December 6, 2025, 6:29 AM
23.8 C
Chennai

“சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்”……….’-ஒரு முஸ்லிம் அன்பர் (பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)

“சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்”……….’-ஒரு முஸ்லிம் அன்பர்

(பார்வையில்லாத குலாம் தஸ்தகீருக்கு அருள்)
62041801 2132609663516978 5972714807537696768 n - 2025
(மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு)

தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்

மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும்
இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும் ஏராளம்.

1989-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதி.

ஒரு முஸ்லீம் அன்பர்,தன்னுடைய மகனை- குலாம் தஸ்தகீர் – கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு வந்தார் ஸ்ரீ மடத்துக்கு. சட்டையைக் கழற்றிவிட்டு சுவாமிகளை நமஸ்கரித்தார்கள்.

‘என்னோட மகன்,வயலின் வாசிக்கிறான். ஒரு போட்டியில் கலந்துக்கப் போறான். பெரியவங்க ஆசி வேணும்…சாமிக்கு முன்னாலே வயலின் வாசிக்கணும்….’

அனுமதி கிடைத்ததும், பார்வையில்லாத குலாம் தஸ்தகீர் வாசிக்கத் தொடங்கினான். பெரியவாள் கண்களை மூடிக்கொண்டு ரசித்தார்கள்.

பின்னர், அவர்கள் குடும்பம் பற்றி விசாரித்து, ‘பையனுக்கு யாரிடம் சிட்சை’ என்றும் கேட்டறிந்தார்கள்.

தஸ்தகீரின் தகப்பனார்க்கு உணர்ச்சிபூர்வமான தவிப்பு, நெஞ்சு,கெஞ்சியது.

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’ என்று சொல்லியே விட்டார்!.

தொண்டர்களுக்குத் தூக்கிவாரிப் போட்டது. இது என்ன பிரார்த்தனை? ஆசீர்வாதம் கேட்டால் போதாதோ?…

முஸ்லீம் இதயத்தில் பரிசுத்தம் இருந்தது.

பெரியவாள், ஒரு சிஷ்யருக்கு ஜாடைகாட்டி, அந்த வயலினை வாங்கிக்கொண்டு வரச் சொல்லி தன் அருட்கரத்தால் தொட்டுக் கொடுத்தார்கள்.

பார்த்துக் கொண்டிருந்தவர்கள், வெண்ணையாய் உருகிப் போனார்கள்.

இரண்டு வேஷ்டிகளும்,மாம்பழங்களும் பிரசாதமாகக் கொடுக்கச் சொன்னார்கள், பெரியவா.

மதம் கடந்த கருணை, பெரியவாளுக்கு

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories