பரம்பொருள்: ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஸ்ரீசிருங்கேரி மகிமை
bharathi theerthar
bharathi theerthar

இருப்பது ஒரே ஒரு பொருள்தான். அதுதான் பரம்பொருள் அதுதான் பிரஹ்மம்.

ஜீவராசிகளே ஜீவாத்மாக்கள் ஆகும். “அதன் ஸ்வரூபமென்ன?” என்று கேட்டால், “அது பரமாத்மாவைத் தவிர வேறில்லை” என்பதே பதிலாகும்.

அப்படியென்றால், “நாமும் கடவுளும் ஒன்றா?” என்று கேட்டால், அப்படிச் சொல்வதிற்கில்லை. பரம்பொருள், உருவம் மற்றும் அருவம் என இரண்டு வகையாக உள்ளது.

உருவம் உள்ளதை “ஸகுணம்” என்றும் உருவமற்றதை “நிர்குணம்” என்றும் கூறுகிறோம். நாம் கடவுள் என்று கூறி வழிபடுவது சகுண பிரஹ்மத்தைத்தான் உருவமற்றதாகவும் குணமற்றதாகவும் உள்ளதே நிர்குணம் என்றும் நிராகாரம் என்றும் கூறப்படுகிறது.

நாம் தினமும் வழிபடும் உருவக்கடவுள் என்பது பிரஹ்மத்தைக் குறிப்பதல்ல என்ற பாவனையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்பொழுதுதான் அத்வைத நிலை ஏற்பட்டு பயமற்ற தன்மை ஏற்படும். த்வைதம் பற்றிய பயமிருக்க வேண்டியதில்லை.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்*

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.