December 5, 2025, 6:06 PM
26.7 C
Chennai

போராட்டம் நடத்தும் ஆசிரியர்களுக்கு … மனக் குமுறலுடன் சில கேள்விகள்!

teachers strike - 2025

நான் அரசுப் பள்ளியில் பயின்றவன். பல நல்ல ஆசிரியர்களை நேரில் பார்த்தவன். ஆனால் இன்றைய நிலையில் நல்லாசிரியர் என்போர் நூற்றுக்கு பத்து கூட இல்லை என்பது வேதனையான உண்மை.

ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் நடத்தும் இந்த போராட்டம் தொடர்பாக சில கேள்விகள்…

*1. ஒன்பது அம்ச கோரிக்கை என்று சொல்கிறீர்கள். 7 அம்ச கோரிக்கை என்ன?

*சபரிமலையில் பத்து வயதிற்கு மேல் 50 வயதிற்கு கீழ் உள்ள பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை தானே

*இந்தக் கோரிக்கையை இந்தப் போராட்டத்தில் எதற்காக திணித்து உள்ளீர்கள்?

*இந்தப் போராட்டத்திற்கும் இந்த கோரிக்கைக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா?. இது இந்துக்களின் உணர்வுகளை மதிக்காதது மட்டுமல்லாமல் புண்படுத்தும் செயல் என்பது தெரிந்தும் இந்தக் கோரிக்கையை முன்வைத்ததன் உள்நோக்கம் என்ன?

*2. இன்றைய 90 சதவீத ஆசிரியர்கள் சரியாகத்தான் பாடம் நடத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களா? அப்படி நீங்கள் சொல்வதாக இருந்தால் ஆசிரியப் பெருமக்கள் தங்களுடைய குழந்தைகளை அரசுப் பள்ளியில் ஏன் சேர்க்கவில்லை?

*ஆசிரியர்களுக்கு இந்த விஷயத்தில் வக்கலாத்து வாங்கும் அரசு ஊழியர்கள் ஏன் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வில்லை? ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்திருந்தால் அரசு பள்ளிகளை மூடும் நிலை வருமா?

*இந்தக் காரணத்தை வலியுறுத்தி என்றாவது தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறீர்களா? போராடி இருக்கிறீர்களா?

*உங்களிடம் பயின்ற அனுபவம் மிகக்குறைவான ஆசிரியர்கள், பாடம் நடத்தும் தனியார் பள்ளிகளில் உங்கள் வீட்டு குழந்தைகளை சேர்க்கிறீர்களே இதன் பொருள் என்ன?

*உங்களிடம் பயின்றவர்கள் அறிவாளிகள் என்று சொல்கிறீர்களா? அல்லது உங்களிடம் பயின்றவர்களைவிட நீங்கள் திறமை இல்லாதவர்கள் என்று சொல்கிறீர்களா? அல்லது வாய்ப்பு, வசதிகள், திறமைகள் இருந்தும் பாடம் நடத்தவில்லை என்று ஒத்துக் கொள்கிறீர்களா?

*3. லஞ்சம் பெருக்கெடுத்து ஓடுவதற்கு மூலகாரணமே அரசு ஊழியர்கள்தான். ஒன்று அவர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள். அல்லது லஞ்சம் வாங்குபவர்களுக்கு துணை போகிறார்கள்.

*லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்கள், அதிகாரிகளுக்கு எதிராக என்றாவது போராடி இருக்கிறீர்களா? உங்களுக்கு சமுதாய அக்கரை கிடையாதா?

*4. பன்னிரண்டாம் வகுப்பு வரை உங்களின் குழந்தைகளை பல லட்சம் ரூபாய் செலவு செய்து தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் நீங்கள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி போன்ற மேற்படிப்பில் மட்டும் அரசு கல்லூரிகளில் சேர்கிறீர்களே ஏன்? அந்த அரசு கல்லூரிகளில் பாடம் நடத்துபவர்கள் திறமையானவர்கள் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

*அவர்களின் திறமை மீது நம்பிக்கை வைத்துள்ள நீங்கள்… உங்களில் 10% நல்லாசிரியர்கள் இன்னமும் திறமையான மாணவர்களை உருவாக்கும்போது, நீங்களும் திறமையான மாணவர்களை ஏன் உருவாக்கவில்லை. இதன் பெயர் திறமையின்மையா? அல்லது சோம்பேறித்தனமா?

*5. மாணவர்களுக்கு தேர்வு நடக்கும் காலகட்டத்தில் போராட்டம் அறிவித்து, அதனை முழுவீச்சில் செயல்படுத்தும் உங்களுக்கு மாணவர்களின் நலனில் அக்கறை இருக்கிறது என்று நீங்கள் சொன்னால் அதை நம்பும் அளவிற்கு மக்கள் என்ன மடையர்களா?

*6. கம்யூனிஸ்டுகளின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காக வருங்கால சமுதாயத்தை சீரழிக்கும் வகையில்… அவர்களின் எதிர்காலத்தை பாழாக்குகின்ற வகையில் தேர்வு நேரத்தில் போராட்டம் நடத்துவது ஆசிரியர் பணிக்கு அவமானமில்லையா? ஆசிரியர் பணிக்கு இது இழுக்கு என்பது தங்களுக்குத் தெரியாதா?.

*7. நீங்கள் மிகவும் திறமையானவர்கள் என்று நம்புகின்ற தனியார் பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களின் சம்பளம் உங்களை விட எத்தனை மடங்கு குறைவு என்பது உங்களுக்குத் தெரியும்தானே?

*8. நீங்கள் இதுவரை நடத்திய போராட்டங்களில் சம்பள உயர்வு கோரிக்கை இல்லாத ஒரு போராட்டத்தை உங்களால் சொல்ல முடியுமா?. அதாவது மாணவர் நலம் சார்ந்த அல்லது கல்வி தரம் உயர்வு சார்ந்த அல்லது பாடத்திட்டம் சார்ந்த ஏதாவது கோரிக்கைகளை மட்டுமே வலியுறுத்தி எப்போதாவது நீங்கள் போராடியது உண்டா?

*9. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களாகிய உங்களின் குடும்பத்தில், காவல்துறை போன்ற இதர துறைகளில் வேலை பார்ப்பவர்களின் பணி மற்றும் அவர்களின் சம்பளம் போன்றவற்றுடன் உங்களது சம்பளம் மற்றும் பணியை ஒப்பிட்டு பார்த்தது உண்டா?

*அவர்களைவிட உங்களுக்கு பணி சுமை அதிகம் என்று சொல்கிறீர்களா? அவர்களை விட உங்களுக்கு ஊதியம் குறைவு என்று சொல்கிறீர்களா?

*10. பொதுவாக ஒரு பணியில் இருப்பவர் அந்தப் பணி தனக்கு பிடிக்காமல் போனாலோ அல்லது அவருக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் குறைவாக இருக்கிறது என்று அவர் நினைத்தாலோ உடனடியாக அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு அவருக்கு விருப்பமான இடத்தில், பிடித்தமான வேலையில் சேர்வதுதானே நடைமுறை. அதுதானே சரியானதும்கூட. நீங்கள் ஏன் அந்த வழிமுறையை தேர்வு செய்யவில்லை?

*நீங்கள் இப்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு எங்கு சென்றால், இதைவிட அதிகமான சம்பளம் உங்களுக்கு கிடைக்காது என்பது உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும் என்பதை நீங்கள் ஒத்துக் கொள்கிறீர்கள்…

*அப்படியானால் நீங்கள் இப்போது வாங்குகின்ற சம்பளம் குறைவா? அல்லது உங்களின் வேலைப்பளு அதிகமா?

குறிப்பு: மாணவர்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அர்ப்பணிப்பு உணர்வோடு தங்களுடைய வாழ்க்கையையே ஆசிரியர் பணிக்காக தியாகம் செய்து வருகின்ற மொத்த அரசு ஆசிரியர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ள அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் மிக சாமானியனான எமது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். நன்றிகள்.

*நீங்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியமான உடல் நிலையோடும், நீடித்த மன மகிழ்ச்சியோடும் வாழ வேண்டுமென்று நான் பிரார்த்திக்கிறேன்

வந்த பதிவு : சாலமோன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories