இந்து மதம் உலகம் முழுவதும் பரவிய ஒரு மதம் என்பதும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிய மதம் என்றும் நம் முன்னோர்கள் உறுதியாக கூறியுள்ள நிலையில் அதை நிரூபிப்பது போல் ஆங்காங்கே சான்றுகள் கிடைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் இந்தோனேஷியாவில் இந்து கடவுள் தோண்ட தோண்ட கிடைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்தோனேசியாவின் பல்வேறு பகுதிகளில் புதையுண்ட பண்டைய இந்து கோவில்களும், கடவுள்களும் கண்டெடுக்கப்படுவது அன்றாட நிகழ்வாகி உள்ளது. அந்த வரிசையில் சமீபத்தில் இந்தோனேசிய அகழ்வாராய்ச்சி துறையினர் பெரிய விநாயகர் சிலை ஒன்றை தேசா ஈரொனயன் என்கிற இடத்தில் கண்டெடுத்தனர். இப்போது அந்த சிலை ஜோக்ஜகர்தா தேசிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்துக்களின் ஆதிக்கத்தில் இந்தோனேசியா இருந்தது என்பதை பூதகரமாக்க பூமியில் இருந்து ஒவ்வொரு இரகசியமாக வெளிவந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது



