December 6, 2021, 5:10 am
More

  கடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 8)

  Shirdi Sai Baba sitting - 1

  குருவை அடைய வேண்டும் சந்திக்க வேண்டும் ஆசி பெறவேண்டும் என்ற உண்மையான ஆதங்கம் ஒருவரிடம் இருந்தால் அதற்கான உபாயங்களை குரு செய்வார் என்பதற்கு உதாரணமாக காகாஜி வைத்யாவின் வாழ்க்கை அமைந்துள்ளது. நாசிக் ஜில்லாவில் உள்ள வணி எனும் ஊரில் இருந்த ஸ்ரீ சப்த ஸ்ருங்கி தேவி ஆலயத்தில் காகாஜீ என்பவர் பூஜை செய்து வந்தார்.

  அவருக்கு அவருக்கு திடீரென ஒரு மனக்குறை ஏற்பட்டது தக்க குருவை அடைந்து மன அமைதி கொள்ள நினைத்தார். ஆனால் அதற்கான வழி தெரியாமல் தவித்தார் முடிவில் தான் வணங்கும் தேவி இடமே தக்க குருவை காட்டுமாறு கேட்டார். கனவில் தோன்றிய தேவி சிவனின் வடிவாய் விளங்கும் பாபாவை வணங்கு என்றாள்.

  கனவை சரியாக புரிந்துகொள்ளாத காகாஜி த்ரம்பகேஸ் வரம் சென்று சிவ பூஜை செய்து வந்தார். வேண்டிய மன அமைதி கிடைக்காததால் திரும்பினார். மீண்டும் முறையிட்டபோது தேவி காகாஜி உன்னை சீரடி சாய் பாபாவிடம் தானே போகச் சொன்னேன் என்றாள். மேலும் நீ கவலை கொள்ளாதே நல்லபடியாக எல்லாம் நடக்கும் என்று ஆசீர்வதித்தார்.

  அதே நேரத்தில் சீரடி பாபாவின் அடிப் பொடியாக பாபாவே சகலமும் என எண்ணி வாழும் சாமா பாபாவின் முன் வெள்ளியிலான மார்பகங்களை வைத்து இதை ஏற்றுக்கொண்டு குலதெய்வத்தின் கோபத்திலிருந்து காக்குமாறு வேண்டினார்கள். எல்லாம் அறிந்தபோது ம் ஏதும் அறி யாதவராய் போல் விருத்தாந்தத்தை விளக்குமாறு கூறினார்.

  பாபாவி டம் எதையும் மறைத்து அறியாத சாமா ஜோதிடர் மூலம் அறிந்து கொண்டதை கூறினார். சிறுவனாய் இருந்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டு விட்டது. நெடுநாள் வரை குணமாகாததால் தாயார் தங்கள் குலதெய்வமான ஸப்த ஸ்ருங்கி தேவியிடம் தன் மகனை அவரது காலடியில் சேர்ப்பதாக வேண்டிக் கொண்டாள்.

  குணமான பின் நாளடைவில் மறந்து விட்டால் பின்னர் சில வருடங்கள் கழித்து தாயாருக்கு பிரச்சினை ஏற்பட்டது தற்போது குலதெய்வத்திடம் வேண்டிய இரு வெள்ளியிலான மார்பகங்களை சேர்ப்பதாக வேண்டிக்கொண்டார்.

  எனவே தாங்கள் ஏற்றுக்கொண்டு ஆசி வழங்க வேண்டினார்.பாபா நினைத்திருந்தால் சக்தி தேவியாக காட்சி தந்து அந்த காணிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கலாம். ஆனால் தன் பக்தன் ஒருவன் தவித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் சாமாவின் வேண்டுதலை ஏற்க மறுத்தார். அத்துடன் உடனே சென்று தாயின் வேண்டுதலை நிறைவேற்ற செல்லுமாறு வற்புறுத்தினார். பாபாவிடம் அனுமதி பெற்றுக்கொண்ட உடனே புறப்பட்டார்.

  விலை மிகுந்த பொருளை தொலைத்த ஏழை போலும், மழைக்காக ஏங்கி நிற்கும் விவசாயி போலவும் தவித்துக்கொண்டிருந்தார் காகாஜி. தேவியிடம் சென்று தனது பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார் அத்துடன் தனது தாயின் சார்பாகவும் மன்னிப்பு கோரினார். பிரார்த்தனை முடிந்தபின் தன்னை அனுப்பிய பாபாவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது காகாஜி கண்களில் கண்ணீர் வடிய பாபாவின் அடியவரான தாங்கள் இந்த அடிமையையும் அவரிடம் சேர்க்க வேண்டும் என்று வேண்டினார் .

  காகாஜியின் பக்தியை உணர்ந்த சாமா பக்தியுடன் தேவியின் அனுமதியோடு அழைத்துச் சென்றார். சீரடி வந்தடைந்த காகாஜி பாபாவின் பாதங்களில் பணிந்து கண்ணீரால் அபிஷேகம் செய்தார். வணங்கிய நொடியில் மன அமைதி பெற்றவராய் பாபாவை பார்த்துக்கொண்டே இருந்தார் .கேள்வி பதில் எதுவும் இல்லாமல் அங்கே நீண்ட உபதேசம் நடந்து கொண்டிருந்தது. ஆதிசங்கரர் தட்சிணாமூர்த்தி சிஷ்யர்களுக்கு மூலமாகவே உபதேசம் செய்வதாக சொல்லியுள்ளார். அச்செயலை இங்கே பாபா மக்கள் பலர் முன்னே நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

  தெளிவும் அமைதியும் பெற்ற காகாஜி சிலநாள் தங்கியபின் தேவிக்கு பூஜை செய்யும் பொறுப்பு இருந்ததால் பாபாவின் அனுமதியோடு சென்றார் .பாபா இதைப் போன்று பற்பல அடியவர்களை இழுத்து ஆசீர்வதித்து வாழ்வில் ஒளி யேற்றி உள்ளார் அவர்களை பாபா சிட்டுக்குருவிகள் என்றே அழைப்பார். இச்செயலானது பூத உடலை விடுத்த பின்பும் இன்றும் நடந்து கொண்டே இருக்கிறது.

  நாம் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்தால் எப்போது வேண்டுமானாலும் இழுத்துக் கொள்வார். பாபா எனும் வெள்ளம்நம்மை அடைய வேண்டுமானால் நாம் உள்ளம் உருகி வழிய விடும் கண்ணீரை நிறுத்தக்கூடாது பாபாவை பணிவோம் பிறவிப் பயன் பெறுவோம்.

  • எழுத்து: குச்சனூர் தி.கோவிந்தராஜன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,107FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,798FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-