
ஒரு சிஷ்யர் ஆச்சார்யாளிடம் கோபத்தை வெல்வது எப்படி என கேட்டதற்கு ஜேஷ்ட மகாசன்னிதானம் கூறிய அருளுரை
கேள்வி: கோபத்தை எப்படி வெல்வது?
ஆச்சார்யாள்: இதனால் எனக்கு எவ்வித பிரயோஜனம் இருக்கப்போவதில்லை மற்றொருவன் என்னை திட்டுகிறான். அதனால் எனக்கு ஏதாவது நஷ்டம் ஏற்படுகிறதா? ஒன்றுமில்லையே அதனால் நான் ஏன் கோபத்திற்கு இடம் கொடுக்க வேண்டும் இவ்வாறு நினைத்தால் கோபம் அடங்கிவிடும்.
கேள்வி: இவ்வாறு நினைப்பது மட்டும் போதுமா
ஆச்சார்யாள்: இல்லை மேற்கொண்டு யோசிக்க வேண்டும் இப்பொழுது நான் கோபத்தினால் ஒருவனை திட்டி விட்டேன் என்றால் நான் பெரிய காரியத்தை சாதித்து விட்டதாக தோன்றலாம். உண்மையில் நான் என் கோபத்திற்கு அடிமையாகி விட்டேன் அல்லவா. ஒரு எதிரியை வெல்ல சென்று விட்டு இன்னொரு பெரிய எதிரியால் வெல்லப்பட்டு விட்டேன். கோபம் என்னை நாசம் செய்கிறது என் புத்தியை கெடுத்துவிடுகிறது. எதை நான் செய்யக் கூடாது அதை செய்யத் தூண்டுகிறது. கோபத்திற்கு நான் ஏன் அடிமையாக வேண்டும்? மற்றொருவனை திட்டியதால் ஏற்படும் திருப்தியை விட கோபத்தை அடக்கியதால் திருப்பியும் அதிகமாக கிடைக்கும். இம்மாதிரி சிந்திக்கவேண்டும். கோபம் வருவதற்கு முன்பே சற்று கவனத்துடன் பார்த்தால் கோபம் வருகிறது என்று தெரியும். இதை தெரிந்து கொண்டால் அதன் பின் கோபத்தை அடக்க முயற்சி செய்யலாம். இம்மாதிரி தெரிந்த மறுகணமே பாதி கோபம் அடங்கிவிடும். பல மக்களுக்கு கோபம் வந்த பிறகே தெரியும். அவர்கள் வருமுன் அறிந்து கொண்டு நான் பொறுமைக்கு இடம் கொடுத்தால் எனக்குத்தான் ஸ்ரேயஸ். மேலும் கோபம் தேவையா? இவனை மன்னித்தால் நான் கோபத்தை வென்றது போல் ஆகும் அதுவே உத்தமமானது என்று சிந்திக்கலாம். அவ்வாறு சிந்திப்பதன் மூலம் கோபம் இறங்கிவிடும்.
கேள்வி: கோபத்தினால் ஆன்மீக வாழ்விற்கு இடையூறுகள் ஏற்படுமா?
ஆச்சார்யாள்: காமம் கோபம் லோபம் இவை மூன்றும் பகவான் பகவத்கீதையில் நரகத்தின் கதவுகள் ஆக கூறுகிறார். கோபம் வந்தவன்தான் என்ன செய்கிறான் என்று யோசிக்க மாட்டான். விபரீதமான செயல்களை செய்து விடுகிறான். அதனால் அவனுக்கு பாவம் ஏற்படுகிறது. பாவம் மூலமாக கோபம் ஒருவனை நாசமாக்கி விடுகிறது. ஆதலால் கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.
கேள்வி: கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றால் பிறரை கண்டிப்பதற்காக சத்தம் போடக்கூடாது என்று அர்த்தமா?
ஆச்சார்யாள்: கட்டளைகளை எங்கு கொடுக்க வேண்டுமோ அங்கு கொடுக்கலாம். அப்படி இல்லாவிட்டால் அலுவகங்களில் காரியங்கள் கோபம் வர வேண்டாம் என்று சொன்னால் மனதில் இவனை நான் துன்புறுத்த வேண்டும் பழிவாங்க வண்டும் என்ற எண்ணங்களுக்கு இடம் கொடுக்கக் கூடாது. முதலில் சாந்தமாக சொல்ல வேண்டும் அவ்வாறு நடக்காவிட்டால் கண்டிப்பாக இப்படித்தான் நடக்க வேண்டும் என்று சொல்லலாம். ஆனால் மனதிற்கு கோபத்திற்கு இடம் கொடுக்கக் கூடாது.