கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்

Published:

Arunachal - 2026

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்” – என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள் தான்.

அருணாசலக் கவிராயர் தில்லையாடி என்ற ஊரில் 1634இல் பிறந்தார். தருமபுர ஆதின வித்வானாக இருந்தார்.

அம்பலவானக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். இவரிடம் தான் கம்பராமாயணம் நன்கறிந்த அறிஞராக விளங்கிய சட்டநாதபுரம் கோதண்டராமய்யர், வெங்கட்ராமய்யர் என்ற சங்கீத விற்பன்னர்கள் இராமாயணக் கீர்த்தனைகளை பயின்றனர்.

இராமாயணக் கீர்த்தனைகளில் அருணாசலக் கவிராயர் பாடிய அந்த வரிகள் வருமாறு.

“விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகுப் போலும்
மடங்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரைப் போலும்
திடங்கொண்ட ராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்! ”

– கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img