ஓர் அரசன் முள் கிரீடத்தைத்தான் சுமந்து கொண்டிருக்கிறான் என்பதை நாம் அறிய வேண்டும். ஒருவன் எத்தனை பெரிய அரசனோ அத்தனை பெரிய கஷ்டம் அவனுக்கு இருக்கும்! அவனுக்கு பொறுப்புகளும் கடமைகளும் மிக அதிகம்.
எனவே ஓர் அரசன் மிக சந்தோஷத்துடனிருக்கிறான் என்று சொல்ல முடியாது.
யாருக்கு நிலையான சந்தோஷம் இருக்கும் என்றால், “பிறவி இல்லாதவனுக்குத்தான்” என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
எப்படி என்றால் பிறந்தவன் ஒவ்வொருவனும் இறக்கும் வரை தொடர்ச்சியாக துன்பத்தில்தான் இருப்பான்.
குழந்தைப் பருவத்தை எடுத்துக் கொண்டால் தனக்கு வேண்டியதை அழுதுதான் அது பெற வேண்டியுள்ளது. பின்னர் பள்ளிப் பருவத்திலும் துன்பம்தான்.
சில வருடங்களுக்குப் பிறகு விவாஹம் நடக்கிறது. விவாஹமானவர்கள், “விவாஹத்திற்கு முன் சந்தோஷமாகத் தான் இருந்தோம். இப்பொழுது அபப்டி இல்லை” என்று கூறுவதை நாம் கேட்டிருக்கிறோம்.
பிறகு, முதுமைப் பருவத்தில் கவலை, கஷ்டம் போன்றவை ஒருவனை ஆட்கொண்டு விடுகின்றன. இப்படியாக இன்பத்திற்கு வழியே இல்லை.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்