தென்னிந்தியாவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தசரதா ஆயுத பூஜை..

1771249 8th day pooja - 2026

தென்னிந்தியாவில் வேதபாராயண முறைப்படி கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஆயுத பூஜை, இந்த ஆன்மீக விழா முக்கியமாக கர்நாடகாவில் தசரதா பண்டிகை, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் ஆயுதபூஜை சரஸ்வதி பூஜை மஹாநவமி என கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு பண்டிகைகளையும் மக்கள் பாரம்பரியமாக கொண்டாடி வருகின்றனர்.  அந்த வகையில் தென்னிந்தியாவில் பரவலாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று தான் ஆயுத பூஜை, இது முக்கியமாக கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரளாவில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  நவராத்திரியின் ஒன்பதாம் நாளில் திருவிழா தசராவின் ஒரு பகுதியாகக் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு மகா நவமி அக்டோபர் 4-ம் தேதி வருகிறது, அதைத் தொடர்ந்து தசரா அக்டோபர் 5-ம் தேதி புதன்கிழமையன்று கொண்டாடப்படுகிறது.  இந்த தினத்தில் நம் தொழிலுக்கு பயன்படுத்தும் உபகரணங்கள், வாழ்க்கைக்கு தேவையான பொருட்கள் போன்ற அத்தியாவசியமான பொருட்களை வைத்து வணங்குவார்கள், இது சாஸ்திர பூஜை அல்லது அஸ்திர பூஜை என்றும் அழைக்கப்படுகிறது. 

இதுவரை நமக்கு உதவிய உயிரற்ற பொருட்களை போற்றும் விதமாகவும் அதற்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கொண்டாடப்படுவது தான் ஆயுதபூஜை.  பொதுவாக இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகள் பெரும்பாலும் நமக்கு நாள்தோறும் உதவும் உயிருள்ள அல்லது உயிரற்றவற்றை போற்ற வேண்டும் என்பதற்காகவே கொண்டாடப்படுகிறது.  நமக்கு போக்குவரத்து பயன்படும் வாகனங்களையும் இந்த தினத்தில் மக்கள் வழிபடுகின்றனர், வாகனங்களை கழுவி அதற்கு பூக்கள், சந்தனம், குங்குமம், மாலை போன்றவற்றை போட்டு அலங்கரிக்கின்றனர்.  அதேபோல வீடுகளை சுத்தம் செய்து மாவிலை தோரணங்கள் கட்டி, வீட்டின் கதவுகளுக்கு சந்தனம், குங்குமம் போன்றவற்றை வைத்து வீட்டை அலங்கரிக்கின்றனர்.  

சிலர் திருஷ்டி கழிக்கும் விதமாக வெள்ளைப் பூசணிக்காயை மஞ்சளால் அலங்கரித்து வாகனத்தின் முன் உடைத்து அனைத்து விதமான தோஷங்களையும் நீக்குகின்றனர்.  சிறிய ஊசி தொடங்கி கத்தி, அரிவாள், சமயலறை கருவிகள், கத்தரிக்கோல், ஸ்பேனர்கள், கணினி, வேறு இயந்திரங்கள், புத்தகங்கள் போன்ற அனைத்து வகையான கருவிகளையும் வைத்து வழிபடுகின்றனர். இந்த பண்டிகையை வடகிழக்கு மாநிலங்களில் மகா நவமி என்றும், ஒடிசாவில், அஸ்திர பூஜை என்றும் கொண்டாடுகின்றனர்.

images 38 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories