275 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்; திருவனந்த புரத்தில் ஏற்பாடுகள் தீவிரம்!

thiruvananthapuram ananthapadmanabhaswamy temple - 2026

275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் காணும் திருவனந்தபுரம் அனந்த பத்மநாப சுவாமி கோவில் விழா ஏற்பாடுகள் தீவிரம்…

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய யாகசாலை பூஜை சடங்குகள் ஜூன் 2முதல் துவங்கி நடந்து வருகிறது.

275 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம்.. பத்மநாப சுவாமி கோவிலில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

கேரள மாநிலத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவில். மகா விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள். இந்த கோவிலில் 275 ஆண்டுகளுக்கு பிறகு மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன.

இது குறித்து பத்மநாபசுவாமி கோவிலின் மேலாளர் ஸ்ரீகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது,

கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழுவின் அறிவுறுத்தலின்படி கோவிலின் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், கடந்த 2021-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கி நடந்து வந்த நிலையில், தற்போது நிறைவு பெற்றிருக்கிறது. இதனால் பத்மநாபசுவாமி கோவிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 8-ந்தேதி நடத்தப்படுகிறது.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள கோபுரத்தில் மூன்று புதிய கலசங்கள், சன்னதியின் முன்புள்ள ஒற்றைக்கல் மண்டபத்தின் மேல் கோபுரத்தில் இருக்கும் கலசம் என 4 கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்துக்கு முந்தைய பாரம்பரிய சடங்குகள் வரும் நாட்களில் நடைபெறும். பத்மநாப சுவாமி கோவில் வளாகம் பல நூற்றாண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகெங்கிலும் உள்ள பத்மநாபசுவாமி பக்தர்களுக்கு கும்பாபிஷேக சடங்குகளை காணும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. கோவிலின் மரபுகளை பின்பற்றி புனித நிகழ்ச்சிகள் நடைபெறுவதை உறுதி செய்ய கோவில் நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

1750-ம் ஆண்டு மார்த்தாண்டவர்மா மகாராஜா ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலை புதுப்பித்து மகாகும்பாபிஷேகம் நடத்தினார். அதன்பிறகு 275 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 8-ம் தேதி ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகாகும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கடந்த 2-ம் தேதி முதல் சுத்தி பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜூன் 8-ம் தேதி காலை 7.45 மணிக்கு கும்பாபிஷேக விழாவுக்கான பூஜைகள் தொடங்கும். அதைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

275 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெறுவது உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories