இன்று தன்வந்திரி ஜெயந்தி!

images 50 1 - 2026

ஐப்பசி மாதம் தேய்பிறை திரியோதசி அன்று தன்வந்திரி பகவான் பூமியில் அவதரித்த நாளாக சொல்லப்படுகிறது.இதை தன்வந்திரி பகவானின் பிறந்தநாள் என்றும் சொல்லுவார்கள். இந்த தன்வந்திரி ஜெயந்தியானது இன்று மாலை 6.00 மணியிலிருந்து நாளை மாலை 6.00 மணி வரை இருக்கின்றது.சில இடங்களில் மாலை 5.49மணிவரை திரியோதசி இருக்கும்.

அக்22 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கே தொடங்கக்கூடிய இந்த தன்வந்திரி ஜெயந்தி, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு முடிவடைகிறது.இந்த நாளில் நோய் நொடி தீர நாம் தன்வந்திரி பகவானே எப்படி வழிபாடு செய்வது என்பதை பற்றிய சுலபமான வழிபாட்டினை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.இன்று மாலை 6.00 மணிக்குள் இந்த வழிபாட்டை செய்து முடித்துக் கொள்ளலாம்.

வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து சுவாமி படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் தன்வந்திரி பகவானின் படம் இல்லை என்றாலும் பரவாயில்லை. பெருமாளின் படத்தின் முன்பு இந்த வழிபாட்டை செய்யலாம்.ஒரே ஒரு டம்ளர் தண்ணீரை பூஜை அறையில் வைத்துவிட்டு, அந்த டம்ளர் தண்ணீரில் ஒரே ஒரு துளசி இலை போட்டுக் கொள்ளுங்கள். உடல் நலம் சரியில்லாமல் இருப்பவர்கள் எந்த தண்ணீரை குடிப்பார்களோ சுடு தண்ணீர், பச்சை தண்ணீர் எது வேண்டும் என்றாலும் வைத்துக் கொள்ளலாம். எந்த டம்ளரில் வேண்டும் என்றாலும் தண்ணீரை வைத்து கொள்ளுங்கள். சுவாமிக்கு முன்பு அமர்ந்து கொள்ளுங்கள்.தன்வந்திரி பகவானை மனதார வேண்டி, நோய் நொடி தீர வேண்டும் மருந்து மாத்திரை சாப்பிடுவது குறைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். அடுத்து பின் சொல்லக்கூடிய மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். நோய் தீர்க்கும் தன்வந்திரி பகவான் மந்திரம்

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய! தன்வந்தரயே!
அம்ருத கலச ஹஸ்தாய!
ஸர்வாமய விநாசநாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மகாவிஷ்ணவே நம!

இந்த மந்திரத்தை 27 முறை உச்சரிக்க வேண்டும்.பின்பு சுவாமிக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து விட்டு பூஜையை நிறைவு செய்துவிட்டு, இந்த தண்ணீரை நோய் நொடி உள்ளவர்கள் குடித்து விட வேண்டும்.

உங்களுடைய வீட்டில் உங்களுடைய உறவினர்களுக்கு யாருக்கேனும் தீராத நோய் உள்ளது. படுத்த படுக்கையாக இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்காக, நீங்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு இந்த தண்ணீரை ஒரு சொட்டு அவர்களுக்கு கொடுத்தால் கூட போதும். தீராத நோய் படிப்படியாக தீர தொடங்கும்.

உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், கர்ம வினையால் நோய் நொடியால் அவதிப்பட்டருபவர்கள் என்று எவ்வளவு பெரிய வியாதியால் கஷ்டப்பட்டு வருபவர்களையும் குணப்படுத்தக் கூடிய சக்தி இந்த தன்வந்திரி வழிபாட்டிற்கு உண்டு. இந்த தன்வந்தி பகவானை மருத்துவ கடவுள் என்றே சொல்லுவார்கள். இவ்வளவு அற்புதம் வாய்ந்த இந்த நாளில் தன்வந்திரி பகவானை கோயிலில் சென்று தரிசனம் செய்ய முடியாமல் போனாலும் இருந்த இடத்தில் பிரார்த்தனை செய்து ஆசி பெறலாம். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றால் தன்வந்திரி பகவானை தினமும் நினைத்து வழிபாடு செய்வது சிறப்பு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories