உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவனின் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி செப்டம்பர் 2 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கிறார் பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது..
இந்து அறநிலையத்துறை யின் கீழ் 38648 கோவில்கள்,4 லட்சத்தி 78 ஆயிரம் ஏக்கர் நிலம், ஆயிரக்கணக்கான சதுர அடி கட்டிடங்கள் கோடிக்கணக்கான சதுர அடி மணைக்கட்டுகள் உள்ளன.
ஆனால் ஆயிரக்கணக்கான கோவில்கள் காணவில்லை. அரசு அக்கோவில்களை கையகப்படுத்தும் போது அக்கோவில்களில் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.
இது தொடர்பாக 12.2.18 அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் அரசு இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயர்நீதிமன்ற ஆணை
(1) கோவில் சொத்துக்களை குத்தகை/வாடகை பாக்கி வைத்துள்ளவர்களுக்கு 4 வாரத்திற்குள் நோட்டீஸ் கொடுத்து வசூலிக்க வேண்டும்.
(2) கோவில் சொத்துக்களுக்கு சந்தை விலையில் குத்தகை/வாடகை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும்.குத்தகைதாரர்கள் தர மறுக்கும் பட்சத்தில் அதை பொது ஏலத்திற்கு மூலம் குத்தகை/வாடகைக்கு விடும் வேண்டும்.
(3) 5 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு விப்பட்டுள்ள ஒப்பந்தங்களை அறநிலையத்துறை ஆணையர் 6 வாரத்திற்குள் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
(4) கோவில் சொத்துக்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் 6 வாரத்திற்குள் அறநிலையத்துறை ஆணையர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
(5) 12.2.18 லிருந்து 60 நாட்களுக்குள் வாடகை பாக்கியை வராதவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதவர்கள், கோவில் சொத்துக்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கத் தவறிய JC, AC, EO மீது அறநிலையத்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(6) கோவில் சொத்துக்களிலிருந்து வரும் வருமானம் கோவில்களின் மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
6 வாரத்திற்குள் மேற்கண்ட விஷயங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு 6 மாதங்கள் ஆன பின்பும் எவ்வித நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை.
எனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பை செயல்படுத்தக் கோரி 2.9.18 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து அறநிலையத்துறை கோவில்கள் முன்பும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
நம் கோவில் நம் உரிமை நம் பெருமை. எனவே ஒவ்வொரு கோவிலிலிருந்தும் பிரதிநிதிகள் இப்போராட்டத்தில் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
2.9.18 அன்று வரும் போது நம் பகுதி கோவில்கள் தொடர்பாக நீதிமன்ற தீர்ப்பு வந்தும் செயல்படுத்தப் படாத ஆவணங்களுடன் வரவும்…
– என்று கூறியுள்ளார்.




