திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் ஜல்லிக்கட்டில் துள்ளிய காளைகள்..

jallikattu - 2026

திருச்சி விராலிமலை அருகேயுள்ள திருநல்லூர் முத்து மாரியம்மன் கோயில் தைத் திருவிழாவை முன்னிட்டு  ஜல்லிக்கட்டு போட்டி இன்று  நடைபெற்று வருகின்றது.
ஆவேசம் குறையாத காளைகளை அவிழ்த்து விட்டு அவற்றை அடக்கும் காளையர்களின் வீரத்தை காண்பதற்கு பல்லாயிரக்கணக்கானோர்  திரண்டுள்ளனர். இப்போட்டியில் 600 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டி துவங்கியதும் முதலில் கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டு பிடிப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

அதனைத் தொடர்ந்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், கரூர், மதுரை,தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகளை கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர்கள் தலைமையில் 9 கால்நடை உதவி மருத்துவர்கள், 15 உதவியாளர்கள் தீவிர பரிசோதனை செய்த பின்னரே காளைகள் வாடிவாசலுக்கு அனுப்பப்பட்டு ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

இங்கு நடைபெறும் போட்டியில் மாடுபிடி வீரர்களுக்கோ, சிறந்த காளைகளுக்கோ எந்தவிதமான பரிசுகளும் வழங்கப்படுவதில்லை, இருப்பினும் காளை வளர்ப்பவர்கள் பெரும்பாலானோர் திருநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் தங்கள் காளைகளை அவிழ்த்த பின்பு தான் மற்ற வாடி வாசல்களில் அவிழ்ப்பதை காலம் காலமாக இன்று வரை கடைபிடித்து வரும் நடைமுறையாகும் என்பது திருநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியின் தனி சிறப்பாகும்.

முன்னதாக பாதுகாப்பு ஏற்பாடுகளில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விலங்கு நலவாரிய அலுவலர் அயுப்கான் நேற்று திடலை ஆய்வு மேற்கொண்டு, போட்டி நடத்தப்படும் முறைகள் குறித்து கேட்டறிந்து, போட்டி முடியும் வரை அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்த வேண்டும் என்று நிர்வாக கமிட்டியினருக்கு அறிவுறுத்தினார்.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கு பெறும் இப்போட்டியின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏடிஎஸ்பி, டிஎஸ்பி தலைமையில் 300 க்கும் மேற்பட்ட காவல் துறையினர், ஊர்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories