ஆதிசங்கரர் அருளிய சிவநாமாவல்யஷ்டகம்
1.ஹேசந்த்ரசூட மதனாந்தக சூலபாணே
ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ!
பூதேச பீதபயஸ¨தன மாமநாதம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹே சந்த்ரனை தலையில் அணிந்தவரே!மன்மதனை அழித்தவரே. சூல பாணியே ஸ்தாணுவாய் நின்றவரே. மலைக்கு அரசே. மலைமகள் மனாளனே. மகேசனே. சம்போ. பூதங்களின் தலைவரே. பயந்தவர் பயம் களைபவரே. ஸம்ஸாரம் என்ற துன்பக்காட்டிலிருந்து அநாதனான என்னைக் காத்தருளும்.
2.ஹேபார்வதீஹ்ருதயவல்லப சந்த்ரமௌலே
பூதாதிப ப்ரமதநாத கிரீச சாப!
ஹேவாமதேவ பவ ருத்ர நிநாகபாணே
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹே பார்வதீகாந்த!ச்ந்த்ரமௌலே!வாமதேவ!பிரமதநாதனே!மேருவை வில்லாகக் கொண்டவரே. பவனே. ருத்ரனே. பிநாகத்தை வில்லாகக் கொண்டவரே. ஸமமஸாரமாகிய து:கப்பிடியிலிருந்து என்னைக் காப்பாயாக.
3.ஹேநீலககண்டவ்ருஷபத்வஜ பஞ்சவர்த்ர
லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ I
ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாயதே மாம்
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹே நீலகண்டனே. காளைக்கொடியோனே. ஐந்துமுகங்கள் கொண்டவனே. உலகக் கடவுளே. ஆதிசேஷனை வளையாகக் கொண்டவனே. ப்ரமதத்தலைவனே. சர்வனே. ஜடாபாரம் தாங்கியவனே. பசுபதியே. கிரிஜாபதியே. என்னை உலகியல் து:க்கத்திலிருந்து காத்தருள்வாயாக!
4.ஹே விச்வநாத சிவ சங்கர தேவ தேவ
கங்காதர ப்ரமதநாயக நந்திகேச I
பாணேச்வராந்தரியோ ஹரலோக நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹே விசிவநாத, சிவ. சங்கர. தேவ தேவ. கங்காதர. பிரமத நாயக. நந்திக்கு ஈசனே. பாணாஸுரன், அந்தகாஸுரன் ஆகியோரை அழித்தவரே. ஹரனே உலக நாதனே என்னை ஸம்ஸாரதுக்கத்திலிருந்து காத்தருள்வீராக!
5.வாராணஸீபுரபதே மணிகர்ணிகேச
விரேச தக்ஷமககால விபோ கணேச!
ஸர்வஜ்ஞ ஸர்வஹ்ருதயைகநிவாஸ நாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
வாராணஸீ நகரத்தின் நாயகநே!மணிகர்ணிகைத் தலைவனே. வீரர்களின் தலைவனே. தக்ஷயாகத்தை குலைத்தவனே. விபோ. ப்ரமத கணங்களின் தலைவனே. எல்லாம் அறிந்தவனே. எல்லோர் ஹ்ருதயத்திலும் குடி கொண்டவனே. நாதனே என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருளவேணுமே.
6.ஸ்ரீமன்மஹேச க்ருபாமய ஹேதயாலோ
ஹேவ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத!
பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஸ்ரீ மஹாதோவ, கருணையே உருவானவரே. ஆகாயத்தைக் கேசமாகக் கொண்டவரே. நீலகண்டரே, கணங்களுக்கு நாதரே. விபூதி பூசியவரே. மண்டையோடு மாலையணிந்தவரே. என்னை ஸம்ஸாரத் துன்பத்திலிருந்து காக்க வேண்டும்.
7.கைலாஸசைல விநிவாஸ வ்ருஷாகபே ஹே
ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ!
நாராயணப்ரிய மதாபஹ சக்திநாத
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
கைலாயமலையில் வாழும் ஹே சிவபிரானே. யமனை வென்றவனே. முக்கண் உடையானே. மூவுலகிலும் வாழ்பவனே. விஷ்ணுவின் அன்பனே. செருக்கு களைபவனே. சக்தியின் நாதனே. என்னை துன்பக்காட்டிலிருந்து காத்தருள வேண்டுமே!
8.விச்வேச விச்வபவநாசக விச்வரூப
விச்வாத்மக த்ரிபுவனைக குணாதிகேச!
ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
ஸம்ஸாரது:கஹநாத்ஜகதீச ரக்ஷ!!
ஹே உலக நாயகனே. உலகில் பிறப்பதை நீக்குபவனே உலகே உருவானவனே. மூவுலகிலும் குணம்மிக்கவரில் மேலானவனே ஹேவிச்வநாத. கருணையுருவானவனே. எளியோருக்குப் பங்காளனே. என்னை உலகியல் துன்பத்திலிருந்து காத்தருள வேண்டுமே!
9.கௌரீவிலாஸபவனாய மஹோச்வராய
பஞ்சாநநாய சரணாகத கல்பகாய!
சர்வாய ஸர்வஜகதாமதிபாய தஸ்மை
தாரித்ர்யது:கதஹநாய நம:சிவாய!!
பார்வதியின் கேளிக்கையிடமேயான மஹேச்வரனுக்கு சிவனுக்கு நமஸ்காரம். அவர் ஐந்து முகமுடையவர், சரணம் என்று வந்தவருக்கு கல்பகமரம் போன்றவர். அகில உலகுக்கும் தலைவர். அவர். ஏழ்மை, துன்பங்களைக் களைபவரும் அவரே.
சிவநாமாவல்யஷ்டகம் முற்றிற்று.