
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் முதல் முறையாக ரஜினி நடித்திருக்கும் படம் தர்பார். இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு காக்கிச்சட்டையில் போலீஸ் அதிகாரியாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இதனால் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ஏஆர் முருகதாஸ், சின்ன வயதில் நிலாவை பார்த்து சாப்பாடு சாப்பிடுவோம். இப்போது நிலாவில் இறங்கியது போல் உள்ளது.
அந்தளவுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ரஜினியை பார்த்து பார்த்து ரசித்தவன் நான். உங்கள் எல்லோரையும் விட ரஜினிக்கு மூத்த ரசிகன் என்றார்.

ஸ்டைலில் எம்ஜிஆருக்கு பிறகு ரஜினிதான் என்று ஏஆர் முருகதாஸ் கூறியதும் அரங்கம் கரகோஷத்தால் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய ஏஆர் முருகதாஸ் அஜித்துக்கு தல என்று பெயர் வைத்ததே ரஜினி தான் என்றார்.
இந்த தகவலால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நேற்று தர்பார் இசை வெளியீட்டு விழா நிறைவடைந்த நிலையில் இன்றும் #DarbarAudioLanuch என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரென்ட்டாகி வருகிறது.



