அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தாவுக்கு டிசம்பர் 16ல் திருபாவரணம் சார்த்தும் விழா, ஆராட்டு உற்சவம் டிசம்பர் 17முதல் ..

images 2022 12 13T062612.951 - 2026
images 2022 12 13T062434.705 - 2026

பிரசித்தி பெற்ற ஐயப்பனின் நடை வீடு கோயில்களில் ஒன்றான அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் ஆராட்டு உற்சவம் வரும் டிசம்பர் 17இல் துவங்குவதையொட்டி டிசம்பர் 16ல் திருபாவரணம் ஐயனுக்கு சார்த்தும் விழா நடைபெறும்.உற்சவத்தை யொட்டி வரும் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை நடைபெறுகிறது..

அச்சன்கோவில் ஸ்ரீதர்மசாஸ்தா திருக்கோவில் மண்டல மஹோற்ஷவ விழாவை முன்னிட்டு பத்து நாட்கள் ஆராட்டு திருவிழா மார்கழியில் நடைபெறுகிறது.. முதல் நாள் 16-12-22 வெள்ளிக்கிழமை அன்று திருஆபரணபெட்டி ஊர்வலம். 17-12-22 சனிக்கிழமை 1ம் திருவிழா அன்று திருகொடியேற்றம். தொடர்ந்து 2,3,4,5 ம் நாள் திருவிழாக்களில் உற்ஷவபலி பூஜை. 7,8 ம் நாள் திருவிழாக்களில் கருப்பன் துள்ளல். 9 ம் திருவிழா அன்று தேரோட்டம். 10 ம் திருவிழா அன்று சுவாமிக்கு ஆராட்டு திருவிழா நடைபெறும். மறுநாள் 27-12-22 அன்று மண்டல பூஜை. இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விஷேசத்துடன் 12 நாட்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் மாலை பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

அச்சன்கோயில் மார்கழி ஆராட்டு உற்சவத்தில் முக்கிய விழாவாக ஒன்பதாம் திருவிழாவில் தேரோட்டம் நடைபெறும்.கேரளாவில் இரு கோயில்களில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.பாலக்காடு கல்பாத்தி விஸ்வநாதர் கோயில், அச்சன்கோவில் தர்மசாஸ்தா கோயிலில் மட்டுமே ரதோற்சவம் நடைபெறும்.

அச்சன்கோயில் மற்றொரு சிறப்பு சபரிமலை போல் இங்கும் சொர்ண கொடிமரத்தில் கொடியேற்றி பத்துநாள் ஆராட்டு உற்சவம் நடைபெறும்.கடைசி இருநாட்களில் பள்ளி வேட்டை ஆராட்டு நடைபெறும்.

images 2022 12 13T062637.518 - 2026

அச்சன்கோயில் மற்றொரு முக்கிய சிறப்பு சபரிமலை ஐயப்பனுக்கு தங்க திருபாவரணங்கள் உள்ளது போல் அச்சன்கோவில் அரசனுக்கு தங்க திருபாவரணங்கள் எடையே சரியான அளவில் பார்க்க முடியாத தங்கவாள் மந்திரி கருப்பசாமிக்கு வெள்ளி திருபாவரணங்கள் உள்ளது சிறப்பம்சமாகும்.

உற்சவத்தில் டிசம்பர் 18,19,20,21 தேதிகளில் உற்ஷவபலி பூஜை தந்திரி தலைமையில் நடைபெறும். அன்று காலை 10 மணி அளவில் ( பக்தர்கள் கூட்டத்தை பொறுத்து 10 இருந்து 11 மணிக்குள் ) விளக்கு வைத்தல் எனும் சுவாமி புறப்பாடு நடைபெறும். பக்தர்கள் வெளிபிரகாரத்தில் நிறுத்தப்பட்டு நடை அடைக்கபடும். மேல்சாந்தி ஸ்ரீகோவிலில் இருந்து உற்ஷவ மூர்த்தி விக்ரகத்தை விளக்குடன் வெளியே எடுத்து வந்து உள்பிரகாரத்தில் அதற்கன அமைக்கபட்ட சப்பரத்தில் சுவாமியை எழுந்தருள செய்வார்கள். அப்போது உள்பிரகாரத்தில் கோவில் பணியாளர்கள் உற்ஷவபலி பூஜை கட்டளைதாரர்கள் மற்றும் மிக முக்கியஸ்தர்கள் மட்டுமே அனுமதிக்கபடுவார்கள். பின் மரபாணி கொட்டி எல்லா உப தெய்வங்களையும் அழைத்து சுவாமி முன்னிலையில் அனைத்து தெய்வங்களுக்கும் பலி எனும் நைவேத்தியம் படைக்கபடும். மடபள்ளியில் பாகம் செய்யபட்ட அரிசி சாதத்தினால் படைத்து கொண்டே இருப்பார்கள்.. பின் தாந்தரிகம் மூலம் கேட்டு கேட்டு போதும் என்று வரும் வரை மீண்டும் மீண்டும் வைத்து கொண்டே இருப்பார்கள்.. இது சுமார் இரண்டு மணி நேரம் வரை தொடரும். பின் எல்லா தெய்வங்களுக்கும் படைத்து முடிந்ததும் வெளிபிரகாரத்தில் இருக்கும் பக்தர்களை உள்ளே அனுமதித்து.. சுவாமிக்கு தீபாரதணை நடைபெறும். பின் இதே போல் வெளிபிரகாரத்தில் உள்ள உப தெய்வங்களுக்கு இதே போல் படைக்கபடும்.. தொடர்ந்து 3 மணி வரை 16 சுற்றுக்கள் வெளிபிரகாரத்தில் சுற்றி வந்து படைக்கபட்டு கடைசியாக மூன்று சுற்று ஓடி தூவி படைத்து.. உற்ஷவபலி பூஜையை நிறைவு செய்து ஸ்ரீகோவில் நடை திறந்து சுவாமியை உள்ளே வைத்து நிறைவு செய்வார்கள்.

இந்த பூஜை மிகவும் விஷேசமான பூஜை ஆகும். இந்த பூஜை சபரிமலையிலும் அச்சன்கோவிலிலும் தான் நடைபெறுகிறது. இந்த பூஜையை செய்வதும், இந்த பூஜையில் கலந்து கொள்வதும், இந்த பூஜையை பார்ப்பதும் மிகவும் சிறப்பானது. ஏனென்றால் அந்த ஒரே நாளில் அந்த ஒரே பூஜையில் ஐயப்பன் உட்பட அனைத்து தெய்வங்களையும் அழைத்து நைவேத்தியம் படைத்து சிறப்பு பூஜை செய்வதால் எல்லா தெய்வங்களுக்கும் எல்லாம் படைத்து எல்லா பூஜைகளும் செய்ததாக ஐதீகம் நிலவுகிறது.

FB IMG 1670888938558 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories