spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்மந்திரங்கள் சுலோகங்கள்2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?

2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?

vinayaka chaturti pooja

விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?

விநாயக சதுர்த்தி.. ஆகா… இதோ ஆக.31 புதன் கிழமை வந்தாச்சு… நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை  இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.

31/08/2022 அன்று வரும் விநாயக சதுர்த்தி நாளில் ஸ்ரீவிநாயகருக்கு செய்யும் லகு பூஜை (அதாவது எளிய கணபதி பூஜை)

பூஜைக்கு வேண்டிய பொருள்கள்:

1- திருவிளக்கு, எண்ணை, நெய், திரி மற்றும் ஏற்ற வத்தி பெட்டி.
2- பூமாலை மற்றும் உதிரிப் பூக்கள் (அர்ச்சனைக்கு)
3- பூஜை சாமான்கள் வைக்க தேவையான தட்டுக்கள்
4. சந்தனம், குங்குமம், அட்சதை வெற்றிலை, பாக்கு மற்றும் அவைகளை வைக்க கின்னங்கள்
5- ஊதுபத்தி, கற்பூரம், சாம்பிராணி
6- மணி மற்றும் கற்பூரம் ஏற்ற தட்டு.
7- பஞ்ச பாத்திரம், உத்தரினி.
8- அர்க்கியம் விட கொஞ்சம் பால்

நைவேத்திய பிரசாதங்கள்

1.அன்னம் (மஹா நைவேத்தியம்)
2- அப்பம்
3- வடை (உளுந்து வடை)
4-கொழுக்கட்டை
5-வெல்ல பாயசம்

பழ வகைகள்

1- வாழைப்பழம் மற்றும் கிடைக்கும் எல்லா பழங்களும்..

பூஜை முறை:

முதலில் மஞ்சளை தூய நீர் விட்டு, கலந்து பிடித்து, மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை செய்யவும்.

உத்தரணியில் தீர்த்தம் எடுத்து, வலது உள்ளங்கையில் விட்டுக் கொண்டு,
ஓம் அச்சுதாய நம:
ஓம் அனந்தாய நம:
ஓம் கோவிந்தாய நம:
என்று சொல்லி, மூன்று முறை உத்தரிணியில் தீர்த்தம் எடுத்து உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ள வேண்டும். இதற்குப் பெயர் ஆசமனம் என்பது.

பிறகு கையில் அட்சதை, புஷ்பம் எடுத்துக் கொண்டு, சங்கல்பம் செய்யவும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்|
ப்ரசன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே||

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலரான்
நோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு
துப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு
.

கஜானனம் பூத கனாதி சேவிதம்
கபித ஜம்பு பலசார பட்சிதம்
உமாசுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம் – நல்ல
குணமதிக மாமருணை கோபுரத்தின் மேலிருக்கும் செல்வக்
கணபதியை தெழுதக் கால்

குரு ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குரு தேவோ மஹேஸ்வர:
குரு ஸாக்ஷாத் பரப்பிரஹ்மா தஸ்மை ஸ்ரீ குருவே நம:

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் கரிஷ்யமாணஸ்ய கர்மண: நிர்விக்னேன பரிஸமாப்த்யர்த்தம்
ஆதௌ ஸ்ரீ விக்னேஸ்வர பூஜாம் கரிஷ்யே||
– என்று சொல்லி, அட்சதை, புஷ்பத்தை மஞ்சள் பிள்ளையார் முன் சேர்க்கவும்.

விக்னேஸ்வரரை எழுந்தருளச் செய்யும் ஆசனத்தையும் மணியையும் பிரார்த்தனை செய்து புஷ்பத்தை சமர்ப்பிக்கவும்.

மணி அடிக்கவும். பின் மஞ்சள் பிள்ளையாரை, விக்னேஸ்வரராக பாவனை செய்து, அதில் விக்னேஸ்வரர் எழுந்தருள பிரார்த்தனை செய்யவேண்டும்.

அஸ்மின் ஹரித்ரா பிம்பே ஸ்ரீ விக்னேஸ்வரம் த்யாயாமி – ஸ்ரீ மஹாகணபதிம் ஆவாஹயாமி என்று சொல்லி, புஷ்பத்தை பிள்ளையாரிடம் சேர்ப்பிக்கவும்.

இனி ஒவ்வொரு முறையும் ஸ்ரீ மஹாகணபதயே நம: என்று சொல்லி, கீழ்க்காணும் மந்திரம் சொல்லி அந்தந்த செயல்களைச் செய்ய வேண்டும்.

ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம: ஆஸநம் சமர்ப்பயாமி|
” பாதயோ: பாத்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” அர்க்யம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஆசமநீயம் சமர்ப்பயாமி| (உத்தரிணி தீர்த்தம் விடவும்)
” ஸ்நபயாமி| (ஸ்நானம் செய்வதாக பாவித்து தீர்த்தம் விடவும்)
” ஸ்நானானந்தரம் ஆசமனீயம் சமர்ப்பயாமி| (தீர்த்தம் விடவும்)
” வஸ்த்ரம் சமர்ப்பயாமி| (தீர்த்தம்)
” உபவீதம் சமர்ப்பயாமி| ( அக்ஷதை போடவும்)
” திவ்ய பரிமள கந்தான் தாரயாமி| (குங்குமம், சந்தனம் போடவும்)
” அட்சதான் சமர்ப்பயாமி| (அட்சதை போடவும்)
” புஷ்பை: பூஜயாமி| (புஷ்பத்தை சேர்க்கவும்)

புஷ்பத்தை எடுத்துக்கொண்டு, விக்னேஸ்வர பிம்பத்துக்கு அர்ச்சனை செய்யவும்.

ஓம் சுமுகாய நம: |
ஓம் ஏகதந்தாய நம: |
ஓம் கபிலாய நம: |
ஓம் கஜகர்ணாய நம: |
ஓம் லம்போதராய நம: |
ஓம் விகடாய நம: |
ஓம் விக்னராஜாய நம: |
ஓம் விநாயகாய நம: |
ஓம் தூமகேதவே நம: |
ஓம் கணாத்யக்ஷாய நம: |
ஓம் பாலசந்த்ராய நம: |
ஓம் கஜானனாய நம: |
ஓம் வக்ரதுண்டாய நம: |
ஓம் சூர்ப்பகர்ணாய நம: |
ஓம் ஹேரம்பாய நம: |
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம: |
ஓம் ஸித்திவிநாயகாய நம: |
ஓம் ஸ்ரீ மஹாகணபதயே நம:

அர்ச்சனை செய்த பின், தூபம், தீபம் காட்டி, நிவேதனம் செய்ய வேண்டும்.

அம்ருதோபஸ்தரணமஸி |
ஓம் ப்ராணாய ஸ்வாஹா |
ஓம் அபாநாய ஸ்வாஹா |
ஓம் வ்யாநாய ஸ்வாஹா |
ஓம் உதாநாய ஸ்வாஹா |
ஓம் ஸமாநாய ஸ்வாஹா |
ஓம் ப்ரஹ்மணே ஸ்வாஹா |
மஹாகணபதயே நம:
அம்ருதம் நைவேத்யம் நிவேதயாமி |
அம்ருத பிதாநமஸி என்று நைவேதனம் செய்வித்து, கற்பூர நீராஜனம் செய்ய வேண்டும்…

பின், எல்லாக் காரியங்களிலும் எப்போதும் இடையூறுகள் இல்லாமல் செய்தருள வேண்டும் என்று விக்னேஸ்வரரை பிரார்த்திக்க வேண்டும்.

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி ஸமப்ரப|
நிர்விக்னம் குரு மே தேவ ஸர்வ கார்யேஷூஸர்வதா||
– என்று சொல்லி பிரார்த்தித்து நமஸ்காரம் செய்துவிட்டு, சங்கல்பம் செய்யவும்.

அடுத்து, ஸ்ரீ மகா கணபதிக்கான முக்கியமான பிரதான பூஜை

முதலில் செய்தது போல் ஆசமனம், சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்னோப சாந்தயே… என்று சொல்லி ஒரு ப்ராணாயாமம் செய்யவேண்டும்.

அடுத்து, சங்கல்பம்… மமோ பாத்த… என்று தொடங்கும் சங்கல்பம்


ஸ்ரீ விநாயக சதுர்த்தி பூஜை 31.08.2022 புதன் கிழமை சுபக்ருத் வருஷம் ஆவணி மாதம் 15 ம் தேதி
பூஜை செய்ய நல்ல நேரம் : காலை 06.00 – 07.30 , 9.00 முதல் 10.00 வரை


மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் (ஸ்ரீபகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் / ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் )

சுபாப்யாம் சுபே ஷோபனே முகூர்த்தே ஆத்ய ப்ரம்ஹண: த்விதீய பரார்த்தே ச்வேத வராஹ க ல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஸ்வே ஸகாப்தே அஸ்மின் வர்த்தமானே வ்யாவஹாரிகே பிரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே

சுபக்ருத் நாம ஸம்வஸ்தரே தக்ஷிணாயணே வருஷருதௌ ஸிம்ம மாஸே சுக்ல பக்ஷே சதுர்த்யாம் சுப திதௌ வாஸர: செளம்ய வாஸர சித்திரா நக்ஷத்திர யுக்தாயாம் சுப யோக சுப கரண ஏவங்குண விசேஷண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் சதுர்த்யாம் சுப திதௌ

மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் (ஸ்ரீபகவத் ஆக்ஞய ஸ்ரீமன் நாரயண ப்ரீத்யர்த்தம் / ஸ்ரீ பகவத் கைங்கர்ய ரூபம் ) ஸ்ரீ மஹா கணபதி ப்ரஸாத ஸித்யர்த்தம் …… கோத்ரஸ்ய ஜென்ம நக்ஷத்திர ஜென்ம ராஸௌ ஜாதஸ்ய ——– சர்மண: (நாம்யாஹா) மம குடும்பஸ்ய சர்வேஷாம் க்ஷேமஸ்த் தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்கிய ஸித்யர்த்தம், தீர்க்க சௌமாங்கல்ய அவாப்த்தி ஸித்யர்த்தம், தன தான்யா, அஷ்ட லக்ஷ்மி பிரசாத பிராப்த்யர்தம், சிந்தித கர்யணி ஜெயத்ரென ஸித்யர்த்தம், ஸத் ஸந்தான ப்ராப்தி ஸித்யர்த்தம், மம ஸகல கார்ய நிர்விக்னதா ஸித்யர்த்தம், ஸகல கார்ய விக்ன நிவ்ருத்யர்த்தம்… ஸ்ரீ மஹா கணபதி பிரசாத ஸித்யர்த்தம்… ஜென்ம அப்யாசாது எதக்ஷண பர்யந்தம் சம்பாவித ஸமஸ்த தோஷ பரிகாராரத்வம், மந்தர ஜப பல ஸித்யர்த்தம் தீர்க செளமங்கல்ய அவாப்தி ஸித்யர்த்தம், யாவச்சக்தி த்யானரூப ஆவாஹனாதி ஷோடச உபசாரை: ஸ்ரீ மஹா கணபதி பூஜாம் அத்ய கரிஷ்யே -|

என்று சங்கல்பித்து, அட்சதையை வடக்குப் புறம் சேர்க்கவும்.

உத்தரணி தீர்த்தத்தால் கையை துடைத்துக் கொண்டு, கையில் புஷ்பத்தை எடுத்துக் கொண்டு,

ஸ்ரீ  விக்னேஸ்வரம் யதாஸ்தானம் பிரதிஷ்டாபயாமி |
சோபனார்த்தே க்ஷேமாய புனராகமனாய ச ||
என்று சொல்லி மஞ்சள் பிள்ளையார் மீது சேர்த்து, மஞ்சள் பிள்ளையாரை வடக்குப் புறம் நகர்த்தி வைக்கவும்.

பின் கலச பூஜை செய்யவும். பஞ்சபாத்திரத்தை சந்தனம் குங்குமம் இட்டு, நீர் விட்டு, புஷ்பம் சேர்த்து, வலது கையால் மூடிக்கொண்டு,

கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி
நர்மதே ஸிந்து காவேரி தாம்ரவர்ணீ
ஜலே அஸ்மின் ஸந்நிதிம் குரு||
என்று, புஷ்பார்ச்சனை செய்யவும்.

கங்காயை நம:|
யமுனாயை நம:|
கோதாவர்யை நம:|
ஸரஸ்வத்யை நம:|
நர்மதாயை நம:|
ஸிந்தவே நம:|
காவேர்யை நம:|
தாம்ரவர்ண்யை நம:
என்று பூஜித்து, தீர்த்தத்தை, பூஜைப் பொருள்கள், கும்பம் மற்றும் தங்கள் மீது தெளிக்கவும்.

குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணுர் குருர் தேவோ மஹேச்வர:|
குருஸ்ஸாக்ஷாத் பரம்ப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம:||

என்று, குருவை தியானித்த பிறகு, ப்ராணப்ரதிஷ்டை செய்யவும்.

அஸ்ய ஶ்ரீ விக்னேஷ்வர ப்ராணப்ரதிஷ்டா மஹாமந்த்ரஸ்ய,
ப்ரம்மரூவிஷ்ணு ரூமஹேச்வரா ருஷய: (வலது கையை தலை உச்சியில் வைக்கவும்)
ருக் யஜூஸ் ஸாம அதர்வாணிச் சந்தாம்ஸி (கையால் மூக்கு நுனியில் தொடவும்)
ஸகல ஜகத் ஸ்ருஷ்டி ஸ்திதி ஸம்ஹார காரிணீ ப்ராணா சக்தி: பரா தேவதா (ஹ்ருதயத்தில் தொடவும்)
ஆம்ரூபீஜம், ஹ்ரீம்ரூசக்தி:, க்ரோம்ரூகீலகம்||

பிறகு, அங்கந்யாச கரந்யாசங்கள் செய்து தியானித்து, புஷ்பம் அட்சதையை தீர்த்தத்துடன் பின்வரும் மந்திரம் சொல்லி, மண் பிள்ளையார் பிம்பத்தில் சேர்க்கவும்.

ஆவாஹிதோ பவ|
ஸ்தாபிதோ பவ|
ஸந்நிஹிதோ பவ|
ஸந்நிருத்தோ பவ|
அவகுண்டிதோ பவ|
ஸுப்ரீதோ பவ|
ஸுப்ரஸன்னோ பவ|
ஸுமுகோ பவ|
வரதோ பவ|
ப்ரஸீத ப்ரஸீத|
விக்னேஷ்வர யாவத் பூஜாவஸானகம்|
தாவத் த்வம் ப்ரீதிரூபாவேன பிம்பே அஸ்மின் ஸந்நிதிம் குரு||

– இப்படி ப்ராண ப்ரதிஷ்டை செய்து, புஷ்பம் அட்சதை, தீர்த்தம் விட்டு, பால் பழம் நிவேதித்து, வினாயகர் பூஜையைத் தொடங்கவும்.

1.ஷோடஸ உபசாரங்கள் செய்யவும். (16 வகை உபசாரங்கள்)

2.பிறகு அங்க பூஜை செய்யவும்.

முழுதாகச் செய்யாவிடினும், பிள்ளையார் பிம்பத்தின் பாதம் முதல் சிரசு வரை பூஜிப்பதாக பாவனை செய்து,

ஓம் ஸர்வமங்களாயை நம: ஸர்வாண் அங்காநி பூஜயாமி என்று சொல்லி புஷ்பம் அட்சதை ஸமர்ப்பிக்கவும்.

3. ஏகவிம்ஸதி ( 21 முறை) தூர்வாயுக்ம.. அதாவது அருகம்புல்லால் பூஜை செய்யவும்.

4.பின், நூற்றியெட்டு போற்றி அல்லது அஷ்டோத்ரசத நாமம் சொல்லி புஷ்பம் அர்ச்சனை செய்யவும். விநாயகர் அஷ்டோத்திரம் கொண்டு பூக்களை சமர்ப்பித்து அர்ச்சனை செய்யவும்..


ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்ர சத நாமாவளி

ஓம் விநாயகாய நம:
ஓம் விக்னராஜாய நம :
ஓம் கெளரீபுத்ராய நம :
ஓம் கணேஸ்வரா நம :
ஓம் ஸ்கந்தாக்ராஜாய நம : ll 5

ஓம் அவ்யாய நம :
ஓம் பூதாய நம :
ஓம் தக்ஷாய நம :
ஓம் அத்யக்ஷாய நம :
ஓம் த்விஜப்ரியாய நம : ll 10

ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம :
ஓம் இந்த்ரஸ்ரீப்ரதாய நம :
ஓம் வாணீப்ரதாய நம
ஓம் அவ்யாய நம :
ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம : ll 15

ஓம் ஸர்வதனயாய நம :
ஓம் ஸர்வரீப்ரியாய நம :
ஓம் ஸர்வாத்மகாய நம :
ஓம் ஸ்ருஷ்டிகர்த்ரே நம :
ஓம் தேவாய நம : ll 20

ஓம் அநேகார்ச்சிதாய நம :
ஓம் ஸிவாய நம :
ஓம் ஸுத்தாய நம :
ஓம் புத்திப்ரியாய நம :
ஓம் ஸாந்தாய நம : ll 25

ஓம் ப்ரஹ்மசாரிணே நம :
ஓம் கஜானனாய நம :
ஓம் த்வைமாத்ரேயாய நம :
ஓம் முனிஸ்துத்யாய நம :
ஓம் பக்தவிக்ன வினாஸனாய நம : ll 30

ஓம் ஏகதந்தாய நம :
ஓம் சதுர்பாஹவே நம :
ஓம் சதுராய நம :
ஓம் ஸக்திஸம்யுதாய நம :
ஓம் லம்போதராய நம : ll 35

ஓம் ஸூர்ப்பகர்ணாய நம :
ஓம் ஹரயே நம :
ஓம் ப்ரஹ்மவிதுத்தமாய நம :
ஓம் காலாய நம :
ஓம் க்ரஹபதயே நம : ll 40

ஓம் காமிநே நம:
ஓம் ஸோமஸூர்யாகநிலோசனாயநம :
ஓம் பாஸாங்குஸதராய நம :
ஓம் சண்டாய நம :
ஓம் குணாதீதாய நம : ll 45

ஓம் நிரஞ்ஜனாய நம :
ஓம் அகல்மஷாய நம :
ஓம் ஸ்வயம்ஸித்தாய நம :
ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம :
ஓம் பீஜபூரபலாஸக்தாய நம : ll 50

ஓம் வரதாய நம :
ஓம் ஸாஸ்வதாய நம :
ஓம் க்ருதிநே நம :
ஓம் த்விஜயப்ரியாய நம :
ஓம் வீத பயாய நம : ll 55

ஓம் கதிநே நம :
ஓம் சக்ரிணே நம :
ஓம் இக்ஷுசாபத்தே நம :
ஓம் ஸ்ரீதாய நம :
ஓம் அஜாய நம : ll 60

ஓம் உத்பலகராய நம :
ஓம் ஸ்ரீபதயே நம :
ஓம் ஸ்துதிஹர்ஷிதாய நம :
ஓம் குலாத்ரிபேத்ரே நம :
ஓம் ஜடிலாய நம : ll 65

ஓம் கலிகல்மஷநாஸநாய நம :
ஓம் சந்த்ரசூடாமணயே நம :
ஓம் காந்தாய நம :ஓம் பரஸ்மை நம :
ஓம் ஸ்தூலதுண்டாய நம :ll 70

ஓம் அக்ரண்யை நம :
ஓம் தீராய நம :
ஓம் வாகீஸாய நம :
ஓம் ஸித்திதாயகாய நம :
ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம :ll 75

ஓம் அவ்யக் தமூர்த்தயே நம :
ஓம் அத்புதமூர்த்திமதே நம :
ஓம் பாபஹாரிணே நம :
ஓம் ஸமாஹிதாய நம :
ஓம் ஆஸ்ரிதாய நம : ll 80

ஓம் ஸ்ரீகராய நம :
ஓம் ஸெளம்யாய நம :
ஓம் பக்தவாஞ்சிததாயகாய நம :
ஓம் ஸாந்தாய நம :
ஓம் கைவல்யஸுகதாய நம : ll 85

ஓம் ஸச்சி தானந்தவிக்ரஹாய நம :
ஓம் ஜ்ஞானினே நம :
ஓம் தயாயுதாய நம :
ஓம் தாந்தாய நம :
ஓம் ப்ரஹ்மத்வேஷிவிவர்ஜி தாய நம : ll 90

ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம
ஓம் ஸ்ரீகண்ட்டாய நம :
ஓம் விபுதேஸ்வராய நம :
ஓம் ரமார்சிதாய நம :
ஓம் விதயே நம : ll 95

ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதவதே நம :
ஓம் ஸ்தூலகண்ட்டாய நம :
ஓம் ஸ்வயம்கர்த்ரே நம :
ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம :
ஸைலேந்த்ர தனுஜோத் ஸங்க கேலனோத்ஸுகமானாஸாய நம: ll 100

ஓம் ஸ்வலாவண்ய ஸுதாஸாரா ஜித மன்மத விக்ரஹாய நம :
ஓம் ஸமஸ்தஜகதாதாராய நம :
ஓம் மாயினே நம :
ஓம் மூஷிகவாஹனாய நம :
ஓம் ஹருஷ்டாய நம : ll 105

ஓம் துஷ்டாய நம :
ஓம் ப்ரஸன்னாத்மனே நம :
ஓம் ஸர்வஸித்திரதாயகாய நம : ll 108

ஓம் நானாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி


பிறகு, சித்தி வினாயக அஷ்டோத்ர சத நாமாவளி சம்பூர்ணம் என்று சொல்லி..

5. பிறகு தூபம், தீபம், நைவேத்தியம், கற்பூர தீபாரதனை, செய்யவும்.

6..பிறகு மந்திர புஷ்பம், பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்து, பிரார்த்தனை செய்யவும்.

7. பாலில் ஜலம் கலந்து கொண்டு அர்க்யம் விடவும்.

8. மறுநாள் புனர்பூஜை செய்து பிள்ளையாரை கிணற்றில்/குளத்தில் சேர்க்கவும்.

அனைவருக்கும் விநாயகர் நல்லருள் புரியட்டும்!
ஜெய் விக்னேஸ்வரா!

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe