சரித்திரம் படைக்கும் சனாதன தர்மம்

     பகவான் ஸ்ரீக்ருஷ்ணன் “சனாதன தர்மத்தின் ரட்சணத்திற்காகவே தான் அவதரிக்கிறேன்” என்பதைத் தெளிவாக உரைக்கிறான்.   அந்த தர்மத்திற்கு வாட்டம் என்பது ஒருபோதும் ஏற்படாது.   அதை அழிக்க வேண்டும் என புறப்படுகிறவர்கள் தாங்களாகவே அழிந்து போவார்கள்.   இது விஷயத்தில் ஓராயிரம் உதாரணங்களை நம்மால் காண்பிக்க முடியும்.

     ராவணன் தம்பி கும்பகர்ணன் மிகவும் கொடியவன்.   சாத்விகர்களான தேவர்கள் இருக்கக் கூடாது எனத் தீர்மானித்து ப்ரம்மாவிடம் வரம் கேட்டான். அந்தோ! பரிதாபம்!! தேவர்கள் அழிய வேண்டும் எனக் கேட்பதற்குப் பதிலாக, தனக்கு நிரந்தர தூக்கத்தை வரமாகப் பெற்றான்!!  அது அவனுக்கு துக்கமானது.

     ஆம்! “நிர்தேவ: – தேவர்கள் அழிய வேண்டும் – என கூற விழைந்தவன், தடுமாற்றத்தால் “நித்ரேவ: என்றான்.

    இக்காலத்திலும் சில நவீன கும்பகர்ணர்கள் சனாதன தர்மத்தை அழிப்பேன் என கூற முயன்று தட்டுத் தடுமாறி தங்களின் அறிவின்மையை உலகறியச் செய்கின்றனர்.   இவையெல்லாம் எம்பெருமானின் லீலாவினோதமன்றோ!! இதுவே நம் சனாதன தர்மத்தின் மாபெரும் வெற்றியென்று சொல்லவும் வேண்டுமோ!

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி

Sri APN Swami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்…

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...