ஸ்ரீரங்கம் தேரோட்டத்தை முன்னிட்டு திருச்சிக்கு இன்று உள்ளூர் விடுமுறை

Published:

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய திருவிழாவான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் தேரோட்டம் இன்று. திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்ற சித்திரை தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா முழக்கத்துடன் நம்பெருமாளை தரிசனம் செய்தனர்.

இதையொட்டி, இன்றைய தினம் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு மே 18ம் தேதி பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img