திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ஐராவதம் (வெள்ளை யானை) வீதி உலா நடந்தது.

ஆன்மிகச் செய்திகள் ஆன்மிகம் ஆலயங்கள் உள்ளூர் செய்திகள் தமிழகம் நெல்லை பொது தகவல்கள் விழாக்கள் விசேஷங்கள்

THERUCHANTHUR - 2026

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வெள்ளை நிறத்தில் யானை, சுந்தரமூர்த்தி நாயனார் வீதி உலா நடந்தது.

அறபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் ஐராவத (வெள்ளை யானை) வீதி உலா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினத்தில் 63 நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமானுக்கு கைலாய மலையில் சிவபெருமான் ஐராவதம் (வெள்ளை யானை) உருவத்தில் காட்சி கொடுத்தார் என்பது ஐதீகம்.

ஆடி மாத சுவாதி நட்சத்திர தினமான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.

oied elibend - 2026

அதனைதொடா்ந்து மாலையில் கோவில் தெய்வானை யானையின் உடல் முழுவதும் திருநீறு பூசப்பட்டு, வெள்ளை நிறத்தில் காட்சி அளித்தது.

தொடர்ந்து தெய்வானை யானையும், 63 நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும் கோவிலில் இருந்து புறப்பட்டு, சன்னதி தெரு, உள்மாட வீதி, ரத வீதிகளின் வழியாக சென்று மீண்டும் கோவிலை சேர்ந்தனர்.

பின்னர் கோவில் உள்பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதியில் இருந்து வெள்ளை நிற தெய்வானை யானை முன் செல்ல, சேரமான் பெருமானும், மாணிக்கவாசகரும் தனித்தனி பல்லக்குகளில் எழுந்தருளி, யானையின் பின்னால் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர்.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் குமரதுரை மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.