்த பதிலும் சொல்லவில்லை. இறந்துவிட்ட குரு மைந்தனை உயிருடன் மீட்டு குருகுலம் வந்தவுடன் குருமாதா மெய்சிலிர்த்தாள். என் தெய்வமே என்று கிருஷ்ணனின் காலில் விழ அனுமதி கேட்டாள். திருவடிகளில் விழுந்தாள். நீங்கள் என் தாயைப் போல என்றான் கிருஷ்ணன்.

குருவிற்கு குரு தட்சிணை என்பது கொடுக்க வேண்டியது அவசியம் ஆனால் மாணவனின் சக்தி அறிந்து அதனை குரு கேட்கவேண்டும்.

Translate »