கிருஷ்ண ஜெயந்தி: மதுராஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்…!

Published:

krish
krish

ஆதி சங்கராச்சாரியார் எழுதிய மதுராஷ்டகத்தின் பொருளை அனுபவித்து மதுராநாயகன் அருளை பெறுவோம்.

மதுராஷ்டகம்

அத‌ர‌‌ம் ம‌துர‌ம் வ‌த‌ன‌ம் ம‌துர‌ம்
ந‌ய‌ன‌ம் ம‌துர‌ம் ஹ‌ஸித‌ம் ம‌துர‌ம்
ஹ்ருத‌ய‌ம் ம‌துர‌ம் க‌ம‌ன‌ம் ம‌துர‌ம்
ம‌துராதிப‌தே அகில‌ம் ம‌துர‌ம்

உன்
இதழும் இனியது; முகமும் இனியது;
கண்கள் இனியது; சிரிப்பும் இனியது;
இதயம் இனியது; நடையும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

வசனம் மதுரம் சரிதம் மதுரம்
வஸ‌னம் மதுரம் வலிதம் மதுரம்
சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
சொல்லும் இனியது; குணமும் இனியது;
உடைகள் இனியது; உடலும் இனியது;
இயக்கம் இனியது; உலவல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

வேணுர்மதுரோ ரேணுர்மதுர:
பாணிற்மதுர: பாதௌ மதுரௌ
ந்ருத்யம் மதுரம் ஸ‌க்யம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
குழலும் இனியது; கால் தூசியும் இனியது;
கைகள் இனியது; பாதம் இனியது;
நடனம் இனியது; நட்பும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

கீதம் மதுரம் பீதம் மதுரம்
புக்தம் மதுரம் சுப்தம் மதுரம்
ரூபம் மதுரம் திலகம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
பாடல் இனியது; பட்டாடை இனியது;
உண்ணல் இனியது; உறக்கம் இனியது;
உருவமும் இனியது; திலகமும் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கரணம் மதுரம் தரணம் மதுரம்
ஹரணம் மதுரம் ரம‌ணம் மதுரம்
வமிதம் மதுரம் ஷமிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
குறும்பு இனியது; வெற்றி இனியது;
கள்ளம் இனியது; உள்ளம் இனியது;
எச்சில் இனியது; வெட்கம் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

குஞ்சா மதுரா மாலா மதுரா
யமுனா மதுரா வீசீ மதுரா
சலிலம் மதுரம் கமலம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

உன்
மணிகள் இனியது; மாலை இனியது;
யமுனை இனியது; அலைகள் இனியது;
தண்ணீர் இனியது; தாமரை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கோபி மதுரா லீலா மதுரா
யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
த்ருஷ்டம் மதுரம் சிஷ்டம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

உன்
தோழியர் இனியது; கொண்டாட்டம் இனியது;
கூடல் இனியது; குணமும் இனியது;
பார்வை இனியது; பாவனை இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

கோபா மதுரா காவோ மதுரா
யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர்மதுரா
தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
மதுராதிபதேரகிலம் மதுரம்

ஆயர் இனியது; ஆக்கள் இனியது;
செண்டை இனியது; பிறவி இனியது;
வீழல் இனியது; ஆழல் இனியது;
மதுரா மைந்தனே, எல்லாம் இனியது!

Related articles

Recent articles

spot_img