October 22, 2021, 3:52 am
More

  ARTICLE - SECTIONS

  பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

  பெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.

  silukur rangarajan4 - 1

  பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா? சிலுக்கூரு அர்ச்சகர் ரங்கராஜன் வருத்தம்!

  நம் நாட்டில் பெண்கள் என்றால் அத்தனை இளக்காரமா என்று சிலுக்கூரு ஆலய அர்ச்சகர் ரங்கராஜன் மனவேதனை வெளியிட்டார். நமக்கு பெண்களை மதிக்கத் தெரியாதா? என்று கேட்டார்.

  விவாத மேடைகள் சோசியல் மீடியா போஸ்டர்களிலாவது கொஞ்சம் கவனமாக பேச முயற்சிக்க வேண்டும் என்று கோரினார். சம்ஷாபாத் பரபரப்பு பெண் கொலை பற்றி அவர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

  silukur rangarajan5 - 2

  நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த சம்ஷாபாத் பெண் மருத்துவர் கொலை விவகாரத்தில் பெரும் மன வேதனை அடைந்ததாக, கடந்த வாரம் அவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தாரைச் சந்தித்து பேசிய போது தெரிவித்தார். கொலையான அந்தப் பெண்ணுக்கு தனது சிரத்தாஞ்சலியைக் காணிக்கை ஆக்கினார்.

  அதன் பின்னர் அர்ச்சகர் ரங்கராஜன் பேசிய போது, லட்சுமணனை நாம் எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? அவன் எப்போதும் சீதா தேவியின் பாதங்களை மட்டுமே பார்த்துப் பேசுவான். பிற பெண்களை தாயாகப் பார்த்த தேசம் நம்முடையது என்றார்.

  silukur rangarajan3 temple - 3

  “கல்வியோடு கூட ஒழுக்கங்களையும் கற்றுத்தர வேண்டிய முக்கிய பாத்திரம் ஆண்களைப் பெற்றோருக்கு உள்ளது. பெண்களை விளையாட்டுப் பொருளாக பார்ப்பவர்களை இனி “ராபாசுரர்கள்’ என்று அழைக்கவேண்டும். அப்படிப் பட்டவர்களை தூக்கில் போடவேண்டும்.

  திசா சம்பவத்திற்குப் பின் பல இளகிய மனம் படைத்தவர்களும் இதே கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள். ராமாயணத்தில் சீதையை அபகரித்துச் சென்ற ராவணாசுரனுடன் உயிரைப் பணயம் வைத்துப் போராடிய ஜடாயு போன்ற மக்களின் தேவை நம் சமுதாயத்திற்கு உள்ளது.

  silukur rangarajan2 rakshabandan - 4

  பெண்களுக்கு பாதுகாப்பாக நம் நாட்டில் நிறைய அமைப்புகள் உள்ளன. ஆனால் அவை தாமாக வந்து பெண்களை காப்பதில்லை. திஷாவின் பெற்றோருடன் பேசுவதற்கு எனக்கு பேச்சே வரவில்லை” என்று வருத்தம் தெரிவித்தார்.

  இந்த சம்பவத்தால் சமுதாயம் மொத்தமும் அதிர்ச்சியில் உள்ளதாகக் கூறினார். இந்தச் சம்பவத்தில் 24 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த போலீசாரைப் பாராட்டினார். இருப்பினும் அவர்கள் இன்னும் பொறுப்போடு நடந்து கொண்டிருக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.

  silukur rangarajan1 - 5

  பெண்களைப் பெற்றோர் பெண்களுக்கு எச்சரிக்கையாக இருப்பது குறித்து கற்றுத் தருகிறார்கள். ஆனால் இளைஞர்களை பெற்றோர் இன்னும் சிரத்தை வகிக்க வேண்டிய தேவையுள்ளது.

  உங்கள் மகன்களை டிகிரி படிக்க வைப்பதற்கு முன் பெண்களை கௌரவிக்க கற்றுத் தாருங்கள். இது உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்று என்று குறிப்பிட்டார்.

  silukur rangarajan6 - 6

  சிலுக்கூரு வேங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயத்தில் பெண்களை கௌரவிப்பதற்காக வருடா வருடம் கன்யா வந்தனம், ரக்ஷாபந்தன் போன்ற வழிபாடுகளை நடத்துகிறோம் என்றார்.

  சென்ற சனிக்கிழமை திசா கொலையை எதிர்த்து ஆலயத்தில் தரிசனம், பிரதட்சிணம் ஆகியவற்றை நிறுத்தி வைத்து சமுதாய துக்கத்தில் நாங்களும் பங்கேற்றோம் என்றார் ரங்கராஜன்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  366FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,575FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-