To Read it in other Indian languages…

Home ஆன்மிகம் ஆன்மிகக் கட்டுரைகள் தன்வந்திரி திரயோதசி .. தன்வந்திரி ஜெயந்தி தினம் இன்று ..!

தன்வந்திரி திரயோதசி .. தன்வந்திரி ஜெயந்தி தினம் இன்று ..!

dhanvantari - Dhinasari Tamil

வட நாட்டில் தீபாவளி பண்டிகையை ஐந்து நாட்கள் கொண்டாடுவார்கள் . அதன் முதல் நாள் தன்வந்திரி தோன்றிய இன்றைய கிருஷ்ண பக்ஷ திரயோதசி அன்று ஆரம்பித்து கொண்டாடுவார்கள் ..

இவர் யார்? பிரம்ம புராணம் :- அநு என்கிற அரசனின் புத்திரன் என்றும் பரத்வாஜ முனிவரிடம் ஆயுர்வேதம் பயின்றவர் என்றும் அதை எட்டாக பிரித்து தனது மாணவருக்கு உபதேசித்தவர் என்றும் கூறுகிறது

பாகவதம் :- இவர் விஷ்ணுவின் அம்சமாக பாற்கடலில் தோன்றியவர் .. தேவ வைத்தியர். இவர் பூமியில் தீர்க்கமதர் புத்திரராக அவதாரம் செய்தனர் என்றும் … தன்வந்திரி நிகண்டு (பல நூல்கள் சொல்லப்பட்டாலும் இது மட்டுமே இன்று காணக் கிடைக்கிறது )

இவரது மாணாக்கர் சுஸ்ருதர் (ஆயுர்வேதத்தில் அறுவைசிகிச்சைகள் குறித்த நூல்கள் எழுதியவர்)

இன்று தனிக்கொவிலாக சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட மிக மிக பழமையான ஸ்ரீரங்கம் சந்திர புஷ்கரணி எதிரே அமைந்துள்ள தன்வந்திரி சந்நிதி பற்றிய ஒரு காணொளி இங்கே…

தேகம் ஆரோக்கியத்துடன் இருந்துவிட்டால், மற்ற எல்லா வேலைகளையும் திறம்படச் செய்யமுடியும். தவிர, உடல் உழைப்புக்கு மட்டுமின்றி, புத்தியின் யோசிப்புத் தன்மைக்கும் உடலில் எந்த நோயும் இல்லாமல் இருப்பது மிகப்பெரிய பலம். எனவே தன்வந்திரி பகவானை மனதில் நிறுத்தி, இந்த ஸ்லோகத்தைச் சொல்லி வழிபடுங்கள்.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய
தன்வந்தரேயே அம்ருதகலச ஹஸ்தாய
சர்வாமய நாசாய த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீமகாவிஷ்ணவே நம:

விஜயராகவன் கிருஷ்ணன்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 4 =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.