வீடு தேடி வந்த கண்ணன்!

dwarka
dwarka

துவாரகையிலிருந்து, 220 கி.மீ., தொலைவில் டாங்கேர் என்ற ஊரில், ராமதாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கண் இமைக்கும் நேரம் கூட, கண்ணனை மறக்காமல் பக்தி செய்பவர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து, அதில் தான் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு வந்தனர்.

ஒவ்வொரு ஏகாதசியும், வீட்டில் கண்ணனுக்குப் பூஜை செய்து, ஒரு சிலருக்காவது அன்னம் அளித்து, அதன்பின், துவாதசியன்று விரதம் முடிப்பது ராமதாசரின் வழக்கம்.

அதேபோல, ஒவ்வொரு ஆண்டும் நடந்தே போய், ஆடி ஏகாதசியன்று துவாரகையில், கண்ணனை தரிசித்து திரும்புவார். ஒரு சமயம், உடல்நிலை நோய்வாய்ப்பட்டிருந்ததையும் பொருட்படுத்தாமல், துவாரகைக்கு புறப்பட்டார் ராமதாசர்.

கால்வாசி தூரம் தான் போயிருப்பார் அவரால் பயணத்தை தொடர முடியவில்லை. வழியிலேயே இருந்த சிறுகோவில் மண்டபத்தில் உட்கார்ந்து விட்டார். துவாரகை பயணம் தடை பட்டு போனதை அவரால் தாங்க முடியவில்லை.

krish
krish

இதனால், மனம் கலங்கிய ராமதாசர், ‘கண்ணா… எனக்கு அருள் புரியக்கூடாதா…’ என, வேண்டியபடி அப்படியே தூங்கி விட்டார். அவருடைய கனவில் காட்சியளித்த கண்ணன், ‘ராமதாசா… கவலைப்படாதே! என்னுடைய தேர் இங்கு வரும்; அதில் நான் இருப்பேன்…’ என்றார்.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கனவு கலைந்து ராமதாசர் கண்களை திறந்து பார்த்தார். அங்கே அழகான தேர் ஒன்றில், துவாரகநாதரின் விக்கிரகம் இருந்தது. ராமதாசர் மெய்சிலிர்த்து, கண்ணனை வணங்கியவர், தேரில் ஏறி, விக்கிரகத்துடன் வீடு திரும்பினார்.

வீட்டு முற்றத்தில், விக்கிரகத்தை எழுந்தருளச் செய்து, பஜனை செய்ய துவங்கினார். இந்நிலையில், துவாரகையில், கண்ணன் விக்கிரகத்தை காணாமல் திகைத்த அர்ச்சகர்களும், கோவில் நிர்வாகிகளும் தகவலறிந்து, ராமதாசரின் வீட்டிற்கு வந்து, விக்கிரகத்தை கைப்பற்றினர்.

அப்போது ராமதாசர், ‘கண்ணா… உன்னை நானாக தூக்கி வரவில்லை; நீயாகத் தான் என்னிடம் வந்தாய். இப்போது, உன்னை பிரிந்து நான் எப்படி உயிர் வாழ்வேன்…’ என்று கதறி, விக்கிரகத்தின் பீடத்தில் தலையை முட்டி அழுதார். அவரது உள்ளத்தில் தோன்றிய கண்ணன், ‘ராம தாசா… என் எடைக்கு எடை, தங்கம் தருவதாக சொல்; அர்ச்சகர்கள் தந்து விடுவர்….’ என்றார்.

அவ்வாறே ராமதாசரும் சொல்ல, அர்ச்சகர்களும் ஒப்புக் கொண்டனர். தராசு ஒன்றில், ஒரு தட்டில் கண்ணன் விக்கிரகத்தை வைத்தனர்.

மற்றொரு தட்டில், தன் மனைவியின் தாலி, மூக்குப் பொட்டு இரண்டையும் வைத்தார் ராமதாசர். இதைக் கண்ட அனைவரும் ஏளனமாக சிரித்தனர்.

ALSO READ:  சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ராமதாசரோ கண்களை மூடி கண்ணனை தியானித்தார். அப்போது, ராமதாசரின் உள்ளத்தில் இருந்த கண்ணன், ‘ராமதாசா… இன்னுமா என்னை நீ, புரிந்து கொள்ளவில்லை?’ என்றார்.

அதைக்கேட்டதும், ஒரு வினாடியில் ராமதாசருக்கு, நாரதர், ருக்மணி மற்றும் சத்யபாமா ஆகியோர் கண்ணனை வைத்து நடத்திய துலாபார நிகழ்வு நினைவுக்கு வந்தது.

அவர், ‘விறுவிறு’ வென்று ஓடி, தான் வழிபட்டு வந்த துளசிச் செடியில் இருந்து இரண்டு துளசி இலைகளை எடுத்து வந்து, தராசு தட்டில் வைத்தார்.
அதன்பின் மனைவியுடன் சேர்ந்து தராசை வலம் வந்து வணங்கினார். தராசு தட்டுகள் இரண்டும் சமமாக ஆயின.

அர்ச்சகர்கள் உட்பட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்து, ராமதாசரை வணங்கினர். துவாரகா ராமதாசர் எனும் அந்த பக்தர் பாடிய பாடல்கள், இன்றும் துவாரகையில் பாடப்படுகின்றன. அன்புடன் அழைத்தால் அடியாரை தேடி, ஆண்டவனே வருவான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories