புதுகை திருவரங்குளம் கோயிலில் பிரதோஷம் : பக்தர்கள் பரவசம்

thiruvarankulam-temple
புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு அபிஷேகம் நடைபெற்ற போது… படம்: ஜெயச்சந்திரன்
  புதுக்கோட்டை: செய்தி: ஜெயச்சந்திரன் புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீ அரங்குளநாதர் பெரியநாயகிஅம்பாள் கோயிலில் பிரதோஷ விழா ஏப்-16 புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஅரங்குளநாதர் பெரியநாயகி அம்பாள் கோயிலில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக வியாழக்கிழமை நடைபெற்றது விழாவை முன்னிட்டு நந்தி பகவானுக்கு மஞ்சள் சந்தனம் பால் தயிர் இளநீர் போன்ற 18 வகையான அபிஷேகம் செய்யப்பட்டன தொடர்ச்சியாக பக்தர்கள் சாமியை தோள்களில் தூக்கி உள்வீதி உலா வந்;தனர் அதன்பிறகு சிவாச்சாரியார்கள் தேவாரங்கள் பாடி மஹா தீபஆராதனை காட்டப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வல்லநாடு வாண்டாக்கோட்டை வேங்கிடக்குளம் மேட்டுப்பட்டி திருக்கட்டளை பெரிநாயகிபுரம் போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொது மக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்