ஞான அக்னியானது கர்மாக்களின் பலன்களை எரிக்கவல்லது. பிறப்பும் இறப்பும் இருக்கும் வரை கஷ்டங்களும் துக்கங்களும் ஒருவனுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.
அவை இருக்கும் வரை முக்தி என்பதுமில்லை. எனவே, ஆத்மஞானமே முக்திக்கு வழி ஆதலால் அந்த ஞானம் மனிதனால் அடையப்பட வேண்டியதாகும்.
அப்பொழுதுதான் நமது வாழ்க்கை பூரணமடையும். அப்படிப்பட்ட ஞானம் அடைந்தவன் பிறப்பு-இறப்புக்களால் பாதிக்கப்படுவது இல்லை.
அவன் முக்தனாகிறான். அப்படிப்பட்ட ஞானத்தை அடையாதவன் பந்தத்தில் சிக்கிக் கொள்கிறான். எனவே ஆத்ம ஞானம் அடைவதே நமது குறிக்கோளாக இருக்க வேண்டும்.
ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்