December 6, 2025, 3:15 AM
24.9 C
Chennai

‘equipoise என்று ஒரு word’.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா. (சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா)

‘equipoise என்று ஒரு word’.அதற்கு என்ன அர்த்தம்?பெரியவா.
 
(சோகத்தின் ஒருரேகையாவது தெரிகிறதா? அற்புத விளக்கம் சொன்ன பெரியவா)
 
.(பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?”-நாவில் நிற்பது வாக் தேவதை; இல்லை, talk தேவதை!)
 
 
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா61786490 699034313864551 2831924052833075200 n 4 - 2025
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
 
 
ஸ்ரீமடம், இளையாத்தங்குடியில் முகாம்.
 
அரசு அதிகாரி, நாலைந்து நண்பர்களுடன், காரில் புறப்பட்டு இளையாத்தங்குடி நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள்.பேசாமலே எப்படிப் பயணம் செய்வது? பல பேச்சுக்களிடையில், அவர்கள் தரிசனம் செய்யப் போகும் மகாஸ்வாமிகளைப் பற்றிய பேச்சும் வந்தது.
 
“பெரியவாளுக்கு சம்ஸ்க்ருதம் நன்றாகத் தெரியும்…”
 
“தமிழ், தெலுங்கு, கன்னடமும் தெரியும்…”
 
“இங்கிலீஷில் சில வார்த்தைகள்தான் தெரிந்திருக்கும். Working Knowledgeதான் இருக்கும்….”
 
“நாம் பேசும்போது, இடையிடையே இங்கிலீஷ் வார்த்தை வந்துவிட்டால், புரிந்துகொள்வார்கள்….”
 
இளையாத்தங்குடி சென்று, பெரியவாள் அறைக்கு வெளியே காத்துக்
கொண்டிருந்தார்கள். பத்து நிமிஷத்துக்குப் பின், பெரியவா வெளியே வந்தார்கள். சுற்றிலும் ஆங்கிலம் நன்றாகப் படித்துத் தேர்ந்த அடியார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டே வந்தார்கள் பெரியவா.
 
பெரியவா: ” ஒவ்வொரு language-லும் சில peculiar வார்த்தைகள் இருக்கும். அந்த வார்த்தைகளை இன்னொரு பாஷையில் சுலபமாக மொழிபெயர்க்க முடியாது. இங்கிலீஷில் equipoise என்று ஒரு word.அதற்கு என்ன அர்த்தம்னு சொல்லுங்கோ….”
 
ஒவ்வொருவரும், பல மாதிரியாக விளக்கம் கொடுத்தார்கள். ஆனால், எந்த ஒரு சொல்லும் அந்த ஆங்கிலப் பதத்தின் முழுத்தன்மையை வெளிப்படுத்துவதாக இல்லை.
 
தரிசனத்துக்காக வந்திருந்த அரசு அதிகாரியையும் அவர் நண்பர்களையும் பார்த்து, “உங்களுக்குத் தெரியுமோ?” என்று பெரியவா கேட்டார்கள்.
 
அதிகாரிக்குக் குப்பென்று வியர்த்தது. தட்டுத் தடுமாறி ஏதோ விளக்கம் சொல்ல முயன்றார்; தோற்றுப் போனார்.
 
“Equipoise என்றால் mental equanimity என்று அர்த்தம்” என்று சொல்லிவிட்டு, (எல்லோரையும் அசரவைத்துவிட்டு!) வேறு பேச்சுக்குப் போய் விட்டார்கள் பெரியவாள்.(அதாவது ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் மனம் குமைந்து வருந்துவதற்கு அவகாசம் கொடுக்கவில்லை.)
 
சிறிதுதூரம் நடந்து சென்றபின், ஹால் நடுவில் நின்றார்கள்.
 
தூரத்தில், சுவரோரமாக, ஒரு முதிய அம்மையார் உட்கார்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டிருந்தார். ஜபம் செய்து கொண்டிருந்தாற் போலிருந்தது.
 
“அந்த அம்மா எப்படி இருக்கா?”
 
“ரொம்ப சாந்தமா, அமைதியாக உள்ளுக்குள்ளே சஞ்சலமில்லாமே…..”
 
“அவர் யார் தெரியுமோ?”
 
யாரும் பதில் சொல்லவில்லை.
 
“கே.எஸ்.வெங்கடரமணின்னு பெரிய எழுத்தாளர். நிறைய புஸ்தகம் எழுதியிருக்கார். Kandan, the patriot; Murugan, the tiller எல்லாம் பிரஸித்தம். (நானும் படிச்சிருக்கேன்!) இந்த நாவல்களில் rural-setting ரொம்ப நேச்சுரலா இருக்கும். (அந்த அம்மாள் கே.எஸ்.வி-யின் மனைவி)
 
“பால் பிரண்டன் என்ற பிரெஞ்சு தத்துவஞானியை திருவண்ணாமலைக்கு அழைத்துக்கொண்டு போனார். என்னிடமும் அழைத்துக்கொண்டு வந்தார்.
பால்பிரண்டனுக்கு நம்ம தத்துவங்களில் ரொம்பப் பிடிப்பு.
 
“இந்த தம்பதிக்கு, ஒரே பிள்ளை. கே.எஸ்.வி.யும் போயிட்டார். பிள்ளை, சர்க்கார் விருந்தாளி! புரிகிறதா? பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கான்!
 
“சொந்த-பந்தம், சொத்து-சுதந்திரம் எதுவும் கிடையாது. மலை மலையாய் சோகம்…! அந்த அம்மாள் முகத்தில்சோ கத்தின் ஒரு ரேகையாவது தெரிகிறதா?
 
“இதுதான் equipoise!…”
 
பெரியவா எந்த யூனிவர்ஸிடியில் எம்.ஏ.ஆங்கிலம் பயின்றார்கள்?
 
நாவில் நிற்பது வாக் தேவதை;இல்லை, talk தேவதை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories