
யம் ஹி ரக்ஷிதுமிச்சந்தி புத்த்யா ஸம்யோஜயந்தி தம் II
நாம் நற்காரியங்களில் இயங்குவதற்கான பிரேரணையை இறைவன் கொடுக்கிறான்..
மனிதன் எந்தக் காரியத்தில் இறங்க விரும்பினாலும் அதற்கு முதலில் அவனது மனதில் அக்காரியத்தைப் பற்றிய ஓர் எண்ணம் தோன்ற வேண்டும்.
பிறகுதான் காரியத்தில் இறங்க முடியும். மனதில் எண்ணங்களைத் தோன்ற வைப்பதே இறைவன் தான்.. ஆகவே, இறைவன் இருக்கிறான் என்ற விஷயத்தில் யாருக்கும் சந்தேகமே தேவையில்லை..
எத்தனையோ மஹான்கள் இறைவனின் தரிசனத்தைப் பெற்றார்கள்.. நமக்கு அவனது தரிசனம் கிடைக்காததற்குக் காரணம், நாம் நம்முடைய முன்னோர்கள் கடைப்பிடித்த வழியை – ஸாதனையை – கடைப்பிடிக்காததேயாகும்..