December 5, 2025, 1:36 PM
26.9 C
Chennai

பங்குனி உத்திரம் – சிறப்புகள்!

nellaiappar sengol vizha - 2025
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில் பங்குனி உத்திரம் விழாவை முன்னிட்டு செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது

பங்குனி உத்திரம் சிறப்புகள்

பங்குனி உத்திரம் என்பது தமிழ் மாதமான பங்குனியில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று கொண்டாடப்படும் ஒரு முக்கியமான திருவிழா. இது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களிலும் நாடெங்கிலும் பெருவாரியாக கொண்டாடப்படுகிறது. இந்த பங்குனி உத்திரம் திருநாள் புராணங்கள் மற்றும் சமயச் சடங்குகளுடன் இணைந்தது.

பங்குனி உத்திரம் – திருமணத்தின் நாள்

    இந்நாளில் தெய்வீக தம்பதியரான சிவன் – பார்வதி (காளத்தீஸ்வரர் கோவிலில்), முருகன் – தெய்வானை (பழனி, திருச்செங்கோடு போன்ற முருகன் கோவில்களில்), ராமர் – சீதை (ராமேஸ்வரம், பாண்டிச்சேரி போன்ற இடங்களில்) ஆகியோரின் திருமணம் கொண்டாடப்படுகிறது. இது “தெய்வீக திருமணங்களின் நாள்” என்றும் அழைக்கப்படுகிறது.

    உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு

    உத்திர நட்சத்திரம் வெற்றி மற்றும் மங்களகரமான முடிவுகள் தருவதாக நம்பப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் உத்திர நட்சத்திரத்திலும் இருக்கும் ஒரு அரிய நேரம்.

    பங்குனி உத்திர திருவிழாக்கள்

    பல கோவில்களில் தேரோட்டம், பூமாலை அலங்காரம், மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். பழனி, திருமலை திருப்பதி, மதுரை மீனாட்சி கோவில் உள்ளிட்ட ஆலயங்கள் முக்கியமானவை.

    திருமணக் கதைகள்

    முருகன் – தெய்வானை திருமணம்

    புராணப்படி, முருகன் தெய்வானையை பங்குனி உத்திரத்தன்று மணந்தார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருச்செங்கோடு, பழனி போன்ற முருகன் கோவில்களில் விழா கொண்டாடப்படுகிறது.

    ராமர் மற்றும் சீதையின் திருமணம்

    இராமாயணத்தின்படி, ராமர் – சீதையின் திருமணம் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரத்தன்று நடந்ததாகக் கூறப்படுகிறது.

    சிவன் – பார்வதி திருமணம்

    சிவபெருமான் பார்வதியை மணந்த நாளாகவும் இது கருதப்படுகிறது.

    சாஸ்தா / குலதெய்வ வழிபாடு

    தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் பங்குனி உத்திர விழா மிகவும் பிரசித்தி பெற்றதாக இருக்கும்.  குலதெய்வம் மற்றும் குல சாஸ்தா திருக்கோவிலை வழிபடும் நாளாக இந்தப் பங்குனி உத்திர திருநாள் கொண்டாடப்படுகிறது.

    அன்று திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தில் இருக்கும் பல சாஸ்தா கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் என ஒரு குல தெய்வம் மற்றும் குல சாஸ்தா இருக்கும். சில குடும்பத்தில் சாஸ்தா மற்றும் குலதெய்வம் ஒன்றாக இருக்கும், சில குடும்பத்தில் குல தெய்வம் என்பது தனியாகவும், குல சாஸ்தா என்பது தனியாகவும்  இருக்கும். 

    அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள புகழ்வாய்ந்த சாஸ்தா கோவிலான கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு பங்குனி உத்திரத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் பல பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டுள்ளார்கள்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றான திருச்செந்தூருக்குத் தென்மேற்கே காயாமொழி அருகில் குதிரைமொழி கிராமம் தேரிக் குடியிருப்பை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இந்த கற்குவேல் அய்யனார் கோவில் அமைந்துள்ளது. திருச்செந்தூருக்கு அருகிலேயே அமைந்துள்ளதால், திருச்செந்தூருக்கு வரும் ஏராளமான மக்கள் இங்கு வந்து தரிசனம் செய்கிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் அருச்சுனை காத்த அய்யனார், கற்குவேல் அய்யனார், புலுடையார் சாஸ்தா, இல்லங்குடி சாஸ்தா மற்றும் நெல்லை மாவட்டத்தில் கோபாலசமுத்திரம் பசுங்கிளி சாஸ்தா கோவில், சேரன்மாதேவி செங்கொடி சாஸ்தா, நெல்லை சந்திப்பு மேகலிங்கசாஸ்தா, பூதத்தான் குடியிருப்பு பொன்பெருமாள் சாஸ்தா, கல்லிடைக்குறிச்சி மலையன்குளம் பாடக மகாலிங்க சாஸ்தா, பிராஞ்சேரி வீரியபெருமாள் கரையடி மாடசாமி சாஸ்தா, நெல்லை டவுன் முருங்கையடி சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா, வள்ளியூர் அருகே பூசாஸ்தா கோவில், தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி கைக்கொண்டார்சாஸ்தா, கடையம் சூட்சமடையார் சாஸ்தா, பாப்பான்குளம் பூசண பெருமாள் சாஸ்தா கோவில் உள்ளிட்ட ஏராளமான சாஸ்தா, அய்யனார் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    Leave a Reply

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Hot this week

    பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

    ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

    மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

    நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

    Topics

    பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

    ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

    மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

    திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

    திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

    திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

    நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

    பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

    இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

    ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

    ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

    நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

    சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

    Entertainment News

    Popular Categories