December 5, 2025, 9:37 PM
26.6 C
Chennai

“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா

“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா !-பெரியவா
 
(தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்
கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்
கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!)19059744 1596770400368119 8664418595669274017 n - 2025
 
கட்டுரை-ரா.வேங்கடசாமி
காஞ்சி மகானின் கருணை நிழலில் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
ஒரு தடவை ஆந்திராவில் மகா பெரியவர்
முகாமிட்டு இருந்தபோது நடந்த சம்பவம்.
 
வழக்கமான பூஜை நேரம். மகான் சிறிய காமாட்சி
விக்கிரகத்தை முன்னால் வைத்து பூஜையை
ஆரம்பித்துவிட்டார்.
 
அந்த நேரத்தில், எங்கிருந்தோ வந்த ஒருத்தி ஏகமாகச் சத்தமிட்டுக்கொண்டு, “எனக்குப் புடவை கொடு…. புடவை கொடு!” என்று கூவினாள்.ரகளை செய்தாள்.
 
அவள் உடலில் பழைய புடவை ஒன்று கந்தல்
கந்தலாகக் காட்சியளித்தது. அவளின் இடது
முழங்காலுக்கு மேலே புடவை கொஞ்சம்
பெரிதாகவே கிழிந்திருந்தது.
 
‘பூஜை நேரத்தில் இப்படியொரு தொல்லையா?’ என்று பெரியவாளின் சிஷ்யர்கள் அவளை அங்கே இருந்து விரட்டத் தொடங்கினார்கள்.
 
அமைதியாக அவளைப் பார்த்த மகான், அவர்களைப்
பார்த்துக் கையமர்த்திவிட்டு,ஒரு பட்டுப் புடவையைக் கொண்டுவரச் சொல்லி,அதைத் தட்டில் பழங்களோடு வைத்து அவளிடம் கொடுத்தார்.புடவையை எடுத்துக் கொண்ட அவள்,அங்கிருந்து வேகமாகப் போய்விட்டாள்.
 
அங்கிருந்த சிஷ்யர்களில் ஒருவருக்கு மனதில் ஏதோ சந்தேகம்… அவள் பின்னாலேயே வேகமாகப் போனார். ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தை அந்த சிஷ்யர் கடந்தபோது, அவர் கன்னத்தில் யாரோ ‘பளீர்’ என்று அறைந்தது போலிருந்தது.
 
அங்கேயே மயங்கி விழுந்தவர்,பெரியவா இருந்த
இடத்துக்கு வரச் சற்று நேரமாயிற்று.
 
“என்னடா…புடவை என்னாச்சுனு பார்க்கப் போனியோ? வந்தவ அம்பாள்டா மடையா!” என்று தன் முன்னே இருந்த விக்கிரகத்தைச் சுட்டி காட்டினார் பெரியவா.
 
வந்தவளின் உடலில் புடவை எங்கு கிழிந்திருந்ததோ, அந்த இடத்தில்தான் தேவியின் சிலையில் உடுத்தப்பட்டிருந்த சேலையும் கிழிந்திருந்தது!
 
தனக்கு என்ன தேவை என்று மகானிடம் நேரில்
கேட்டுப் பெறும் வழக்கத்தை அந்த அம்பாள்
கடைப்பிடித்து வந்திருக்கிறாள்.!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories